குறைந்த ஒளியில் சிறந்த போட்டோவை ஃபோனில் எடுக்க வேண்டுமா?

ஸ்மார்ட்போன்களில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டு நீண்டகாலம் கடந்துவிட்டது. இப்போது வெளியாகும் ஃபோன்களில், இரண்டு, மூன்று, இன்னும் சிலவற்றில் நான்கு கேமராக்கள் கூட பெற்றுள்ளன.

|

ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஒளி குறைந்த இடத்தில் புகைப்படம் எடுப்பது என்பது ஒரு சவாலான காரியம் ஆகும். கீழ்க்காணும் யுக்திகளைப் பயன்படுத்தி, பெரும்பாலான கேமரா ஃபோன்களில் படமெடுக்க முடிகிறது.

ஸ்மார்ட்போன்களில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டு நீண்டகாலம் கடந்துவிட்டது. இப்போது வெளியாகும் ஃபோன்களில், இரண்டு, மூன்று, இன்னும் சிலவற்றில் நான்கு கேமராக்கள் கூட பெற்றுள்ளன. இந்த எல்லா கேமராக்களையும் ஒருங்கே பயன்படுத்தும் வசதியும் உள்ளது. மேற்கூறிய இந்த அம்சங்களின் மூலம் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு ஏற்றதாக ஒரு ஸ்மார்ட்போன் மாறியுள்ளது. ஆனால் அது பகல் நேரத்தில் மட்டுமே சாத்தியம். ஏனெனில் ஸ்மார்ட்போன் கேமராக்களைப் பயன்படுத்தி ஒளி குறைந்த இடத்தில் படமெடுப்பது என்பது ஒரு சவாலான காரியம் ஆகும்.

இதை தவிர்க்க, சில நிறுவனங்கள் பெரிய அளவிலான சென்ஸர்களைப் பயன்படுத்தும் போது, வேறு சிலர் ஒரு விரிவான துளையைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவையும் இயந்திர படிப்பினையும் அளித்து, குறைந்த ஒளியில் எடுக்கும் படங்களுக்கு ஏற்றதாக மாற்ற முயற்சிக்கின்றன. ஆனாலும் மேற்கூறிய எதுவும் கச்சிதமாக அமைவதாக கூற முடியாது. இந்நிலையில் உங்கள் ஃபோனை பயன்படுத்தி குறைந்த ஒளியில் படமெடுக்க உதவும் சில யுக்திகளை கீழே அளிக்கிறோம்.

1. உங்கள் கேமராவை அறிந்து கொள்ளுங்கள்

1. உங்கள் கேமராவை அறிந்து கொள்ளுங்கள்

ஒரு புதிய ஃபோனை வாங்கினால், முதலில் அதை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் கேமரா ஃபோன்களிலும், அதற்கே உரிய சிறப்பம்சங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக, சில ஃபோன்களில் ப்ரோ முறை இருந்தாலும், ஷட்டர் ஸ்பீடு தேர்வு இருக்காது.

இரட்டை கேமராக்களைக் கொண்ட சில ஃபோன்களில் விரிந்த கோணம் உடன் டெலிஃபோட்டோ ஆகியவை இணைந்து ஆப்டிக்கல் சூம் இருக்கும். ஆனால் சில ஃபோன்களில் மோனோகிரோம் மற்றும் ஆர்பிஜி சென்ஸஸர் கொண்டிருக்கும். இன்னும் சிலவற்றில் போர்ட்ரேட் முறைக்காக, சீரான நிற சென்ஸர் மற்றும் ஒரு தனிப்பட்ட ஆழமான சென்ஸர் கொண்டிருக்கும். எனவே உங்கள் இரட்டை கேமரா ஃபோன் எந்த மாதிரியான அப்ளிகேஷனைக் கொண்டுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஃபோனில் உள்ள கேமரா அமைப்புகளுக்குள் சென்று பார்க்க வேண்டியுள்ளது. கிரிட்டை இயக்குதல் (உங்கள் படங்களை சரியான முறையில் அமைப்பதில் இது உதவுகிறது) மற்றும் தரத்தைப் பாதிக்காத வகையில் பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம். 16:9 ஷாட்கள் பகுப்பாய்வைக் குறைக்கும் நிலையில், 4:3 விகிதம் வழக்கமான முழு அளவிலான மெகாபிக்சலைப் பெற உதவுகிறது. ஹேச்டிஆர் இயக்கத்தில் உள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.

