Home
How to

இதற்கு பதில் சொல்லுங்க, அப்புறமா எங்க ஆதார் அடையாளம் கேளுங்க.!

ஆதார் அட்டையின் அடிப்படை உயிரியளவுகள் இல்லாமல் இதுபோன்ற குற்றத்தை நிகழ்த்துவது என்பது சாத்தியமே இல்லை.

பள்ளி மாணவர்கள் மதிய உணவின் போது அவர்களின் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று தொடங்கி சமீபத்தில் புதிதாக வாகனங்கள் வாங்கவும் ஆதார் அட்டை அடையாளம் வேண்டுமென்பது வரையிலாக மத்திய அரசு ஆதார் அடையாளம் ஒரு கட்டாயமான அடையாளம் என்பது போன்றஒரு திணிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் நடந்துள்ளன ஆதார் ஊழலானது நமக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகிறது

முதல் முறையாக ஆதார் அட்டை விவர தகவல்கள் "திருடப்பட்டுள்ளது" அதாவது உடைக்கவே முடியாத பாதுகாப்பு அம்சங்கள் உடையது என்று மத்திய அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட ஆதார் அட்டையின் தகவல்கள் இப்போது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆதார் அட்டை சார்ந்த பல தனியுரிமை அம்சங்கள் மற்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மீதான பல சந்தேக கேள்விகளும் எழுந்துள்ளது.

சட்டவிரோதமாக

சட்டவிரோதமாக

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி தில்லி போலீஸ் சைபர் பிரிவில் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் கொடுத்துள்ளது. அதன்கீழ் ஆக்சிஸ் வங்கி லிமிடெட், மும்பை அடிப்படையிலான சுவிதா இன்போசர்வ் மற்றும் பெங்களூரு சார்ந்த இமுதுரா ஆகிய நிறுவனங்கள் ஆதார் அட்டை உயிரி அளவீடுகளை சட்டவிரோதமாக சேமிக்கின்றன என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம்

ஆள்மாறாட்டம்

இம்மாதிரியாக அங்கீகரிக்கப்படாது சேமிக்கப்படும் ஆதார் உயிரியளவுகள் மூலம் ஆள்மாறாட்டம் என்பதை மிகவும் எளிமையான முறையில் முயற்சிக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதிகப்படியான நம்பிக்கை

அதிகப்படியான நம்பிக்கை

இந்த கிரிமினல் குற்றமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் கொடுத்த அழுத்தம் மற்றும் அதிகப்படியான நம்பிக்கை மீது சரமாரியாக கேள்விகள் எழுந்துள்ளது.

சாத்தியமே இல்லை

சாத்தியமே இல்லை

ஒரே கைரேகையில் செய்யப்பட்ட பல்வேறு பரிமாற்றங்களை கொண்டே இந்த கிரிமினல் குற்றம், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் அடிப்படை உயிரியளவுகள் இல்லாமல் இதுபோன்ற குற்றத்தை நிகழ்த்துவது என்பது சாத்தியமே இல்லை.

397 பயோமெட்ரிக் பரிமாற்றங்கள்

397 பயோமெட்ரிக் பரிமாற்றங்கள்

2016 ஜூலை 14 முதல் 19 பிப்ரவரி 2017 ஆகிய தேதிகளுக்கு இடையே ஒரு தனிப்பட்ட நபர் 397 பயோமெட்ரிக் பரிமாற்றங்களை நிகழ்த்தியுள்ளதை கண்டு இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அந்த 397 பரிமாற்றங்களில் 194 பரிவர்த்தனைகள் ஆக்சிஸ் வங்கியிலும், இமுதுரா மூலம் 112 மற்றும் சுவிதா மூலம் 91 பரிமாற்றங்கள் நடத்தப்பட்டுளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதார் தரவு நகல்

ஆதார் தரவு நகல்

இதன் மூலம் பல்வேறு பரிமாற்றங்கள் சட்டவிரோதமாக நடந்துள்ளதென்பது வெளிப்படையாக தெரிய வருகிறது அதாவது வெவ்வேறு பரிமாற்றங்களுக்கு ஒரு பொதுவான ஆதார் அட்டை விவரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. ஆதார் தரவு நகல் என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும் இந்த குற்றதிற்கு அபராததுடன் ஆன மூன்று ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இதுபோன்ற கிரிமினல் குற்றங்களில் உங்களின் ஆதார் தகவல் சிக்கி கொள்ளாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்.??

லாக் மற்றும் அன்லாக்

லாக் மற்றும் அன்லாக்

இந்திய தனித்துவ அடையாள ஆணைய சேவையகங்களில் சேமிக்கப்படும் உங்கள் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்தால் இதுபோன்ற அனைத்து விடயங்களையும் நீங்கள் தவிர்க்க முடியும். அதாவது இந்த பயோமெட்ரிக் தரவுகளை வேறொருவரால் அணுக முடியாது, உங்களுக்கு தேவையான நேரத்தில் அன்லாக் செய்து அணுகல் முடிந்த பின்னர் மீண்டும் லாக் செய்து விடலாம் என்று அர்த்தம்.

வழிமுறை #02

வழிமுறை #02

அங்கு உங்கள் 12 இலக்க ஐக்கிய ஆதார் எண்ணை பதிவிடவும். பின்னர் உங்கள் ஆதார் எண் பதிவிடும் இடத்திற்கு கீழே வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை கேட்கப்படும் இடத்தில நுழைக்கவும். பின்னர் ஒடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் கேட்டு ஜெனரேட் ஒடிபி கிளிக் செய்யவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

உங்களுக்கான ஒருமுறை கடவுச்சொல் நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும். அதை வலைதள பக்கத்தில் உள்ளிடவும். பின்னர் 'வெரிப்பை' பட்டனை கிளிக் செய்யவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

இப்போது எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங் என்பதை சோதிக்கவும், பின்னர் பயோமெட்ரிக் லாக்கிங்கை எனேபிள் செய்யவும், அவ்வளவுதான். ஒருவேளை நீங்கள் உங்கள் லாக்கை அன்லாக் செய்ய வேண்டுமென்றால் எனேபிள் பயோமெட்ரிக் லாக்கிங்கை அன்செக் செய்து பின்னர் டிடிசேபிள் கிளிக் செய்யவும்.

ஒடிபி வழியாக மட்டுமே

ஒடிபி வழியாக மட்டுமே

பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆதார் பரிமாற்றங்களை உங்கள் கை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் நிகழ்த்ததாமல், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் ஒடிபி வழியாக மட்டுமே தகவல்கள் சார்ந்த கோரிக்கைகளை அங்கீகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?

More from GizBot

Best Mobiles in India

English summary
How to stay away from Misuse Of Aadhaar Biometrics Data. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X