வாட்ஸ்ஆப்பில் 16 எம்பிக்கும் அதிகமான மீடியாவை அனுப்பவதெப்படி.?

Written By:

1ஜிபி அளவிலான ஒரு மீடியாவை வாட்ஸ்ஆப்மூலம் அனுப்புதல் என்பதுநடக்க இயலாத ஒரு காரியமாக தோன்றலாம். நிச்சயமாக இந்த அளவிலான மீடியாவை பகிர வேகமான தரவும் நிறைய நேரமும் தேவை தான்.

வாட்ஸ்ஆப்பில் 16 எம்பிக்கும் அதிகமான மீடியாவை அனுப்பவதெப்படி.?

எனினும், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் ஒரு கோப்பின் அதிகபட்ச அளவு 16 எம்பி தான் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதை விட அதிகமான அளவு கொண்ட பைல்களையம் பரிமாற்ற முடியும் என்பது முற்றிலும் சாத்தியமான ஒன்று தான் அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

செயல்முறை #01 : உங்கள் டெஸ்க்டாப்பில் ப்ரீ பைல் ஸ்பிலிட்டர் ப்ரோகிராம்தனை இன்ஸ்டால் செய்யவும். அதை பெற இங்கே கிளிக் செய்யவும்.

செயல்முறை #02 : அது நிறுவப்பட்ட பின், நீங்கள் சன்க் (Chunk) எனப்படும் ஒரு ஆப்ஷனை காண்பீர்கள். பின்னர் ப்ரவுஸ் பட்டனை கிளிக் செய்து நீங்கள் பரிமாற விரும்பும் கோப்பை தேர்வு செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ்ஆப்பில் 16 எம்பிக்கும் அதிகமான மீடியாவை அனுப்பவதெப்படி.?

செயல்முறை #03 : டெஸ்டினேஷன் போல்டரில் ப்ரவுஸ் செய்து அனைத்து ஸ்பிலிட் பைல்களையும் ஒரே போல்டரில் சேமிக்கவும்.

செயல்முறை #04 : நீங்கள் சன்க் அளவாய் உள்ளீடு செய்ய வேண்டும். இங்கே அது 16 எம்பி ஆகும்.

செயல்முறை #05 : இப்போது நீங்கள் ஸ்பிலிட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

செயல்முறை #06 : அனைத்து கோப்புகளும் ஸ்பிலிட் செய்யப்பட்ட பின்னர், நீங்கள் அவைகளை வாட்ஸ் ஆப் மூலம் பகிரலாம்.

செயல்முறை #07 : முக்கியமாக உங்கள் மீடியாவை மறுபக்கம் பெறும் நபரும் இதே ப்ரோகிராமை கையாள வேண்டும், ஜாயின் பைல்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

இண்டர்நெட் இல்லாமல் ஓலா, முன்பதிவு செய்வது எப்படி?

Read more about:
English summary
How to Send Files of Any Size on WhatsApp [7 Easy Steps]. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்