வோடபோனில் சர்வதேச ரோமிங் சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?

|

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பல சேவைகளையும் நன்மைகளையும் தற்பொழுது வழங்கி வருகிறது. பயனர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு உதவும் சேவைகளில் ஒன்று சர்வதேச ரோமிங் சேவையாகும். இந்த சர்வதேச ரோமிங் சேவையை எப்படி உங்கள் போனில் ஆக்டிவேட் செய்வது என்று தெரியுமா? தெரியாவிட்டால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

வோடபோன் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு

வோடபோன் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு

வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் பயனர்கள் கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி எளிமையாக உங்கள் மொபைல் எண்ணிற்கு சர்வதேச ரோமிங் சேவையை சில நொடிகளில் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். முக்கிய குறிப்பு பயனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பே ரோமிங் சேவையை செயல்படுத்தியிருந்தால், ரூ. 99 என்ற சர்வதேச ரோமிங் சேவை கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.

வோடபோன் ப்ரீபெய்ட் நெட்வொர்க்கில் சர்வதேச ரோமிங் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது?

வோடபோன் ப்ரீபெய்ட் நெட்வொர்க்கில் சர்வதேச ரோமிங் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது?

 • வோடபோனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு சர்வதேச ரோமிங் டேபை கிளிக் செய்யுங்கள்.
 • உங்கள் ப்ரீபெய்ட் கணக்கு எண்ணை உள்ளிட்டு, நீங்கள் பயணிக்க விரும்பும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மலிவு விலையில் ரெடி ஆகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?மலிவு விலையில் ரெடி ஆகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?

ட்ராவல் பேக்கை தேர்ந்தெடுக்கவும்

ட்ராவல் பேக்கை தேர்ந்தெடுக்கவும்

 • நீங்கள் பயணிக்க விரும்பும் சரியான இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், ட்ராவல் பேக்கை தேர்ந்தெடுக்கவும்.
 • இப்போது ஆக்டிவேட் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.
 • உங்கள் எண்ணில் சர்வதேச ரோமிங் சேவைகளைச் செயல்படுத்தக் கட்டணத்தைச் செலுத்தவும்.
முக்கிய குறிப்பு: இதை செய்தால் கட்டணம் இல்லை

முக்கிய குறிப்பு: இதை செய்தால் கட்டணம் இல்லை

வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் கட்டணமில்லா எண் 144-க்கு SMS- ACT IT என்று அனுப்பலாம். இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள், எஸ்எம்எஸ், ஜிபிஆர்எஸ் போன்ற பல்வேறு டெல்கோ சேவைகளைப் பயன்படுத்த வோடபோன் அடுத்த 28 நாட்களுக்கு ரூ.99 கட்டணத்தை வசூலிக்கிறது. ப்ரீபெய்ட் பயனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரோமிங் சேவைகளைச் செயல்படுத்தியிருந்தால், இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

நம்பமுடியாத நன்மைகளுடன் வரும் Vi நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..நம்பமுடியாத நன்மைகளுடன் வரும் Vi நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..

வோடபோன் போஸ்ட்பெய்ட் நெட்வொர்க்கில் சர்வதேச ரோமிங் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது?

வோடபோன் போஸ்ட்பெய்ட் நெட்வொர்க்கில் சர்வதேச ரோமிங் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது?

 • போஸ்ட்பெய்ட் நெட்வொர்க்கில் சர்வதேச ரோமிங் சேவையைச் செயல்படுத்த MyVodafone ஆப்ஸை ஓபன் செய்யுங்கள்.
 • சர்வதேச ரோமிங் பிரிவில் கிளிக் செய்யுங்கள்.
 • போஸ்ட்பெய்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
டயல் செய்தும் வேலையை சுலபமாக முடிக்கலாம்

டயல் செய்தும் வேலையை சுலபமாக முடிக்கலாம்

 • பயண இலக்கைத் தேர்ந்தெடுத்து, ட்ராவல் பேக்கை தேர்வு செய்யவும்.
 • இப்போது ஆக்டிவேட் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.
 • உங்கள் எண்ணில் சர்வதேச ரோமிங் சேவைகளைச் செயல்படுத்த கட்டணத்தைச் செலுத்தவும்.
 • சர்வதேச ரோமிங் சேவையைச் செயல்படுத்த நீங்கள் 199 க்கு டயல் செய்தும் வேலையை சுலபமாக முடிக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Activate International Roaming Service on Vodafone Prepaid and Postpaid Network : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X