ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் 'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசர் செட் செய்வது எப்படி?

'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசரை கண்டுபிடிக்க முடியவில்லையா?நாங்கள் உதவுகிறோம்

By Siva
|

இந்தியாவில் தனக்கென ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டத்தை பெற்றுள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய மாடலான ஒன்ப்ளஸ் 3 மாடலில் ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட் அப்டேட் செய்தது. இந்த புதிய அப்டேட் காரணமாக இந்த மாடல் வைத்திருந்த பயனாளிகள் பல புதிய வசதிகளை பெற்றனர்.

ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் 'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசர் செட் செய்வது

குறிப்பாக புதிய வகை நோட்டிபிகேசன், செட்டிங் டிசைன், மல்டி விண்டோ வியூ, நோட்டிபிகேசனில் இருந்து நேரடியாக பதில் அளிக்கும் வசதி, உள்பட பல புதிய வசதிகளை பெற்றவர். ஆனால் ஒருசிலர் எவ்வளவு தேடியும் இந்த மாடலுக்கு கிடைத்துள்ள இன்னொரு புதிய வசதியான ஈக்குவலைசர் (Equalizer) என்னும் புதிய வசதியை பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை

ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் 'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசர் செட் செய்வது

பல பயனாளிகள் இந்த ஈக்குவலைசர் வசதி நமக்கு கிடையாதோ என்று கூட சந்தேகம் அடைந்தனர். ஆனால் இந்த ஈக்குவலைசர் எங்கே இருக்கின்றது, அதை எப்படி இயக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் நபர்களில் ஒருவரா நீங்கள்? அப்படியென்றால் உடனே கீழே படிக்கவும்

டூயல் கர்வ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 835 வசதியுடன் விரைவில் வருகிறது LeEco -வின் அடுத்த மாடல்

ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 என்ற ஓஎஸ் அப்டேட் ஆன பிறகு இந்த ஒன்ப்ளஸ் 3 மாடலில் அப்டேட்டிற்கு முன்னர் ஈக்குவலைசர் என்று இருந்தது தற்போது ஆடியோ டியூனர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வசதி தற்போது செட்டிங்கில் உள்ள சவுண்ட் செக்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வசதியை நீங்கள் உங்கள் ஒன்ப்ளஸ் 3 மாடலில் ஆக்டிவேட் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளை பின்பற்றுங்கள்:

ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் 'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசர் செட் செய்வது

1. புதியதாக ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் அப்டேட் செய்யப்பட்டுள்ள உங்கள் ஒன்ப்ளஸ் 3 மாடலில் முதலில் செட்டிங் பகுதியை ஓப்பன் செய்யுங்கள்

2. பின்னர் செட்டிங்கில் உள்ள சவுண்ட் செக்சனுக்கு செல்லுங்கள்

3. ஈக்குவலைசர் வசதியை ஆன் செய்வதற்கு முன்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் இயர்போன் மாட்டப்பட்டுள்ளதா என்பதை முதலில் பாருங்கள். ஏனெனில் இயர்போன் இருந்தால்தான் ஈக்குவலைசர் வேலை செய்யும்

ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் 'ஒன்ப்ளஸ் 3' மாடலில் ஈக்குவலைசர் செட் செய்வது

4. சவுண்ட் செக்சனில் உள்ள ஆப்சன்களை ஸ்குரோல் செய்து அதில் இருக்கும் ஆடியோ டியூனர் என்பதை தேர்வு செய்து க்ளிக் செய்யுங்கள்

5. இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஈக்குவலைசரை செட் செய்து கொள்ளலம். அதில் ராக், பாப், எலெக்ட்ரானிக், ஜாஸ், மெட்டல் ஆகிய ஆடியோ செட்டிங்ஸ்கள் இருக்கும். உங்களுக்கு பிடித்தமானவற்றை இதில் இருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்

Best Mobiles in India

English summary
If you are unable to find the equalizer in OnePlus 3 running Android 7.0 Nougat, then read out the following step-by-step guide

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X