போனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா? இனி கவலைவேண்டாம்.!

இந்த கூகுள் கேம்ஸ் செயலியில் உள்ள டூல்களின் மூலம் கேம்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யமுடியும். இந்த செயலி ப்ளேஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.

|

புதிதாக போனை வாங்கியவுடன் பலரும் செய்யும் முதல் காரியம், தங்களுக்கு பிடித்தமான செயலிகள் மற்றும் கேம்களை இன்ஸ்டால் செய்வது தான். நீங்கள் கேமில் ஈடுபாடு உள்ளவராக இருந்தால், விளையாடும் கேமை பொறுத்து லெவல்களை முடிப்பது, சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது என நேரத்தை செலவிடுவீர்கள்.

போனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா?

முந்தைய போனில் உள்ள கேமின் லெவல்களை முடிக்க உங்கள் பொன்னான நேரத்தை செலவளித்த பின்பு புதிய போனிலும் அதே லெவல்களை மீண்டும் விளையாடுவது கொடுமை தான். இந்த இரண்டும் ஆண்ராய்டு போன்கள் என்றால், இனி கேம் லெவல்களை இழக்கவேண்டிய கவலையில்லை. உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் வகையில் கூகுள் கவனம் செலுத்தி "கூகுள் கேம்ஸ்" செயலியை வடிவமைத்துள்ளது.

இந்த கூகுள் கேம்ஸ் செயலியில் உள்ள டூல்களின் மூலம் கேம்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யமுடியும். இந்த செயலி ப்ளேஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.முதலில் இந்த செயலியில் உள்நுழைந்து ப்ரெபைல் உருவாக்கிய பின்னர், உங்களிடம் உள்ள கேம்களை இச்செயலி பட்டியலிடும் மற்றும் உங்கள் தரவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும். மேலும் இந்த செயலி நீங்கள் பல்வேறு கருவிகளில் விளையாடிய அனைத்து கேம்களையும் பட்டியலிட்டு வைத்திருக்கும்.

இதைத் தொடங்கும் முன்பு ,உங்கள் கருவியில் புதிய வெர்சன் ப்ளே கேம்ஸ் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டதை உறுதிபடுத்திக்கொள்ளவும். இதை உங்கள் புதிய மற்றும் பழைய ஆண்ராய்டு கருவிகளிலும் செய்ய வேண்டும். பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வேறு கருவியில் விளையாடிய கேமை புதிய கருவியில் தொடரவும், பல்வேறு கருவிகளின் தரவுகளை சேமிக்கவும் முடியும்.

போனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா?

1) முதலில் உங்கள் பழைய ஆண்ட்ராய்டு கருவியில், சிங்க் செய்ய விரும்பும் கேமை திறக்கவும்.

2)அந்த கேமின் மெனுவிற்கு செல்லவும்.

3)அதிலுள்ள கூகுள் ப்ளே என்னும் இணைப்பை தேர்வு செய்யவும்.

4)அங்குள்ள தேர்வுகளில், கேமின் தரவுகளை சேமிக்க வசதிகள் இருக்கும்.

5)சேமிக்கப்பட்ட தரவுகள் கூகுள் கிளவுட்-ல் பதிவேற்றம் செய்யப்படும்.

6)இப்போது உங்கள் புதிய கருவியில் கூகுள் ப்ளே கேம்ஸ் செயலியின் புதிய வெர்சனை இன்ஸ்டால் செய்யவும்.

7)மீண்டும் அந்த கேமை உங்கள் புதிய கருவியில் இன்ஸ்டால் செய்யவும்.

8)கூகுள் ப்ளே சென்று 'லோடு' ஐ தேர்வு செய்யவும்.

9)கூகுள் சர்வரில் சேமிக்கப்பட்ட தரவுகளை இந்த செயலி அணுக முடியும்

10)அந்த தரவுகள் முழுவதும் அப்டேட் ஆன பிறகு செயலி அல்லது கேம் மறுஇயக்கம் செய்யப்படும்

11)இதன் பிறகு, உங்கள் பழைய கருவியில் கேமை விட்ட இடத்தில் இருந்து இந்த புதிய கருவியில் தொடரலாம்.

போனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா?

இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பழைய கருவியில் உள்ள தகவல்கள் நீக்கப்படாது. எனவே நீங்கள் மீண்டும் பழைய கருவியில் விளையாட விரும்பனால், மேலே குறிப்பிட்ட படிகளை திருப்பி செய்வதன் மூலம் தொடர்ந்து விளையாடலாம். இந்த கேம் தரவுகள் பல்வேறு கருவிகளுக்கு இடையை ஒத்திசைந்து இருக்கும். இவ்வளவு கேம்களை மட்டுமே இந்த செயலியில் சேமிக்க முடியும் என்பதில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து கேம்களின் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to sync game progress across Android devices ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X