பேஸ்புக்கில் தொல்லை தரும் நபரை அடக்கி வைப்பது எப்படி?

|

பேஸ்புக்கில் சமீபத்தில் 'ஸ்னூஸ்' என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்களை தற்காலிகமாக முடக்கி வைக்க முடியும்.

பேஸ்புக்கில் தொல்லை தரும் நபரை அடக்கி வைப்பது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள உங்கள் நண்பர் ஒருவர் வெளியிடும் தனது புதிய கார் அல்லது தனது சந்தோஷமான விடுமுறை பயணம் போன்ற இடுகைகளைப் பெரும் தொல்லையாக கருதுகிறீர்களா? அல்லது நீங்கள் அங்கமாக சேர்ந்திருக்கும் ஒரு பேஸ்புக் குழுவினர், அவ்வப்போது ஒன்று சேர திட்டமிடுகிறார்களா? இதையெல்லாம் பார்த்து சோர்ந்து போய்விட்டீர்களா? ஆம் என்றால், உங்களைப் போன்றவர்களுக்கான ஒரு நல்ல செய்தியைக் கூறுகிறோம். மேற்கூறியது போன்ற மனஉளைச்சல்களில் இருந்து நீங்கள் தப்பிக்க, பேஸ்புக்கில் உள்ள ஸ்னூஸ் பொத்தான் உதவுகிறது.

பேஸ்புக்கில் சமீபத்தில் 'ஸ்னூஸ்' என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்களை தற்காலிகமாக முடக்கி வைக்க முடியும். மேற்கூறிய இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை, உங்கள் நண்பர்கள் யாரும் அறியமாட்டார்கள் என்பது தான் இதில் உள்ள சிறப்புத் தன்மை. இந்த ஸ்னூஸ் காலஅளவு முடிவடைந்த பிறகு, தானாக வழக்கமான நிலைக்கு திரும்பிவிடும்.

இது சிறப்பான ஒரு அம்சமாக உள்ளது அல்லவா? ஏனெனில் இன்று பலரும் பேஸ்புக்கை ஒரு விளம்பர தளமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதற்காக வெளியிடப்படும் எல்லா தொல்லை மிகுந்த இடுகைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று இல்லையே. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் காண விரும்பும் காரியங்ளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ளலாம்.

இந்த ஸ்னூஸ் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

இந்த ஸ்னூஸ் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

இந்த ஸ்னூஸ் பொத்தானை பயன்படுத்துவது மிகவும் எளிது. ஸ்னூஸ் செய்ய வேண்டிய ஒரு நண்பர் அல்லது பக்கத்தின் இடுகையை நீங்கள் காணும் போது, அதன் மேல் வலதுபுற பிரிவில் இருக்கும் மூன்று புள்ளிகளின் மீது கிளிக் செய்யவும். அப்போது ஒரு கீழே நோக்கி விழும் மெனு திறக்கும்.

அதில் "30 நாட்களுக்கு ஸ்னூஸ் செய்யவும்" என்று இருப்பதைக் காணலாம். அந்தப் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் ஸ்னூஸ் காலத்தைச் செயல்படுத்தலாம்.

இந்த ஸ்னூஸ் காலஅளவு 30 நாட்களில் முடிவடையும். அதன்பிறகு குறிப்பிட்ட பக்கம் அல்லது நண்பர்கள் வெளியிடும் புதிய இடுகைகளை வழக்கம் போல உங்கள் நியூஸ்ஃபீடில் காணலாம்.

இந்த ஸ்னூஸ் பொத்தானை இயக்குவதால் என்ன பயன்?

இந்த ஸ்னூஸ் பொத்தானை இயக்குவதால் என்ன பயன்?

குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தை நீங்கள் அன்பாலோ செய்தால், தங்களின் பக்கத்தை யாரோ அன்பாலோ செய்துள்ளார்கள் என்பது தெரியவர அதிக வாய்ப்புகள் உள்ளன. இதேபோல ஒரு நண்பரை அன்பாலோ அல்லது அன்ஃபிரண்டு செய்தாலும், மற்றவர்களுக்கு தெரிய வரலாம்.

குறிப்பிட்ட நபரை வேதனைப்படுத்த வாய்ப்புள்ள உங்கள் செயல்பாட்டைக் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கலாமே? எனவே இது போன்ற சூழ்நிலைகளுக்கு 'ஸ்னூஸ்' தேர்வைக் கிளிக் செய்வது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதைக் குறித்து யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால், யாருக்கும் நீங்கள் விளக்கம் அளிக்க தேவையில்லை. இப்படி வாழ்க்கையை எளிதாக்கி கொள்ளலாம் இல்லையா?

முடிவரை

முடிவரை

முன்னதாக, "இதே போன்ற சில இடுகைகளைக் காட்டு" பொத்தானின் விருப்பத்தேர்வை பேஸ்புக் அறிமுகம் செய்தது. ஆனால் பல பயனர்களுக்கு அது அந்தளவிற்கு பயன் அளிக்கவில்லை. "சில இடுகைகளைக் காட்டு" என்பதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்த ஒரு குழப்பம் இருந்தது.

இது போன்ற ஒரு குழப்பமான நிலையை தவிர்க்கும் வகையில், இம்முறை பேஸ்புக் "ஸ்னூஸ்" பொத்தானை அறிமுகம் செய்யும் திட்டத்தோடு களமிறங்கி உள்ளது. இது அதிக உறுதியான தன்மையைக் கொண்டுள்ளது.

மேலும், நீங்கள் ஸ்னூஸ் பொத்தானை அழுத்திய சம்பவத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, வழக்கமான நிலைக்கு தானாக திரும்பிவிடும். பேஸ்புக்கில் தற்காலிகமாக குறிப்பிட்ட நபரை, அவருக்கே தெரியாமல் தவிர்க்க வேண்டிய தேவை ஏற்படும் போது, எந்தப் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும் என்பதை இப்போது உங்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம்!

விரைவில் வெளிவரும் அசத்தலான சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!விரைவில் வெளிவரும் அசத்தலான சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!

Best Mobiles in India

English summary
Are you tired of a friend who can’t just stop posting about his new car or his fancy vacation? Do you want to get rid of it? If yes, then there is good news for you. You can get rid of this frustration by using the Snooze button of Facebook.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X