ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்

தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிடையே தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன.

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் தரவுகளை விண்டோஸ் கம்ப்யூட்டருக்கு பரிமாற்றம் செய்யவோ அல்லது கம்ப்யயூட்டரில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு தரவுகளை பரிமாற்றம் செய்வது கடின வழிமுறையாக இருந்தது. முன்னதாக ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரை யு.எஸ்.பி. கேபிளுடன் இணைத்து, பின் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது என நினைப்பர். இதேபோன்று தகவல்களை பரிமாற்றம் செய்ய ப்ளூடூத் பயன்படுத்தலாம். எனினும், இவ்வாறு செய்து முடிக்க அதிக நேரம் ஆகும்.

ஆண்ட்ராய்டு -விண்டோஸ் இயங்குதளங்களில் ஃபைல் ஷேரிங் செய்ய இலவச செயலிகள்

தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிடையே தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்ய சில இலவச செயலிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இலவச செயலிகளை கொண்டு விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

ஒற்றை தகவலை பரிமாற்றம் செய்வதில் துவங்கி, அதிகளவு தகவல்களை பரிமாற்றம் செய்வது வரை அனைத்தையும் மிக எளிமையாக செய்து விட முடியும்.


விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய ஃபீம் பயன்படுத்துவது எப்படி?

Feem v4 செயலியை கொண்டு தரவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ தரவுகள் மற்றும் செயலிகளை இலவசமாக பரிமாற்றம் செய்யலாம். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் சாதனங்களில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும்.


இரண்டு சாதனங்களும் ஒரே வைபை நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ப்ளூடூத் தொழில்நுட்பத்தை விட 50 மடங்கு மற்றும் டிராப் பாக்ஸ்-ஐ விட இருமடங்கு வேகமாக இந்த செயலியை கொண்டு தகவல் பரிமாற்றம் செய்யலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இலவச செயலியில் அதிகளவு விளம்பரங்கள் இடையூறை ஏற்படுத்தும். இதில் இருந்து தப்பிக்க நினைப்போர் செயலிக்கு கட்டணம் செலுத்தி விளம்பரம் இன்றி பயன்படுத்தலாம்.

Feem பயன்படுத்தி : விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

Feem பயன்படுத்தி : விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

- முதலில் Feem v4 செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

- இன்ஸ்டால் செய்ததும், இரு சாதனங்களையும் ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- இந்த செயலி விண்டோஸ் கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பெயரிட சொல்லும்.

- இரு செயலிகளிலும் ஆண்ட்ராய்டு / விண்டோஸ் சாதனத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி ஒற்றை அல்லது பல்வேறு தரவுகளை பரிமாற்றம் செய்யலாம்.

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏர்டிராய்டு மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏர்டிராய்டு மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

Feem v4 போன்றே AirDroid செயலி கொண்டும் தரவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ தரவுகள் மற்றும் செயலிகளை இலவசமாக பரிமாற்றம் செய்யலாம். பல்வேறு தரவுகளை ஒரே சமயத்தில் பரிமாற்றம் செய்வதோடு, குறுந்தகவல் அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது. Feem போன்றே இந்த செயலியிலும் அதிவேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யலாம்.

தரவுகளை பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி ரிமோட் கேமரா வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு போனின் கேமராவை ரிமோட் முறையில் இயக்க முடியும். இந்த செயலியின் இலவச பதிப்பில் விளம்பரங்கள் வருவதோடு 200 எம்.பி. டேட்டா தரவுகளை பரிமாற்றம் செய்ய வழிசெய்கிறது.


ஏர்டிராய்டு மூலம் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?


- ஏர்டிராய்டு செயல்யிலை கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

- செயலிக்கு பதிவு செய்து சைன் இன் செய்ய வேண்டும்.

- இரு சாதனங்களிலும் ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

- ஸ்மார்ட்போன் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டரில் செயலியின் மை டிவைசஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

- நீங்கள் பரிமாற்றம் செய்ய வேண்டிய தரவுகளை டிராக் மற்றும் டிராப் முறையில் பகிர்ந்து கொள்ளலாம்.

