உங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி?

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்ய கம்ப்யூட்டரில் ஐடியூன்ஸ் பயன்படுத்துவது மட்டுமே ஒற்றை வழிமுறையாக இருந்தது.

|

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்ய கம்ப்யூட்டரில் ஐடியூன்ஸ் பயன்படுத்துவது மட்டுமே ஒற்றை வழிமுறையாக இருந்தது. ஐகிளவுட் மூலம் இந்த பணியை செய்வது எளிமையான ஒன்றாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வழிமுறை மூலம் தரவுகள், புகைப்படங்கள் மற்றும் இசை உள்ளிட்டவற்றை ஆப்பிள் சர்வர்களில் பதிவு செய்து கொள்ள வழி செய்தன. இந்த தரவுகளை பார்த்து, அவற்றை ஐ.ஓ.எஸ்., மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

உங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி?

இந்த சேவையை கொண்டு ஐ.ஓ.எஸ். சாதனங்களை நேரடியாக பேக்கப் எடுத்துக் கொள்ளவும், அவற்றை மீண்டும் செட்டப் அல்லது ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும். டிரான்சிட் அல்லது ஸ்டோரேஜ் என இருவிதங்களிலும் உங்களின் தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. நம்பகத்தன்மைக்கென பின்பற்றப்படும் டோக்கென்கள் மற்றும் முழுமையான என்க்ரிப்ஷன் உள்ளிட்டவை தகவல்களின் பாதுகாப்பிற்கு சான்றாக இருக்கின்றன.
உங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி?

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்களிடம் போதுமான ஐகிளவுட் ஸ்டோரேஜ் உள்ளதா என்பதை சரிபார்ப்பது தான்:


1 - உங்களது ஐ.ஓ.எஸ். சாதனத்தின் செட்டிங்ஸ் சென்று உங்களின் பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.


2 - இனி iCloud > Manage Store ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.


தகவல்களை சின்க் செய்ய

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் தகவல்களை சின்க் செய்ய உங்களது சாதனங்கள் ஒரே வைபை மூலம் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஐகிளவுட் சீரான பேக்கப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி?

பேக்கப் செய்ய வேண்டிய சாதனத்தில் செய்ய வேண்டியவை:

1 - செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று ஐகிளவுடில் உங்களின் பெயரை க்ளிக் செய்யவும். இதில் ஐகிளவுட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

2 - ஐகிளவுட் பேக்கப் ஐகான் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு பேக்கப் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


3 - பேக்கப் நிறைவுறும் வரை காத்திருக்க வேண்டும்.


டவுன்லோடு செய்ய வேண்டிய சாதனத்தில் மேற்கொள்ள வேண்டியவை:

1 - சாதனத்தை ஆன் செய்து செட்டப் செய்யக்கோரும் பணிகளை துவங்க வேண்டும். இனி வரும் வழிமுறைகளை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து ஆப்ஸ் மற்றும் டேட்டா திரை ஆப்ஷன் வர வேண்டும்.

2 - இனி ஐகிளவுட் பேக்கப் ஆப்ஷனில் இருந்து ரீஸ்டோர் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - இதில் சமீபத்திய பேக்கப்பை தேர்வு செய்ய வேண்டும்.

4 - ரீஸ்டோர் முழுமை பெறும் வரை காத்திருக்க வேண்டும்.

இனி உங்களின் தகவல்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் சின்க் செய்யப்பட்டு இருக்கும்.

உங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை சின்க் செய்வது எப்படி?

குறிப்பிட்ட தரவுகளை மட்டும் ஐகிளவுட் மூலம் சின்க் செய்ய:

உங்களின் அனைத்து தகவல்களையும் சின்க் செய்ய வேண்டாம் என நினைத்தால், நீங்கள் விரும்பும் தகவல்களை மட்டும் சின்க் செய்து கொள்ளலாம்.

1 - ஆப்பிள் ஐ.டி. மூலம் உங்களது சாதனங்களில் லாக் இன் செய்ய வேண்டும்.

2 - சாதனத்தில் செட்டிங்ஸ் -- ஐகிளவுட் ஆப்ஷனில் காணப்படும் உங்களின் பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.

3 - நீங்கள் சின்க் செய்ய விரும்பாத செயலிகள் அல்லது பிரிவுகளை டிசேபிள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் மற்ற ஆப்பிள் சாதனங்களில் சின்க் ஆகாமல் பார்த்துக் கொள்ளும்.

4 - இவ்வாறு செய்ய விரும்பும் பட்சத்தில், 1 மற்றும் 3 ஆகிய வழிமுறைகளை மற்ற ஆப்பிள் சாதனங்களிலும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தகவல்களை சின்க் செய்து அவற்றை இன்ஸ்டால் செய்வது எளிமையாகிவிடும்.

ஐகிளவுட் கொண்டு புதிய சாதனங்களை செட்டப் செய்து பழைய விவரங்களை ரீஸ்டோர் செய்வதும் எளிமையாகிவிடும். இதற்கு செட்டிங்ஸ் சென்று உங்களின் பெயர் மற்றும் ஐகிளவுட் -- பேக்கப் உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

இனி ஐகிளவுட் பேக்கப் உங்களின் ஆப் தகவல்கள், ஆப்பிள் வாட்ச் பேக்கப், டிவைஸ் செட்டிங்ஸ், ஹோம்கிட் கான்ஃபிகரேஷன், ஐமெசேஜ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பேக்கப் செய்து கொள்ளும்.

Best Mobiles in India

English summary
How to sync your iPhone and iPad : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X