Home
How to

உங்கள் மொபைல் பேட்டரி கொண்டு நெருப்பை உண்டாக்குவது எப்படி.?

எமெர்ஜென்சி எப்போது நிகழும் என்பது நமக்கு தெரியாது. நாம் எதற்கும் தயாராக இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.!b

By Muthuraj

எதிர்பாராத மற்றும் ஒரு தீவிரமான, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய, பெரும்பாலும் ஒரு ஆபத்தான நிலையை தான் எமெர்ஜென்சி அர்த்தமாகும். அப்படியான எமெர்ஜென்சி எப்போது, எப்படி, எங்கு நிகழும் என்பது நமக்கு தெரியாது. நாம் எதற்கும் தயாராக இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.!

அப்படியாக நீங்கள் திக்குதிசை அறியாத காட்டில், மொபைல் சிக்னல் கிடைக்காத அல்லது பேட்டரி தீர்ந்துபோன மொபைலை கையில் கொண்ட நிலையில் சிக்கி தொலைந்து போனால், அதுவும் மாலை நேரம் நெருங்கியும் சூரிய அஸ்தமனம் நிகழும் தருணம் வந்தும் கூட உங்களால் தப்பிக்க முடியவில்லை என்றால் மறுநாள் காலை வரை உயிர்கொல்லும் விலங்குகள் மற்றும் இதர இயற்கை ஆபத்துகளில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கு நிச்சயமாக நெருப்பின் தேவை ஏற்படும்.!

வழிமுறைகள்

வழிமுறைகள்

அம்மாதிரியான உயிர்காக்க வேண்டிய கட்டாய நேரத்தில் உங்கள் மொபைலின் பேட்டரி உங்களை காப்பாற்றும் உங்களின் தேவையான நெருப்பை உண்டாக்க உதவும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.? ஆம், அது சாத்தியமே.!

லித்தியம்-அயன் பேட்டரி

லித்தியம்-அயன் பேட்டரி

முதலில் உங்களால் முடிந்த அளவிலான விரைவில் தீப்பற்றக்கூடிய விறகுகளை குச்சிகளை சேகரித்த பின்னர் உங்களின் மொபைலில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரியை வெளியே எடுக்கவும்.

எமெர்ஜென்சி தருணத்தில்

எமெர்ஜென்சி தருணத்தில்

உங்கள் மொபில் பேட்டரி ஒரு அருமையான பயர்-ஸ்டார்ட்டர் ஆகும். இருப்பினும் இதை மிக மிக அத்தியாவசியமான எமெர்ஜென்சி தருணத்தில் மட்டுமே நிகழ்த்த வேண்டும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

விஷத்தன்மை

விஷத்தன்மை

ஏனெனில் லித்தியம்-அயன் பேட்டரியை தீப்பற்ற வைப்பது என்பது மிகவும் ஆபத்தான மற்றும் அதே சமயம் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த புகையை சந்திக்க நேரிடும். ஆக இதை செய்யும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை துணிகொண்டு மூடிவிட மறக்க வேண்டாம்.

இரண்டு வழிகள்

இரண்டு வழிகள்

உங்கள் மொபைலின் லித்தியம்-அயன் பேட்டரி கொண்டு நெருப்பை உண்டாக்க இரண்டு வழிகள் உள்ளது. அதில் முதல் வழியாக, உங்கள் பேட்டரியில் சிறிதளவாகினும் சார்ஜ் இருக்க வேண்டும்.

பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்

பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்

மீதமுள்ள சார்ஜ் கொண்ட பேட்டரியின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பகுதிகளை ரப்பர் கைப்பிடி கொண்ட ஏதேனும் ஒரு கூர்மையான கடத்தும் (conductive) பொருளைக்கொண்டு குத்தும் போது தீப்பொறி கிளம்பும். அதை கொண்டு நெருப்பை உருவாக்கலாம்.

கூர்மையான பொருள்

கூர்மையான பொருள்

ஒருவேளை உங்கள் பேட்டரி சுத்தமாக தீர்ந்துப்போய் விட்டதென்றால், எளிதில் தீப்பற்றக்கூடிய விறகுகளுக்குள் உங்கள் பேட்டரியை வைத்து கூர்மையான பொருள் ஏதேனும் கொண்டு அதை வேகமாக குத்தி கிழிக்கவும்.

அதீதமான வெப்பத்தினால்

அதீதமான வெப்பத்தினால்

அப்படி செய்ய அதீதமான வெப்பத்தினால் உங்கள் பேட்டரி ஒரு "வெடிப்பை" நிகழ்த்தும். அதன் மூலமாக நீங்கள் நெருப்பை உண்டாக்கி கொள்ளலாம். இது மிகவும் விஷத்தன்மை கொண்ட செயல் என்பதல் இதை செய்யும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை துணிகொண்டு மூடிவிட மறக்க வேண்டாம் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் மொபைல் பேட்டரி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.!

Best Mobiles in India

English summary
How to start an emergency fire with your cell phone battery. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X