உங்களை பின்தொடரும் கூகுள் விளம்பரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கூகுள் விளம்பரங்கள் எந்நேரமும் உங்களை பின்தொடராமல் இருக்கவும், விளம்பரங்கள் இலலாத பிரவுசிங் அனுபவத்தை பெறுவது பலரின் நீண்ட நாள் விருப்பமாக இருக்கிறது.

|

இணையத்தில் பிரவுசிங் செய்யும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தேடிப்படிப்பது மிகப்பெரும் வேலையாக இருக்கும் நிலையில், நம்மை அதிகம் சோதிக்கும் விடயமாக விளம்பரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளமும், சேவையும் அடுத்தடுத்த நொடிகளில் நம் கவனத்தை ஈர்க்க விளம்பரங்களை தெரியப்படுத்துகின்றன.

கூகுள் விளம்பரங்கள் உங்களை பின்தொடர்வதை தடுக்க சில டிப்ஸ்.!


கூகுள் விளம்பரங்கள் எந்நேரமும் உங்களை பின்தொடராமல் இருக்கவும், விளம்பரங்கள் இலலாத பிரவுசிங் அனுபவத்தை பெறுவது பலரின் நீண்ட நாள் விருப்பமாக இருக்கிறது. கூகுள் தளத்துடன் இணைந்து சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் நமக்கு விளம்பரங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பிரவுசிங் செய்யும் போது அடிக்கடி நம்மை குறுக்கிடும் விளம்பரங்கள் பெரும்பாலும் நம் தேடல்களுக்கு துளியும் சம்மந்தமில்லாதவைகளாகவே இருக்கின்றன. உங்களது பிரவுங் ஹிஸ்ட்ரியை வைத்து உங்களை பின்தொடரும் விளம்பரங்களை தடுக்க ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.


I கூகுள் விளம்பரங்களில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் பின்பற்றும் மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.

1 - கூகுள் கணக்கில் சைன்-இன் செய்வது

2 - கூகுள் அக்கவுண்ட்-இல் இருந்து சைன்-அவுட் செய்து வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை பிரவுஸ் செய்வது

3 - கூகுள் அக்கவுண்ட்-ஐ சைன் அவுட் செய்து கூகுள் சர்ச் பயன்படுத்துவது

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று வழிமுறைகளில் கூகுள் விளம்பரங்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி?

கூகுள் அக்கவுண்ட்-இல் சைன் இன் செய்திருந்தால்:

- முதலில் ஆட்ஸ் செட்டிங்-களை (Ads Settings) பயன்படுத்த வேண்டும்

- ஆட் பெர்சனலைசேஷன் (Ads Personalization) ஆப்ஷன் சென்று அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்

- டர்ன் ஆஃப் (TURN OFF) செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்


அடுத்து வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் சைன்-இன் செய்திருக்கும் அனைத்து சாதனங்களில் இருந்தும் விளம்பரங்களை தவிர்க்க முடியும்

கூகுள் விளம்பரங்கள் உங்களை பின்தொடர்வதை தடுக்க சில டிப்ஸ்.!


II கூகுள் அக்கவுண்ட்-இல் இருந்து சைன்-அவுட் செய்ததும்:

அ - இணையம் முழுக்க ஆட்ஸ் பெர்சனலைசேஷன்

1 - விளம்பர செட்டிங்களை (Ads Settings) இயக்க வேண்டும்

2 - ஆட்ஸ் பெர்சனலைசேஷன் (Ads Personalization) ஆப்ஷன் சென்று அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்

3 - டர்ன் ஆஃப் (TURN OFF) செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

ஆ - கூகுள் தேடலில் ஆட்ஸ் பெர்சனலைசேஷன்

1 - விளம்பர செட்டிங்களை (Ads Settings) இயக்க வேண்டும்

2 - ஆட்ஸ் பெர்சனலைசேஷன் (Ads Personalization) ஆப்ஷன் சென்று அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்

3 - டர்ன் ஆஃப் (TURN OFF) செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்

கூகுள் விளம்பரங்களை விட்டு வெளியேறும் போது நீங்கள் பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் விளம்பரங்கள் உங்களை பின்தொடர்வதை தடுக்க சில டிப்ஸ்.!


1 - அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துவது

இணையத்தில் இயங்கி வரும் பல்வேறு வலைத்தளங்களும் வருவாய் ஈட்ட விளம்பரங்களை அதிகம் நம்புகின்றன. இவ்வாறான தளங்களில் நீங்கள் இருக்கும் பகுதி, குறிப்பிட்ட வலைத்தளத்தின் தரவுகள் சார்ந்து விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். இங்கு உங்களுக்கு தேவையான அல்லது பொருத்தமான விளம்பரங்களை எதிர்பார்க்க முடியாது. கூகுள் கான்ட்ரிபியூட்டர் சேவையை பயன்படுத்தி குறைந்த அளவு விளம்பரங்களை மட்டும் பார்க்க முடியும்.

2 - கூகுள் அல்லாத நிறுவனங்களின் விளம்பரங்களை டிசேபிள் செய்வது

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வலைத்தளம், கூகுள் அல்லாத நிறுவனங்களின் விளம்பரங்களை கொண்டிருந்தால், கூகுள் விளம்பரங்களை மட்டும் தடுப்பது வேலைக்கு ஆகாது. இதற்கென கிடைக்கும் சேவைகளை கொண்டு இவ்வாறான விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
How to stop google ads from following you ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X