விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ஸை நிறுத்தும் வழிமுறைகள்

|

உங்கள் ஸ்டார்ட் மெனுவில் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து "பரிந்துரைக்கப்பட்ட அப்ஸ்", விண்டோஸ் 10-ல் காட்டப்படுவதோடு, உங்கள் திரையின் வலதுபுறத்தில் நேரலை தலைப்பாகத் தோன்றுகிறது.

விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ஸை நிறுத்தும் வழிமுறைகள்

புதிதாக நிறுவப்பட்ட விண்டோஸ் 10-க்குள் நீங்கள் முதல் முறையாக உள்நுழையும் போது, கான்டி கிரஷ் சோடா போன்ற பிரபலமான அப்ளிகேஷன்கள், தானாக நிறுவப்படுகின்றன. மேலும், உங்கள் ஸ்டார்ட் மெனுவில் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அப்ஸ், விண்டோஸ் 10-ல் காட்டப்படுவதோடு, உங்கள் திரையின் வலதுபுறத்தில் நேரலை தலைப்பாகத் தோன்றுகிறது.

இந்தப் பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்கள், ஸ்டார்ட் மெனு உடன் இணைந்துள்ளது. உங்களுக்கு ஒரு சுத்தமான ஸ்டார்ட் மெனு தேவைப்படும் பட்சத்தில், இந்த அப்ளிகேஷன்களின் பரிந்துரைகளை முடக்கி, உங்கள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை நீக்கிவிட வேண்டும். அதிஷ்டவசமாக, இந்தப் பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை முடக்குவதற்கு கீழ்க்காணும் எளிய படிகளைப் பின்பற்றினால் போதுமானது.

விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை முடக்குவது எப்படி?

விண்டோஸ் 10-ல் பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை முடக்குவது எப்படி?

விண்டோஸ் 10-ல் உள்ள பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை முடக்குவதற்கு கீழ்க்காணும் படிகளைப் பின்பற்ற வேண்டும்.

படி 1: விண்டோஸ் 10-ல் "அமைப்புகள்" பகுதியைத் திறக்கவும்.

படி 2: "தனிப்பயனாக்குதல்" மீது கிளிக் செய்து, "ஸ்டார்ட்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 3: "அவ்வப்போது ஸ்டார்ட்டில் பரிந்துரைகளைக் காட்டு" என்பதை முடக்கவும்.

அவ்வளவு தான், விண்டோஸ் 10-ல் "பரிந்துரைக்கப்பட்ட அப்ஸ்" வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஸ்டார்ட் மெனுவில் பரிந்துரைகளைப் பார்த்து எரிச்சலடைய வேண்டிய தேவையில்லை. ஆனால் உங்கள் அனுமதி பெறாமல் விண்டோஸ் 10 மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் தானாக நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை என்ன செய்வது? அவற்றையும் எளிதாக நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க முடியும்.

விண்டோஸ் 10-ல் இருந்து நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி?

விண்டோஸ் 10-ல் இருந்து நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை நீக்குவது எப்படி?

விண்டோஸ் 10-ல் தானாக நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை கைமுறையாக தான் நீக்க முடியும். நிறுவப்பட்ட அப்ளிகேஷன்களை நீக்குவது மிகவும் எளிது என்பதால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது.

இந்த அப்ளிகேஷன்களை நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்குவதற்கு, "அமைப்புகள்" பகுதிக்கு செல்வது கூட ஒரு பெரிய காரியமாக நீங்கள் நினைக்க தேவையில்லை.

படி 1: "ஸ்டார்ட்" மெனுவைத் திறக்கவும்.

படி 2: நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க வேண்டிய அப்ளிகேஷன் மீது ரைட் கிளிக் செய்யவும்.

படி 3: "நீக்குதல்" மீது கிளிக் செய்யவும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த அப்ளிகேஷன், உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து உடனடியாக நீக்கப்படும். நீக்குவதற்கான தேர்வு இல்லாத பட்சத்தில், "ஸ்டார்ட் இருந்து பொருந்தப்படாது" என்பதை கிளிக் செய்து, அதன்பிறகு நீக்குவதற்கு முயற்சிக்கலாம்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
முடிவுரை

முடிவுரை

விண்டோஸ் 10-ல் உள்ள பரிந்துரைக்கப்பட்ட அப்ளிகேஷன்களை எப்படி தவிர்க்கலாம் என்பதை இப்போது அறிந்து இருக்கிறீர்கள். மற்ற ஏதாவது அப்ளிகேஷனை நிறுவப்பட்ட நிலையில் இருந்து நீக்க வேண்டுமானால், உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து மென்பொருளை நீக்குவதற்கான தரமான நடைமுறையைப் பின்பற்றினாலே போதுமானது.

தனது அப்ளிகேஷன்களையும் தயாரிப்புகளையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சந்தையகப்படுத்த ஸ்டார்ட் மெனுவில் காட்சிப்படுத்தினாலும், இந்த வியாபார ரீதியான செயல்பாட்டில் இருந்து தப்புவதற்கு பயனருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. மேற்கூறிய செயல்பாட்டிற்கு பிறகு, இப்போது நீங்கள் ஒரு சுத்தமான "ஸ்டார்ட் அப்" மெனுவை அனுபவிக்கலாம்.

இனி ரூ.100/-க்குள் இனி ரூ.100/-க்குள் "எல்லா" நன்மைகளும் கிடைக்கும்; ஏர்டெல் அதிரடி திருத்தம்.!

Best Mobiles in India

English summary
Windows 10 displays “Suggested Apps” from Windows Store on your Start Menu as well as at the right side of your screen as live tiles.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X