2. ப்ரோ முறையைப் பயன்படுத்த கற்று கொள்ளுதல்

2. ப்ரோ முறையைப் பயன்படுத்த கற்று கொள்ளுதல்

ஒளி குறைந்த சூழ்நிலையில் படமெடுக்க, ப்ரோ முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், அதை சரியான முறையில் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும். பெரும்பாலான ஃபோன்களில் (எல்லாவற்றிலும் அல்ல) உள்ள ப்ரோ முறையின் மூலம் ஷட்டர் ஸ்பீடு, ஐஎஸ்ஓ, வைட் பேலன்ஸ், மீட்டரிங் போன்ற அமைப்புகளை முடுக்கிவிட பயன்படுகிறது. குறைந்த ஒளியில் எடுக்கப்படும் படங்கள் என்றாலே, ஐஎஸ்ஓ-வை சுமார் 400 முதல் 800-க்குள் வைத்து கொண்டு, ஷட்டர் ஸ்பீடின் வேகத்தை குறைத்து சுமார் 1/5 அல்லது 1 நொடியாக வைத்து கொள்ள வேண்டும். சிறிது வெளிச்சம் இருக்கும் நிலையில், ஷட்டர் ஸ்பீடை சுமார் 1/20 அல்லது 1/15-யை ஒட்டி அமைத்து கொள்வது நல்லது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 போன்ற சில ஃபோன்கள், எஃப்/1.5 மற்றும் எஃப்/2.4 துளையைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒளி குறைந்த சூழ்நிலையில் எஃப்/1.5, ஷட்டர் ஸ்பீடு அதிகமாக இருந்தாலும் அதிக வெளிச்சத்தை கவருவதால், படமெடுக்க அது போதுமானதாக உள்ளது. மேலும் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்2 பிரிமியம் ஃபோனில் ஐஎஸ்ஓ-வை 512000 வரை அளிக்கிறது என்பதால், விரைவான ஷட்டர் ஸ்பீடு இருந்தாலும் அதிக வெளிச்சத்தை கவர்ந்து சென்ஸரின் உணர்நிலையை அதிகரித்து, குறைந்த ஒளியிலும் சிறந்த படங்களை எடுக்க உதவுகிறது.

இந்த ப்ரோ முறையை, நீண்ட வெளியோட்டமான படங்களை எடுக்கவும் பயன்படுகிறது. இதற்கு 30 நொடிகள் வரை ஷட்டர் ஸ்பீடு அளிக்க வல்ல ஃபோன்கள் சிறந்ததாக அமைகின்றன. ஐஎஸ்ஓ-வை சுமார் 100-200 என்ற குறைந்த அளவில் நிர்ணயித்து, ஷட்டர் ஸ்பீடை 10 முதல் 15 நொடிகள் என்று வைத்து கொண்டு, ஃபோனை ஒரு நிலையான இடத்தில் வைத்து பயன்படுத்தலாம்.

3. ரா முறையில் படமெடுத்தல்

3. ரா முறையில் படமெடுத்தல்

உங்கள் ஃபோனில் ரா முறையில் படமெடுக்கும் ஒரு தேர்வு இருந்தால், ஒளி குறைந்த சூழ்நிலைகளில் படமெடுக்க அதை பயன்படுத்தலாம். ஒன்பிளஸ் 5டி, ஹானர் வியூ 10, கூகுள் பிக்ஸல் 2 மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட ஐஓஎஸ் சாதனத்தில் ரா முறையில் படமெடுக்க முடியும். இந்த ரா முறையில் படமெடுக்கும் போது, ஒரு ஜேபிஇஜி படத்தை விட, படமெடுப்பிற்கு பிந்தைய தயாரிப்புகளில் சிறப்பாக வருகிறது.

4. ஒரு ட்ரைபேட் பயன்படுத்தலாம்

4. ஒரு ட்ரைபேட் பயன்படுத்தலாம்

ஏற்கனவே குறிப்பிட்டது போல, குறைந்த ஒளியில் எடுக்கப்படும் படங்களுக்கு ஷட்டர் வேகம் குறைத்தால், சென்ஸருக்கு அதிக ஒளியைப் பெற முடிகிறது. அதே நேரத்தில் நீண்டநேரத்திற்கு ஷட்டரை திறந்து வைத்திருந்தால், புகைப்படத்தில் அசைவு மற்றும் தெளிவற்றதாகி கிடைக்கிறது. உங்கள் கை கொஞ்சம் அசைந்தாலும், படம் பாதிக்கப்படுகிறது. எனவே குறைந்த ஒளியில் படமெடுக்கும் போது ட்ரைபேடு உடன் எடுப்பது நல்லது. நீண்டநேரம் சென்ஸருக்கு ஒளியை அளிக்கும் போது, ட்ரைபேடு பயன்படுத்தினால் ஃபோன் நேராக இருக்கும் என்பதோடு, நமக்கு கிடைக்கும் படங்களும் தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

5. பெரிதுப்படுத்த வேண்டாம்

5. பெரிதுப்படுத்த வேண்டாம்

வெளிச்சம் குறைவாக இருக்கும் போது, பெரிதுப்படுத்த வேண்டாம். ஒரு ஸ்மார்ட்போன் கேமராவில் பெரிதுப்படுத்தும் போது, தொலைவில் உள்ள ஒரு பொருளைக் குறிவைத்து பிரேம் கிராப் செய்யப்படுகிறது. எனவே நமக்கு கிடைக்கும் தீர்வு பொலிவு இழந்ததாக அமையும் என்பதால், தூரத்தில் இருந்து எடுக்கும் படமே திருப்திகரமாக உள்ளது. உங்கள் ஃபோனில் ஆப்டிக்கல் சூம் இருந்தால், அதன் தன்மை வேறுபடுகிறது. எனினும் வழக்கமாக குறைந்த துளையைக் கொண்டிருக்கும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் மூலம் சூம் செய்யப்பட்டு எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு திருப்தியை அளிப்பதில்லை. எனவே தூரத்தில் உள்ள ஒரு காரியத்தை நீங்கள் படமெடுக்க வேண்டுமானால், சூம் செய்வதற்கு பதிலாக அந்தப் பொருளை நெருங்கி செல்வது நல்லது.

6. சூழ்நிலை ஒளியைப் பயன்படுத்துதல்

6. சூழ்நிலை ஒளியைப் பயன்படுத்துதல்

கடைசியாக, ஒளி அதிகமாக உள்ள இடத்தில் படங்களை எடுத்து, சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளலாம். இந்த வகையில் நீங்கள் ஒரு குறைந்த வெளிச்சம் கொண்ட இடத்தில் இருந்தால் கூட, ஒரு நியான் பல்பு போன்ற ஒற்றை ஒளி ஆதரவை பயன்படுத்தி, சிறப்பான ஒரு படத்தை எடுக்க முடியும். ஒளிக் குறைந்த இடத்தில் பிளாஷை பயன்படுத்த நினைக்கலாம். ஆனால் பெரும்பாலான இடத்தில் பிளாஷை பயன்படுத்தும் போது, அதிகளவிலான வெளிச்சம் படத்தில் பிரதிபலித்து சிவப்பான கண்கள் மற்றும் அதிக வெளியிடு கொண்ட தோல் ஆகியவற்றை அளிக்கிறது. எனவே ஒளி ஆதரவில் படமெடுப்பது தான் சிறந்தது.

Best Mobiles in India

English summary
How to take photos at night with your smartphone ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X