WhatsApp ட்ரிக்ஸ்- ரிப்ளை மெசேஜ் அதுவா போகும்.. மொபைலை தொடவே வேணாம்..

|

சம்பளம் வருவதும் தெரியல போவதும் தெரியல., ஒரு வருமானம் மட்டும் போதாது., நிறைய உழைக்க வேண்டும்., பார்ட் டைம் வேலை பார்க்க வேண்டும்., வாழ்க்கையில் முன்னேற வேண்டும்., ஏதாவது ஒன்றை தனித்து சாதிக்க வேண்டும்., என்று பல எண்ண ஓட்டங்கள் தோன்றி கொண்டிருக்கும் போது ஒரு போன் வரும்.

வாட்ஸ்அப் இல் மெசேஜ் அனுப்பினால் கூட ரிப்ளை இல்ல., அதுக்குக் கூட டைம் இல்ல உங்களுக்கு என மறுபுறம் இருக்கும் நபர் கூறுவார். இந்த நிகழ்வை பலரும் சந்தித்திருப்போம்.

ஒதுங்கி இருக்க வாய்ப்பு இல்ல..

ஒதுங்கி இருக்க வாய்ப்பு இல்ல..

சரி, முதலில் இது என்னவென்று பார்க்கலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏதேனும் ஒன்றை ஓபன் செய்தால் பிறகு நேரம் போவதே தெரியாது. அடுத்த நாள் காலை வேலைக்கு செல்லவே தாமதமாக தான் விழிப்போம்.

காரணம் சமூகவலைதளங்களில் உள்ள சுவாரஸ்ய விஷயங்கள். சரி, இதில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றால் அதுவும் முடியாது.

இந்த காலக்கட்டத்தில் சமூகவலைதளங்கள் என்பது பிரதான பயன்பாடாக இருக்கிறது. நாட்டு நடப்பில் தொடங்கி, குடும்ப விஷயங்கள் வரை அனைத்தும் வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாக தான் தெரிந்துக் கொள்கிறோம்.

இருப்பினும் சமூகவலைதளங்களில் ஒருசில ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி அதில் செலவழிக்கும் நேரத்தை குறைக்கலாம்.

பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப்

பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப்

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து பல்வேறு அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.இது அனைத்தும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் உள்ளது.

இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 400 மில்லியனுக்கும் அதிகம் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த அம்சம் உங்களுக்குதான்..

இந்த அம்சம் உங்களுக்குதான்..

மேலும் வாட்ஸ்அப் தளம் என்பது பெரும்பாலானோரின் பணிகளுடன் தொடர்புடைய விஷயமாகவும் இருக்கிறது.

நாள் முழுவதும் பிஸியாக இருக்கும் நபராகவோ அல்லது உங்கள் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப நினைக்கும் நபராகவோ நீங்கள் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கான அம்சம் ஒன்று வாட்ஸ்அப்பில் இருக்கிறது.

ஆம், அது தானாக ரிப்ளை அனுப்ப வைக்கும் அம்சமாகும்.

தானாகவே ரிப்ளை அனுப்பச் செய்யும் அம்சம்

தானாகவே ரிப்ளை அனுப்பச் செய்யும் அம்சம்

WhatsApp தளத்தில் தானாக பதிலளிக்கச் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் பிஸியாக இருக்கும் போது உங்களுக்கு யாராவது ஹாய் என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் தானாகவே ரிப்ளை அனுப்பச் செய்யும் அம்சம் ஒன்று இருக்கிறது.

இந்த அம்சத்தை இயக்கும்பட்சத்தில் நீங்கள் உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறக்காமலயே, ஏன் மொபைலை தொடாமலேயே குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு பதிலளிக்க வைக்க முடியும்.

மூன்றாம் தரப்பு பயன்பாடு தேவை

மூன்றாம் தரப்பு பயன்பாடு தேவை

WhatsApp பயன்பாட்டின் மூலம் நேரடியாக இந்த அம்சத்தை அணுக முடியாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த அம்சத்தை அணுக மூன்றாம் தரப்பு பயன்பாடு தேவைப்படும்.

வாட்ஸ்அப்பில் தானாக பதிலளிக்கச் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் தானாக பதிலளிக்கச் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: ப்ளே ஸ்டோரை ஓபன் செய்து இதில் WhatsAuto என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 2: இன்ஸ்டால் செய்த உடன் பயன்பாட்டை ஓபன் செய்து கொள்ளவும். இதில் அனுமதி (permissions) அமைப்புகள் கேட்கப்படும். முழுமையாக படித்துவிட்டு பூர்த்தி செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 3: பின் Home பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 4: இதில் Auto reply OFF பட்டன் காட்டப்படும். அதை ஆன் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 5: இப்போது Auto reply text தேர்வுக்கு அருகில் பென்சில் போன்ற ஐகான் காட்டப்படும் இதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 6: இறுதியாக, உங்களுக்கு தானாக எந்த மெசேஜ் அனுப்பப்பட வேண்டுமோ அதை டைப் செய்து சேவ் செய்து கொள்ளவும்.

உங்களுக்கு ஏதுவான வார்த்தைகள்..

உங்களுக்கு ஏதுவான வார்த்தைகள்..

உங்களுக்கு எந்த மெசேஜ் அனுப்பப்பட வேண்டுமோ அதை டைப் செய்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, I am busy, Text you later, Can't talk now போன்ற எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும் டைப் செய்து கொள்ளலாம்.

விருப்பம் உங்களுடையது..

விருப்பம் உங்களுடையது..

அவ்வளவு தான். இனி உங்களுக்கு யாராவது மெசேஜ் அனுப்பினால். இந்த ஆப்ஸ் தானாக அவர்களுக்கு மெசேஜ் செய்யும்.

நீங்கள் என்ன வார்த்தைகள் டைப் செய்து சேமித்து வைத்துள்ளீர்களோ அது ஆட்டோமேட்டிக் மெசேஜ் ஆக அனுப்பப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு முறையும் நீங்கள் பயன்பாட்டை ஓபன் செய்து பதிலளிக்க வேண்டிய தேவை இருக்காது.

இதில் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் விருப்பத்தின்படி இந்த பயன்பாட்டை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Activate Auto Reply Mode in Whatsapp? Can Send Message Without Touching Mobile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X