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் புஷ்புல்லட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் புஷ்புல்லட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

புஷ்புல்லட் செயலியை கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் தரவுகளை பரிமாற்றம் செய்வதுடன் குறுந்தகவல்களை அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது. எனினும், இதன் வேகம் Feem செயலியை விட சற்றே குறைவாக இருக்கிறது. Feem, போன்று இல்லாமல் புஷ்புல்லட் சேவையில் செயலிகளை பரிமாற்றம் செய்ய முடியாது.

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் புஷ்புல்லட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

- புஷ்புல்லெட் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்ய வேண்டும். புஷ்புல்லட் செயலிக்கான எக்ஸ்டென்ஷன் ஃபயர்ஃபாக்ஸ், க்ரோம் மற்றும் ஒபேரா போன்ற பிரவுசர்களிலும் விண்டோஸ் செயலியாகவும் கிடைக்கிறது.

- ஃபேஸ்புக் அல்லது கூகுள் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்ய வேண்டும். ஒரே அக்கவுண்ட் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டும்.

- ஆண்ட்ராய்டு செயலியில் போனின் நோட்டிஃபிகேஷன்களை கம்ப்யூட்டரில் பார்க்க வேண்டுமா என்ற கேள்வி வரும். இத்துடன் இதேபோன்ற கேள்விகள் திரையில் தோன்றும். இவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும்.

- ஆண்ட்ராய்டு செயலியில் ரிமோட் ஃபைல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதேபோன்று விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் தோன்றும். இனி விண்டோஸ் செயலியில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தெரியும்.

- இனி அட்டாச் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்து பரிமாற்றம் செய்ய வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

- கம்ப்யூட்டரில் தரவுகளை சரிபார்த்து பின் அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

யுவர் போன் ஆப் மூலம் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

யுவர் போன் ஆப் மூலம் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்வது எப்படி?

யுவர் போன் ஆப் மைக்ரோசாப்ட் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்கான அப்டேட் விண்டோஸ் 10 2018 அக்டோபரில் வழங்கப்பட்டது. இதை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் டெக்ஸ்ட்களை இயக்க முடியும். எனினும், இந்த செயலியில் அதிகபட்சம் 25 சமீபத்திய புகைப்படங்கள், ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவை மட்டுமே தெரியும்.

இந்த செயலியை கொண்டு பல்வேறு தரவுகளை ஒரே சமயத்தில் பரிமாற்றம் செய்ய முடியாது. இத்துடன், இதில் சமீபத்திய குறுந்தகவல்கள் மட்டுமே தெரியும். இதை கொண்டு புகைப்படங்களை மட்டுமே பரிமாற்றம் செய்யலாம்.

- யுவர் போன் செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

- உங்களது நாட்டின் குறியீடு மற்றும் மொபைல் நம்பரை விண்டோஸ் செயலியில் பதிவிட வேண்டும். இதற்கான குறுந்தகவல் உங்களது ஆண்ட்ராய்டு செயலியில் தெரியும்.

- குறுந்தகவலில் வரும் லின்க் பயன்படுத்தி கூகுள் பிளேயில் இருந்து செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

- இன்ஸ்டால் செய்ததும் 'Connect my PC' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் இரு சாதனங்களிலும் சைன் இன் செய்ய வேண்டும்.

- விண்டோஸ் 10 கம்ப்யூட்டரில் யுவர் போன் செயலியை திறக்க வேண்டும்

- இனி உங்களது சமீபத்திய புகைப்படங்கள் அல்லது குறுந்தகவல்களை இயக்க முடியும்.


விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய இதர எளிய வழிமுறைகள்:

மற்ற வழிமுறைகளை பொருத்த வரை டிராப் பாக்ஸ், ஒன்டிரைவ், விடிரான்ஸ்பர், கூகுள் டிரைவ் மற்றும் இதர சேவைகளை குறிப்பிடலாம். இந்த சேவைகளை கொண்டு தகவல்களை கிளவுட் மூலம் இயக்க முடியும். இதற்கு இரு சாதனங்களிலும் முறையான மின்னஞ்சல் முகவரியில் சைன் இன் செய்திருக்க வேண்டும். இவற்றில் வரம்பற்ற மெமரி வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to Share Files Between Android and Windows Using Free Apps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X