Just In
- 37 min ago
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- 1 hr ago
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- 2 hrs ago
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
- 2 hrs ago
பூமியின் மையப்பகுதி கூல் ஆகிறதா? இது ஆபத்தா? பூமியை அழிக்கக்கூடியதா? விஞ்ஞானிகள் விளக்கம்.!
Don't Miss
- News
"கலங்கிய குட்டை".. மீன் யாருக்கு.. 25 எம்எல்ஏக்கள் வேற.. இடைத்தேர்தலில் சசிகலா?.. பிளான் இதுதானாமே
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Movies
ஆடிஷனின் போது மார்பை பெரியதாக்க சொன்னார்கள்.. வேதனையை பகிர்ந்த சூர்யா பட நடிகை!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்கள் போனில் ஒரே நேரத்தில் எப்படி 2 WhatsApp பயன்படுத்துவது? உடனே செட்டிங்ஸ் போங்க.!
இப்போது நமக்கு வாங்க கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சாதனங்களில் டூயல் சிம் அம்சம் இருக்கிறது. இதனாலேயே என்னவோ, நம்மில் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரே போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். இன்றைய காலக் கட்டத்தில், சிங்கிள் சிம் பயனர்களைப் பார்ப்பதென்பதே மிகவும் அபூர்வமான விஷயமாக இருக்கிறது.

2 சிம் கார்டு வைத்திருந்தும் 1 வாட்ஸ்அப் மட்டும் தான் யூஸ் செய்ய முடிகிறதா?
என்னதான் நம்மிடம் 2 சிம் கார்டுகள் இருந்தாலும், ஒரு ஸ்மார்ட்போனில் 1 வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கை மட்டும் தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப் இன் விதி தான். ஒரு மொபைல் எண்ணிற்கு ஒரு WhatsApp கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் பின்பற்றப்படுகிறது.

டூயல் சிம் போன் வைத்துள்ளவர்களுக்கு இது அர்த்தமற்றதாகிறதல்லவா?
உங்களால், மற்றொரு சிம் நம்பரை ஒரே நேரத்தில், ஒரே ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் நிறுவனம் இதை ஒரு போதும் அனுமதிக்காது. 2 சிம் கார்டுகள் இருக்கும் போன்களில் 1 வாட்ஸ்அப் கணக்கை மட்டும் பயன்படுத்துவது எப்படி நியாயமாகும். டூயல் சிம் போன் வைத்துள்ளவர்களுக்கு இது அர்த்தமற்றதாகிறதல்லவா?

ஒரே போனில் 2 வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியுமா?
இதனை உணர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், உங்களுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், உங்களுடைய ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் நம்பர் கணக்குகளை உருவாக்கி, ஒரே போனில் 2 வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளை உங்களால் இயக்க முடியும். இந்த டிரிக்கை ஆக்டிவேட் செய்ய உங்கள் போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.

உங்களிடம் என்ன போன் இருக்கிறது?
உங்களிடம் சியோமி (Xiaomi), சாம்சங் (Samsung), விவோ (Vivo), ஒப்போ (Oppo), ஹுவாய் (Huawei), ஹானர் (Honor), ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ரியல்மி (Realme) என்று எந்த ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்தாலும் சரி, உங்கள் போனிலும் இரண்டு வாட்ஸ்அப் கணக்கை உங்களால் பயன்படுத்த முடியும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் செட்டிங்ஸ் இல் இந்த வார்த்தைகளை தேடுங்கள்.!
உங்கள் போனில் 2 வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த உங்கள் போனில் டூயல் ஆப்ஸ், ஆப் குளோன், ஆப் ட்வின் அல்லது பேரலல் ஆப்ஸ் போன்ற வார்த்தைகளை செட்டிங்ஸ் மெனுவில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்ஷனின் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறுபடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த விருப்பத்தை பயன்படுத்தி எப்படி 2 வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம் என்று பார்க்கலாம்.

Xiaomi மற்றும் Samsung பயனர்கள் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள்
சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன் பயனர்கள் உங்கள் போனின் Settings > Apps > Dual apps கிளிக் செய்து, அதிலிருந்து WhatsApp என்பதை கிளிக் செய்யுங்கள்.
சாம்சங் (Samsung) ஸ்மாரட்போன் பயனர்கள் Settings > Advance features > Dual Messenger கிளிக் செய்து, அதிலிருந்து WhatsApp என்பதை தேர்வு செய்யுங்கள்.

Vivo மற்றும் Oppo பயனர்கள் மாற்ற வேண்டிய செட்டிங்ஸ் இது தான்.!
விவோ (Vivo) பயனர்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் Settings > Apps and notifications > App Clone என்று கிளிக் செய்ய வேண்டும். அதிலிருந்து WhatsApp என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன் பயனர்கள் Settings > App Cloner கிளிக் செய்து, WhatsApp என்பதை கிளிக் செய்யுங்கள்.

OnePlus, Huawei மற்றும் Honor பயனர்கள் செய்ய வேண்டிய விஷயம் இது தான்
ஹுவாய் (Huawei) ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் (Honor) ஸ்மார்ட்போன் பயனர்கள் Settings > Apps > App twin கிளிக் செய்து உங்களுடைய 2 ஆம் வாட்ஸ்அப்பை ஆக்டிவேட் செய்யலாம்.
ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் யூசர்ஸ் Settings > Utilities > Parallel Apps என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

Realme ஸ்மார்ட்போன் பயனர்கள் செய்ய வேண்டிய செட்டிங்ஸ்
ரியல்மி (Realme) போனில் Settings > App management > App cloner ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அங்கு நீங்கள் க்ளோன் செய்ய வேண்டிய ஆப்ஸ் ஆக வாட்ஸ்அப்பை செலக்ட் செய்ய வேண்டும்.

உங்கள் போனில் டூயல் வாட்ஸ்அப் என்ன அடையாளத்துடன் காண்பிக்கப்படும்?
இப்போது உங்கள் ஸ்மாரட்போனின் மெயின் மெனு அல்லது ஹோம் ஸ்கிரீனில் ஒரு சிறிய அடையாளத்துடன் இரண்டாவது க்ளோன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஐகானை உங்களால் பார்க்க முடியும். இது தான் உங்களுடைய இரண்டாவது வாட்ஸ்அப் ஆக செயல்படப் போகிறது. இனி வழக்கம் போல புது வாட்ஸ்அப் கணக்கை நீங்கள் ஓபன் செய்யலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470