பேஸ்புக்,யூட்யூப் உள்ளிட்டவற்றில் வீடியோ லைவ் செய்வது எப்படி.?

Written By:

இணையத்தின் பெருவளர்ச்சிக்குப் பிறகு எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ ஆரம்பித்ததன் பிறகு சமூகவலைத்தளங்களும் வளர்ச்சிகண்டன.சமூகத்தில் இணையம் வழியே குறிப்பிட்ட அளவினுக்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த வளர்ச்சியானது இருந்தது-இருக்கிறது.பொழுபோக்குக்கானவை என்கிற நிலை மாறி சமூகத்தில் ஆகச் சிறந்த கருத்துக்களுக்கு வழிகோலுகிறவைகளாக இவை மாறிவிட்டன.

குறிப்பிடத் தகுந்த காலம் வரையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் வழியாகவே எல்லோரும் செய்திகளை அறிந்துகொண்டனர்.ஆனால் இணையத்தின் வளர்ச்சிக்குப்பின் எல்லோரும் இணையத்தை பயன்படுத்த துவங்கியதின் பின் எல்லா சாமானியனும் தனது கருத்தினை பொதுவெளியில் வைக்கக்கூடிய வாய்ப்பினை இவை ஏற்படுத்தித்தந்தது என்றால் அது மிகையாகாது.அதேபோல் வேகமாகவும் தகவல்களை தனது பயனாளர்கள் பகிர்ந்துகொள்கிற வகையில் போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தன.

அதுமட்டுமன்றி,செய்திகளைத் தொடர்ந்து இப்போது நிகழ்வுகளை நேரலையாக நிகழ் படங்களாக(விடீயோக்களாக) வெளியிடுகின்ற வசதிகளை ஏற்படுத்தந்துள்ளன.அத்தகைய நேரலை விடீயோக்களை எவ்வாறு எல்லா சமூகவலைத்தளங்களில் எடுப்பது எப்படி என பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
யூட்யூப்:

யூட்யூப்:

யூட்யூப் ஆனது உலகின் மிகப்பெரிய தேடு பொறியான கூகுளின் விடீயோக்களை பகிர்ந்துகொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வலைத்தளமாகும்.இது தனது பயனாளர்கள் தங்களுக்கென்று தனியே ஓர் சேனல் உருவாக்கி அதன் வழியே விடீயோக்களை அப்லோட் செய்யவும்,பிறரிடத்தில் பகிர்ந்து கொள்வதற்குமான வாய்ப்பினை தருகிறது.உலகின் அதிகப்படியான விடீயோக்களைக் கொண்ட யூட்யூப் சமீபகாலத்திற்கு முன்புதான் விடீயோக்களை லைவ் செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.ஆனால் தற்போது சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியினை மேற்கொள்ள இயலும்.

1.உங்கள் ஸ்மார்ட்போனில் யூட்யூப் ஆப்பினை ஓப்பன் செய்துகொள்ளுங்கள்
2.இப்போது திரையில் தெரிகிற கேமரா வடிவத்தினை க்ளிக் செய்யுங்கள்.ஐபோனில் இந்த கேமரா வடிவம் வலது மேற்புறத்திலும்,ஆண்ட்ராய்டு போன்களில் வலது கீழ்புறத்திலும் இருக்கும்.
3.இப்போது 'கோ லைவ்' என்கிற ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளுங்கள்
4.உங்கள் லைவ் வீடியோவுக்கான தலைப்பினை இடுங்கள்
5.இப்போது கோ லைவ் என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்கள் வீடியோவினை லைவ் செய்யுங்கள்
6.வீடியோ லைவ் ஆனது முடிந்த பின்பு பினிஷ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து லைவ் செய்வதினை நாம் நிறுத்திக்கொள்ளலாம்.

பேஸ்புக்:

பேஸ்புக்:

பேஸ்புக் வழியே வீடியோ லைவ் செய்ய
1.பேஸ்புக் ஆப்பினை ஸ்மார்ட்போனில் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்
2.இப்போது உங்கள் செய்திப்பகுதியில் லைவ் என்கிற ஆப்ஷன் தெரியும்
3.அதனை செலக்ட் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு லைவ் வீடியோ எப்படி எடுப்பதென ஓர் மாதிரி வீடியோ காட்டப்படும்.
4.வேண்டுமெனில் அதனை நீங்கள் ஸ்கிப் செய்துகொள்ளலாம்.
5.இப்போது உங்கள் வீடியோ யார்யாருக்கு பகிரப்பட வேண்டுமென்று தேர்ந்தெடுத்துவிட்டு லைவ் செய்ய துவங்கலாம்.
6.பினிஷ் ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் லைவ் செய்வதில்லை முடித்துக்கொள்ளலாம்.

ட்விட்டர்:

ட்விட்டர்:

ட்விட்டர் வழியாக வீடியோ லைவ் செய்ய
1.உங்கள் ஸ்மார்ட்போனில் ட்விட்டர் ஆப்பினை ஓப்பன் செய்துகொள்ளவும்
2.நியூ ட்வீட் என்கிற ஆப்ஷனை செலக்ட் செய்துகொண்டு லைவ் என்கிற வசதியினை கிளிக் செய்துகொண்டு
3.உங்கள் லைவ் வீடியோவுக்கான தலைப்பினை இடவும்
4.லைவ் முடிக்கவேண்டுமெனில் ஸ்டாப் ப்ரோட்காஸ்ட் என்பதனை தேர்ந்தெடுப்பதன் மூலம் லைவ் வீடியோவினை முடித்துக்கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம்:

இன்ஸ்டாகிராம்:

1.இன்ஸ்டாகிராம் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் ஓப்பன் செய்துகொண்டு
2.லைவ் என்கிற வாய்ப்பினை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் இன்ஸ்டாகிராம் வழியே லைவ் செய்யத் துவங்கலாம்
3.பின்பு பினிஷ் என்கிற ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம் நமது லைவ் வீடியோ ஒளிபரப்பானது நிறுத்தப்படும்.

பெரிஸ்கோப்:

பெரிஸ்கோப்:

ட்விட்டர் நிறுவனமானது பெரிஸ்கோப்பினை வாங்கிவிட்டது.இப்போது அதனிலும் லைவ் செய்கிற வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.பெரிஸ்கோப் ஆப்பினை ஓப்பன் செய்துகொண்டு அதில் தெரிகிற கேமரா வடிவத்தினை க்ளிக் செய்வதன் மூலம் நாம் நமது விடீயோவினை லைவ் செய்யத்துவங்களாம்.
2.நமது விடீயோவினை எல்லாருமோ அல்லது குறிப்பிட்ட நண்பர்கள் வட்டம் மட்டுமே காண்கிறவகையிலும் அமைத்துக்கொள்ளலாம்.
3.பினிஷ் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக நமது லைவ் வீடியோ ஒளிபரப்பினை முடித்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

யூட்யூப்க்கு மாற்றான சில வீடியோ தளங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
How to Stream Live Video on YouTube, Instagram, Facebook, Twitter, and Periscope.Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot