ஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.!

இதுபோன்ற சூழல்களில் ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன் எச்சரிக்கையாக சிலவற்றை செய்து வைத்தால், மொபைல் வழங்கியதும் உங்களுக்கு ஏற்படும் அச்சம் வெகுவாக குறைக்கப்படும்.

|

ஸ்மார்ட்போன்களை மற்றவர்களிடம் வழங்குவதில் பலருக்கும் பிடிக்காது. எனினும் சில சமயங்களில் தெரிந்தவர்களிடம் ஸ்மார்ட்போன்களை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். அழைப்புகளை மேற்கொள்ளவோ, குழந்தைகள் கேம் விளையாடவோ என சில சமயங்களில் ஸ்மார்ட்போன்களை மற்றவர்களிடம் வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

ஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.!

இதுபோன்ற சூழல்களில் ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன் எச்சரிக்கையாக சிலவற்றை செய்து வைத்தால், மொபைல் வழங்கியதும் உங்களுக்கு ஏற்படும் அச்சம் வெகுவாக குறைக்கப்படும். அந்த சிலவற்றை பெரிய காரியமல்ல. ஸ்மார்ட்போனில் மற்றவர்கள் கையில் இருக்கும் போது குறிப்பிட்ட சில செயலிகளை மட்டும் பயன்படுத்த அனுமதிப்பது தான்.


ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பின் விண்டோஸ் (Pin Windows) எனும் அம்சம் இருக்கிறது, இதை செயல்படுத்தினால் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட விண்டோக்களை ஸ்கிரீனில் அனுமதிக்கும்.

ஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.!

இவ்வாறு செய்யும் முன் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை:

குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு லாலிபாப் அல்லது அதற்கும் மேல் வெளியிடப்பட்ட இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.!

பின்பற்ற வேண்டிவை:

1 - ஸ்மார்ட்போனின் செட்டிங்களை திறக்க வேண்டும்.


2 - செக்யூரிட்டி & லாக் ஸ்கிரீன் (Security & Lock screen) ஆப்ஷன் செல்ல வேண்டும்.


3 - இனி கீழ்புறம் ஸ்கிரால் செய்து ஸ்கிரீன் பின்னிங் (Screen Pinning) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - பின் இந்த ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

5 - இதைத் தொடர்ந்து (Ask for unlock pattern before unpinning) ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். இதன் பின் செயலியை திறக்கும் முன் பாஸ்வேர்டு அல்லது பேட்டர்னை பதிவிட கோரும்.

6 - இனி நீங்கள் பின் செய்ய வேண்டிய செயலியை ஓபன் செய்து Recent பட்டனை க்ளிக் செய்து சமசீபத்தில் பயன்படுத்திய செயலிகளை திறக்க வேண்டும்.

7 - செயலியை பின் செய்ய Pin ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

8 - இனி நீங்கள் தேர்வு செய்த செயலி பின் செய்யப்பட்டு விடும். இதனால் மற்ற செயலிகளை திறக்கும் முன் அன்பின் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to share your locked Android smartphone with access to one app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X