ஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி?

|

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய அம்சங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இவை பயனரின் தகவல்களை பாதுகாப்பதோடு, மின்னஞ்சல் அனுப்புவோருக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

ஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி?

மேலும் மின்னஞ்சல் சேவையில் அதிகம் பேசப்பட்ட கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) சேர்க்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவோரின் தனியுரிமையை வழங்குகிறது. பெரும்பாலான பயனர்களால் அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருக்கும் இந்த வசதி எவ்வாறு இயங்குகிறது என்றும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கான்ஃபிடென்ஷியல் மோட் என்றால் என்ன?

கான்ஃபிடென்ஷியல் மோட் என்றால் என்ன?

ஜிமெயில் தளத்தின் புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் பயனர்கள் அனுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பாஸ்கோடு செட் செய்ய முடியும். இத்துடன் அதற்கான வேலிடிட்டி தேதியை செட் செய்தால், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மின்னஞ்சல் தானாகவே அழிந்து விடும்.

காப்பி/பேஸ்ட்

காப்பி/பேஸ்ட்

கூடுதலாக கான்ஃபிடென்ஷியல் மோடில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை பெறுவோர் அவற்றை டவுன்லோடு, காப்பி/பேஸ்ட், ஃபார்வேர்டு மற்றும் ப்ரின்ட் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாது. எனினும் இதனை ஸ்கிரீன்ஷாட் அல்லது புகைப்படம் எடுக்க முடியும்.

ஜிமெயிலில் சைன்-இன்

ஜிமெயிலில் சைன்-இன்

ஜிமெயிலில் சைன்-இன் செய்யும் போது வழக்கமான தளம் திறக்கும், இங்கு பயனர்கள் Try New Gmail என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், புதிய ஜிமெயில் தளம் மற்றும் கான்ஃபிடென்ஷியல் மோட் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். புதிய இன்டர்ஃபேஸ் திறக்க சற்று நேரம் ஆகும் என்பதால் அதுவரை பயனர்கள் காத்திருக்க வேண்டும்.

கான்ஃபிடென்ஷியல் மோடில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

கான்ஃபிடென்ஷியல் மோடில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

புதிய ஜிமெயில் இன்டர்ஃபேஸ் திறந்ததும் பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்:

* முதலில் கம்போஸ் (Compose) பட்டை க்ளிக் செய்ய வேண்டும்.

* திரையின் கீழ் காணப்படும் டர்ன் ஆன் கான்ஃபிடென்ஷியல் மோட் (Turn on confidential mode) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் கடிகாரம் அல்லது பூட்டு ஐகான் கொண்டிருக்கும்.

* இனி மின்னஞ்சல் தானாக அழிக்கப்பட வேண்டிய தேதி மற்றும் நேரம் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை குறிப்பிடச் செய்யும் ஆப்ஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த மின்னஞ்சலில் அனுப்பப்படும் அட்டாச்மென்ட்களையும் டவுன்லோடு செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* பாஸ்கோடு செட் செய்ய வேண்டும். ஒருவேளை செட் செய்யப்படாத பட்சத்தில் நீங்கள் அனுப்புவோர் மின்னஞ்சலை பாஸ்கோடு இல்லாமல் நேரடியாக திறக்க முடியும். ஜிமெயில் பயன்படுத்தாதோருக்கு பாஸ்கோடு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். எஸ்எம்எஸ் பாஸ்கோடு (SMS passcode) ஆப்ஷனை தேர்வு செய்திருப்பின், மின்னஞ்சல் பெறுவோருக்கு பாஸ்கோடு எஸ்எம்எஸ் மூலம அனுப்பப்படும். இங்கு மின்னஞ்சலை பெறுவோரின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இனி சேவ் (Save') ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்த அம்சம் கொண்டு வரும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

இந்த அம்சம் கொண்டு வரும் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

இணைய வல்லுநர்கள் ஜிமெயிலின் இந்த வசதி, தீயவர்கள் மற்றவர்களை அச்சுறுத்தவோ அல்லது பாதிக்கச் செய்ய இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இதனால் எவ்வித ஆதாரமும் இன்றி தீயவர்கள் தங்களை தவறை அரங்கேற்ற முடியும். எனினும் கான்ஃபிடென்ஷியல் மோட் வழங்கும் வசதியானது, இந்த அம்சம் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்புவோரின் தகவல்களை அதனை பெறுவோரின் இன்பாக்ஸ்-இல் பதிவு செய்து வைக்கும்.

 ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீன்ஷாட்

இதனால் பாதிப்படைய செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகவல்களை சேகரிக்கும் பட்சத்தில் அதனை அனுப்பியவரின் தகவல்களை மிக எளிமையாக ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு அவர்களை பிளாக் செய்ய முடியும். மேலும் கூகுளிடம் முறையிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to send self destructing confidential emails on Gmail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X