இனி குழப்பம் இல்லை.. ஆதார் கார்டு நம்பர் வைத்தே Google Pay-வில் இதை செய்யலாம்! வாங்க..
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை.
அதேபோல் சமீபத்தில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வழியாக ஆதாரைப் பயன்படுத்திப் பதிவு செய்வதற்கான வசதியைக் கூகுள் பே (Google Pay) அறிமுகப்படுத்தியது. குறிப்பாக இதன் மூலம் ஆதார் அடிப்படையிலான UPI மூலம் Google Pay பயனர்கள் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின் நம்பரை உருவாக்க முடியும். இந்த வசதியின் மூலம் இன்னும் பல மக்களுக்கு UPI ஐடிகளை உருவாக்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும்.

ஆனால் இந்த புதிய வசதியானது ஒரு சில வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இன்னும் நிறைய வங்கிகள் சேர்க்கப்படுவதற்கான வேலை நடைபெற்றுவருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் சார்ந்த UPI முறையை அமைப்பது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.
வழிமுறை-1:முதலில் ஆதார் சார்ந்த UPI முறையை அமைப்பதற்கு முன்பு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும், உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்றுதானா என்பதைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக உங்களது ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து உங்களது போனில் இருக்கும் கூகுள் பே செயலியை திறந்து அதில் Add account என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கியை தேர்வு செய்து next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அதன்பின்பு உங்கள் மொபைல் எண் மற்றும் பேங்க் அக்கவுண்ட் ஆகிய இரண்டையும் வெரிஃபை செய்ய ஆதார் மோடை தேர்வு செய்யவும். பின்னர் உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணின் முதல் ஆறு டிஜிட்களை என்டர் செய்யவும். அடுத்து உங்கள் டிரான்சாக்ஷன்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு 4 அல்லது 6 டிஜிட் UPI PIN நம்பரை அமைக்கவும்.

வழிமுறை-4: இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உங்கள் வங்கி ஒரு வெரிஃபிகேஷன் OTP அனுப்பும். அதன்பின்பு உங்களுக்கு விரும்பமான UPI PIN நம்பரை அமைத்து, மீண்டும் ஒருமுறை கன்ஃபார்ம் செய்யவும். அவ்வளவுதான் இனி எளிமையாக பணம் அனுப்பலாம்.
அதேபோல் கூகுள் எந்த ஒரு வடிவிலும் ஆதார் எண்ணை சேமிக்காது என்றும், NPCI-யிடத்தில் அதனை வழங்குவதற்கான ஒரு மீடியமாகவே செயல்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதார் சார்ந்த UPI முறையானது யூசர் தளத்தை விரிவுபடுத்தி, டிஜிட்டல் பேமெண்ட்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








