உங்களுக்கு பிடித்த பேஸ்புக் பக்க போஸ்ட்கள் மிஸ் ஆகாமல் இருக்கணுமா?

|

உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் இடுகைகளைக் குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

உங்களுக்கு பிடித்த பேஸ்புக் பக்க போஸ்ட்கள் மிஸ் ஆகாமல் இருக்கணுமா?

பேஸ்புக், தனது வழிமுறைகளில் ஒருசில மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் விளைவாக, உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு இடுகையும் தவறாமல் பார்க்க முடியும் என்பதற்கு யாராலும் உத்திரவாதம் அளிக்க முடியாது.

அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தின் எந்தொரு இடுகையையும் தவறவிட நீங்கள் விரும்பாத பட்சத்தில், இடுகைகளைக் குறித்த அறிவிப்புகளைப் பெற ஒரு சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.

உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் இடுகைகளை குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம். மேற்கூறிய இந்தச் செயல்பாடு, இணையதளம் மற்றும் மொபைலுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

எனவே இவ்விரு சாதனங்களிலும் உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைக் குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கு செய்ய வேண்டிய படிகளைக் குறித்து, இந்தக் கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக் பக்கத்தை கம்ப்யூட்டரில் பார்ப்பவராக இருந்தால் செய்ய வேண்டியவை

நீங்கள் பேஸ்புக்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவராக இருக்கும் பட்சத்தில், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு பிடித்த பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைக் காண முடியும்.

படி 1: எந்த பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பெற விரும்புகிறீர்களோ அந்தப் பக்கத்தைத் தேடி, திறந்து கொள்ளவும்.

படி 2: "பின்பற்றுதல்" டேப் மீது சுற்றவும்.

படி 3: "உங்கள் நியூஸ் ஃபீடு" கீழேயுள்ள "முதலில் காட்டு" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

அந்தப் பக்கத்தில் புதிய இடுகைகள் வெளியிடப்படும் போதெல்லாம் அறிவிப்புகளைப் பெற விரும்பினால், இன்னும் இரண்டு படிகளை நீங்கள் செய்ய வேண்டும்.

படி 4: "அறிவிப்புகள்" என்பதை ஒட்டியுள்ள பென்சில் ஐகானை கிளிக் செய்யவும்.

படி 5: "இந்தப் பக்கத்தில் இருந்து காண்பதைத் தேர்ந்தெடு" என்ற வாக்கிய பெட்டி, உங்கள் திரையில் தோன்றும். அதில் "இடுகைகள்" என்று உள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேர்விற்கு ஏற்ப அந்தப் பக்கத்தில் இடுகைகள் வெளியிடப்பட்டால், அதை குறித்த அறிவிப்புகளை நீங்கள் பெற முடியும். "முடிந்தது" என்பதை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு விருப்பமான பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் எந்தொரு இடுகையையும் இனி இழக்கமாட்டீர்கள்.

மொபைல்போனில் பேஸ்புக்கை பயன்படுத்துபவராக இருந்தால் செய்ய வேண்டியவை

உங்கள் மொபைல்போனில் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தினாலும், செயல்பாடு ஏறக்குறைய ஒத்த முறையில் தான் அமைகிறது. ஆயினும் ஒரு துரிதமான வழிகாட்டியை உங்களுக்கு கீழே அளிக்கிறோம்.

படி 1: எந்தப் பக்கத்தில் இருக்கும் இடுகைகளை காண விரும்புகிறீர்களோ, அங்கிருந்து பேஸ்புக் பக்கத்தைத் திறக்கவும்.

படி 2: "பின்பற்றுதல்" மீது கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது "அறிவிப்புகளைப் பெறு" என்பதை செயல்படுத்தி, "உங்கள் நியூஸ் ஃபீடு" பிரிவின் கீழே உள்ள "முதலில் காட்டு" என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, குறிப்பிட்ட பக்கத்தில் புதிய இடுகைகள் வெளியிடப்படும் போது, முதல் 5 இடுகைகள் தொடர்பான அறிவிப்புகளை நீங்கள் பெறலாம். மேலும், உங்கள் நியூஸ் ஃபீடில் மேற்கூறிய இடுகைகளைக் குறித்த அறிவிப்புகள் தான் முதலில் காட்டப்படும்.

இந்தப் பக்கத்தில் இருந்தே அறிவிப்புகளைப் பெற வேண்டும் என்று விரும்பினால், "அறிவிப்புகள் அமைப்பை திருத்து" என்பதை தட்டி, "இடுகைகள்" என்பதன் முன்னால் உள்ள வட்டத்தை டிக் செய்யவும். அதன்பிறகு அந்தப் பக்கத்தில் எப்போது இடுகை வெளியிடப்பட்டாலும், அதை குறித்த அறிவிப்புகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.

அமேசான் இந்தியாவின் யூபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவது எப்படி?அமேசான் இந்தியாவின் யூபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவது எப்படி?

Best Mobiles in India

English summary
Facebook is making few changes in its algorithm. As a result of this, no one can guarantee that you would be able to see every post from your favorite Facebook pages. However, if you don't want to miss any posts from your favorite Facebook page, you need to make few changes to receive the notification of the posts.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X