மெயில், காண்டாக்ட் உள்பட முக்கிய விஷயங்களை ஆண்ட்ராய்டு-ல் இருந்து ஐஒஎஸ்-க்கு மாற்றுவது எப்படி?
ஒரு கூகுள் அக்கவுண்ட் வைத்திருந்தால் ஆண்ட்ராய்டு-ல் இருந்து ஐஒஎஸ்-க்கு முக்கிய தகவல்களை எளிதாக மாற்றிவிடலாம்
நீங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐஓஎஸ் போனுக்கு மாற விரும்பும்போது, ஆண்ட்ராய்டு போனில் உள்ள மெயில், காண்டாக்ட் விபரங்கள் மற்றும் காலண்டர் குறித்த தகவல்களை புதிய போனுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

இந்த நிலையில் நீங்கள் ஒரு கூகுள் அக்கவுண்ட் வைத்திருந்தால் இந்த மாற்றம் மிக எளிதாக எந்தவித சிரமமும் இன்றி முடிந்துவிடும். ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தாலே உங்களுடைய அனைத்து விபரங்களையும் ஐஒஎஸ் போனுக்கு மிக எளிதாக மாற்றும் வழிமுறைகளை பார்ப்போம்

இந்த விபரங்களை ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐஒஎஸ் போனுக்கு மாற்றுவதற்கு முன்பாக நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள அனைத்து விபரங்களையும் பேக்-அப் எடுத்து வைத்து கொள்வது மிகவும் நன்று. இனி இந்த விபரங்களை மாற்றும் வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்

ஸ்டெப் 1: உங்களுடைய புதிய ஐஒஎஸ் போனில் முதலில் Settings -> Choose Mail, Contacts, Calendars -> Account செல்லுங்கள்

ஸ்டெப் 2: அதில் உள்ள பலவகை மெயில் முறைகள் வரும். அவற்றில் ஜிமெயிலை தேர்வு செய்து அதில் உங்கள் பெயர், இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை டைப் செய்து பின்னர் லாகின் செய்யுங்கள்

ஸ்டெப் 3: தற்போது உங்களுடைய அனைத்து விபரங்களும் உங்களுடைய ஐபோனுக்கு மாறியிருப்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
Comments
Best Mobiles in India
English summary
If you are planning to switch from Android to iOS platform, you would want to sync your mail, contacts and calendar information on both devices.


Click it and Unblock the Notifications