ரிலையன்ஸ் ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கியதும் இதை செய்தீர்களா?

ஜியோஃபை சாதனத்தை பயன்படுத்த உங்களிடம் கட்டாயம் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு இருக்க வேண்டும்.

|

இன்டர்நெட் பயன்பாடு நாடு முழுக்க பன்மடங்கு அதிகரித்து இருக்கும் நிலையில் உங்கள் பங்கிற்கு நீங்களும் அதனை அதிகரிக்க வேண்டுமா? வீடு மட்டுமின்றி நீங்கள் பயணிக்கும் அனைத்து பகுதிகளிலும் கையோடு அதிவேக இன்டர்நெட் கொண்டு செல்லவே ரிலையன்ஸ் ஜியோ ஜியோஃபை எனும் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

ஜியோஃபை 4ஜி ஹாட்ஸ்பாட் செட்டப் செய்வது எப்படி?

கையளவு இருக்கும் இந்த சாதனத்தில் புத்தம் புதிய ஜியோ சிம்-ஐ செருகினால் வேலை முடிந்தது. உங்களது ஸ்மார்ட்போனில் துவங்கி, லேப்டாப், டேப்லெட் மற்றும் வைபை வசதி கொண்ட மற்ற சாதனங்களிலும் அதிவேக 4ஜி டேட்டா பயன்படுத்த முடியும்.

ஜியோஃபை சாதனத்தின் சிறப்பம்சங்களில் மிகமுக்கியமானதாக இருப்பது, இந்த சாதனம் ஒரே சமயத்தில் பத்து இதர சாதனங்களுக்கு இணைய வசதியை வழங்க முடியும் என்பதே. ரவுட்டர் பயன்படுத்தாமல் நீங்கள் செல்லும் இடங்களில் அதிவேக இணைய வசதியை மிக எளிமையாக ஜியோஃபை வழங்கிவிடும். புத்தம் புதிய ஜியோஃபை சாதனத்தை எவ்வாறு செட்டப் செய்து, பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 ஜியோ சிம் கார்டு

ஜியோ சிம் கார்டு

ஜியோஃபை சாதனத்தை பயன்படுத்த உங்களிடம் கட்டாயம் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு இருக்க வேண்டும். உங்களிடம் ஜியோ சிம் இல்லையெனில் புதிதாய் ஜியோ சிம் வாங்க வேண்டும்.

கடவுச்சொல்

கடவுச்சொல்

நீங்கள் வாங்கும் ஜியோஃபை சாதனத்தின் எஸ்எஸ்ஐடி (SSID) மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவை சாதனத்தில் இருக்கும் சிம் டிரேயில் பார்க்க முடியும். ஜியோ சிம் கார்டினை வைபை நெட்வொர்க் உடன் இணைக்க இது அவசியமாகும். இனி உங்களின் எஸ்எஸ்ஐடி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சார்ஜ் செய்யவும்

சார்ஜ் செய்யவும்

ஜியோஃபை சாதனத்தில் பேட்டரியை செருகி சிறிது நேரத்திற்கு சாதனத்தை சார்ஜ் செய்ய வேண்டும். சில மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்தும் அளவு சாதனத்தை சார்ஜ் செய்யுங்கள்.

மின்விளக்கு

மின்விளக்கு

சார்ஜ் செய்ய ஆரம்பித்ததும், சில நிமிடங்கள் கழித்து வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் சாதனத்தின் பவர் பட்டனை அழுத்த வேண்டும்.

வைபை நெட்வொர்க்

வைபை நெட்வொர்க்

ரிலையன்ஸ் ஜியோஃபை சாதனத்தை செட்டப் செய்து முடித்ததும், நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்த உங்களின் எஸ்எஸ்ஐடி பெயரை தேட வேண்டும். இனி உங்களது கடவுச்சொல் கொண்டு லாக் இன் செய்யலாம்.

 தகவல்களை மாற்றவும்

தகவல்களை மாற்றவும்

ஜியோ நெட்வொர்க்கில் இணைந்ததும், ரவுட்டரின் அட்மின் பேனல் சென்று உங்களது தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். அட்மின் பேனல் செல்லாமல் http://jiofi.local.html/ இணைய முகவரி சென்றும் தகவல்களை மாற்ற முடியும்.

Best Mobiles in India

English summary
How to Setup and Connect to the Network with Reliance JioFi 4G Hotspot Device: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X