பிட்காயின் வைத்திருப்பவர்கள் அதனை பாதுகாக்க சில டிப்ஸ்.!

உங்களது பிட்காயின்கள் உங்களை தவிர மற்றவர்கள் இயக்காத நிலையில் இருப்பதே அதிக பாதுகாப்பானது ஆகும்.

|

சர்வதேச சந்தையில் பிட்காயின்களின் மதிப்பு கடந்த ஆண்டுகளில் அதிகளவு வளர்ச்சியடைந்திருப்பது மட்டுமின்றி இவற்றுக்கான ஸ்டோரேஜ் வசதிகளும் அதிகரித்துள்ளன.

எந்த வழிமுறையானாலும், பாதுகாப்பு மற்றும் சவுகரியத்திற்கு எப்போதும் வசதிகள் இருக்கத்தான் செய்கிறது. பாதுகாப்புடன் தனியுரிமையும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், எந்த வழிமுறையிலும் இதை பறிகொடுக்கும் முடிவுகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

உங்களது பிட்காயின்கள் உங்களை தவிர மற்றவர்கள் இயக்காத நிலையில் இருப்பதே அதிக பாதுகாப்பானது ஆகும். பாதுகாப்பு விடயத்தில் பிட்காயின்களை இழப்பதன் மதிப்பை அறிந்து கொள்வதே சிறப்பான வழிமுறையாக இருக்கும்.

பாதுகாப்பை அதிகப்படுத்த சேஃப்கள் மற்றும் வால்ட்களை மேம்படுத்தலாம். லேப்டாப்பை யாருமில்லா பார்க்கிங்-இல் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் வைப்பது, அதிக பாதுகாப்பான கட்டிடத்தில் வைப்பதை விட பாதுகாப்பானதாகும்.

இதேபோன்று என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைலின் பாதுகாப்பு என்க்ரிப்ஷன் கீ எந்தளவு ரேன்டமாக இருக்கிறது என்பதை பொருத்தது ஆகும். பத்து எழுத்துக்கள் உள்ள பாஸ்வேர்டினை சில மணி நேரங்களில் கிராக் செய்ய முடியும் என்ற வகையில், 20 எழுத்துக்கள் உள்ள பாஸ்வேர்டினை கிராக் செய்வது சவாலான காரியமாகும்.

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு அதில் உள்ள ஹார்டுவேர் மற்றும் அப்டேட்களை பொருத்தது ஆகும். புத்தம் புதிய மென்பொருள் கொண்ட ஸ்மார்ட்போனினை ஹேக் செய்ய சில லட்சங்கள் செலவழிக்க வேண்டும் என்ற நிலையில், பழைய ஸ்மார்ட்போன்களை கோளாறுகள் நிறைந்த லின்க் கொண்டே ஹேக் செய்து விட முடியும்.

பிட்காயின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று ஆகும். மொபைல் போன் எந்நேரத்திலும் தொலைந்து போகலாம் அல்லது பாஸ்வேர்டும் எப்போது வேண்டுமானாலும் மறந்து போகலாம். இல்லையெனில் இயற்கை பேரழிவுகளும் சில சமயங்களில் உங்களது விரச்சுவல் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

வசதி:

வசதி:

பாதுகாப்பை விட வசதியை கணக்கிடுவது எளிமையாக இருக்கும். உங்களது காயின்களை செலவழிப்பது எவ்வளவு எளிமையானது, அவற்றை எவ்வளவு சுலபமாக இயக்க முடியும்? ஆன்லைன் வாலெட் மட்டுமே இதற்கு சிறப்பான தேர்வாக இருக்கும். ஆன்லைன் வாலெட் பயன்படுத்த ஏதேனும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் கொண்டு சுலபமாக இயக்கிட முடியும்.

உங்களது மொபைல் போன் பொதுவாக எந்நேரமும் உங்களிடம் இருக்கும் என்பதால் மொபைலில் வாலெட் இன்ஸ்டால் செய்வதும் மிகவும் வசதியான ஆப்ஷனாக இருக்கும்.

பல்வேறு கையெழுத்துக்கள் நிறைந்த பேப்பர் வாலெட்-ஐ பயன்படுத்த பலரையும் ஒன்று திரட்ட வேண்டும், வாலெட்-ஐ மீண்டும் ரீ-அசெம்பிள் செய்ய அதிக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பாதுகாப்பா வசதியா?

பாதுகாப்பா வசதியா?

பாதுகாப்பா அல்லது வசதியா என்று வரும் போது, நீங்கள் மீண்டும் எப்போது உங்களின் தொகையை பயன்படுத்துவீர்கள் என்பதை கொண்டு முடிவெடுக்க வேண்டும். உங்களது பிட்காயின்களை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பீர்கள் எனில் பாதுகாப்பான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்த முடிவை எடுக்கும் முன் இழப்பு குறித்த ரிஸ்க் மற்றும் உங்களின் பாஸ்வேர்டினை நினைவில் வைத்திருப்பது அவசியமாகும்.

ஷாப்பிங் செய்ய பிட்காயின்களை பயன்படுத்துவீர்கள் எனில் உங்களது செலவுக்கு ஏற்ற தொகையை மட்டும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகையை உங்களுடன் மொபைல் போனில் வைத்திருப்பது பயன்படுத்த வசதியாக இருக்கும்.

பிட்காயின்களை ஸ்டோர் செய்ய சிறப்பான கண்ணோட்டம்:

பிட்காயின்களை ஸ்டோர் செய்ய சிறப்பான கண்ணோட்டம்:

பரிமாற்ற எண்ணிக்கை மற்றும் பரிமாற்ற மதிப்பு என இருவிதமாக பிட்காயின் பயன்பாட்டை பார்க்க முடியும். அதிம் அல்லது குறைந்த மதிப்புக்கு ஏற்ப எந்த பிட்காயின் வாலெட் உங்களுக்கு சிறந்தது என்பதை முடிவு செய்யலாம்.

பரிமாற்ற எண்ணிக்கை எனஅபது எந்தளவு பிட்காயின் பரிமாற்றங்கள் மேற்கொள்கிறீர்கள் என்பதாகும். இது வாரத்திற்கு ஒன்று அல்லது தினமும் ஒரு பரிமாற்றம் எனலாம்.

பரிமாற்ற மதிப்பு என்பது குறிப்பிட்ட பரிமாற்றத்தின் பிட்காயின் மதிப்பு ஆகும். உங்களின் பாக்கெட்டில் வசதியாக நீங்கள் எடுத்து செல்லக்கூடிய தொகைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ ஒரு பரிமாற்ற மதிப்பை கணக்கிடலாம். பெரிய தொகை எனில் அவற்றை அதிக மதிப்புடையதாக கருதலாம்.

பல்வேறு பிட்காயின் வாலெட்களை பயன்படுத்தலாம்:

பல்வேறு பிட்காயின் வாலெட்களை பயன்படுத்தலாம்:

எப்போதும் ஒரு தீர்வை மட்டுமே காண வேண்டிய கட்டாயம் கிடையாது. பிட்காயின்களை குறைந்த எண்ணிக்கையில் அடிக்கடியோ, பெரிய தொகைகளிலோ அல்லது நீண்ட கால முதலீடுகள் என பல்வேறு விதங்களில் பிட்காயின்களை பயன்படுத்தலாம்.

பிட்காயின்களை பாதுகாப்பாகவும், சுலபமாகவும் பயன்படுத்த பல்வேறு ஆப்ஷன்களை பின்பற்றுவது சிறப்பானதாக இருக்கும்.

அதிக ஃப்ரீக்வன்சி:

அதிக ஃப்ரீக்வன்சி:

குறைந்த எண்ணிக்கையில் அதிக பரிமாற்றங்களை மேற்கொள்வீர்கள் எனில் மொபைல் வாலெட் பயன்படுத்தலாம்.

மொபைல் வாலெட் மூலம் பிட்காயின்களை எப்போதும் பயன்படுத்த முடியும். அப்டேட் செய்யப்பட்ட இயங்குதளம் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட்போனினை பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்களது பிட்காயின்கள் அதிக பாதுகாப்பாக இருக்கிறது. எனினும் அடிக்கடி தகவல்களை பேக்கப் செய்ய மறவாதீர்கள்.

பிட்காயின்களுக்கு நல்ல மொபைல் வாலெட் எது?

பிட்காயின்களுக்கு நல்ல மொபைல் வாலெட் எது?

சந்தையில் ஏகப்பட்ட பிட்காயின் வாலெட்கள் இருக்கின்றன. இதில் தலைசிறந்த ஒன்றை கண்டறிவது கடினமான விடயம் ஆகும். அந்த வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாலெட்களை டவுன்லோடு செய்து அவற்றை செட்டப் செய்ய வேண்டும். பிட்காயின்களை எங்கு வைக்கலாம் என்பதை முடிவு செய்யும் முன் யூசர் இன்டர்ஃபேஸ்-ஐ நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சூழல்களில் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒரே சமயத்தில் இரண்டு வாலெட்களுக்கு தொகையை அனுப்பவோ வெவ்வேறு வாலெட்களுக்கு பரிமாற்றம் செய்யவும் முடியும்.

கட்டணம்:

கட்டணம்:

பிட்காயின் பரிமாற்றங்களுக்கு பணம் செலவிட வேண்டும், எனினும் சரியான தொகையை கணக்கிடுவது சவாலான காரியமாகும். சில வாலெட்களில் நீங்களே கட்டணத்தை நிர்ணயிக்கும் வசதிகள் வழங்கப்படுகிறது. சிலவற்றில் நீங்கள் தேர்வு செய்ய சில ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

சிறந்த மொபைல் வாலெட்டில் உங்களது தொகையை நீங்களே கட்டுப்படுத்த முடியும்.

எஸ்பிவி சிறந்ததா?

எஸ்பிவி சிறந்ததா?

எஸ்பிவி என்பது சிம்ப்ளிஃபைடு பேமென்ட் வெரிஃபிகே,ன் ஆகும். இந்த தொழில்நுட்பம் உங்களது குறைந்த எடை கொண்ட மொபைல் செயலியை நேரடியாக பிட்காயின் நெட்வொர்க்கில் இணைத்து விடும். இதை செய்ய அதிக நேரம் மற்றும் டேட்டாவை எடுத்துக் கொள்ளும், இதே போன்று உங்களது வாலெட் எந்நேரமும் ஆன்லைனில் இருக்கும். மேலும் எஸ்பிவி வாலெட்கள் நெட்வொர்க் ஃபோர்க் போன்ற சமயங்களில் குழம்பி போகலாம்.

அதிக ஃப்ரீக்வன்சி பரிமாற்றங்கள்:

அதிக ஃப்ரீக்வன்சி பரிமாற்றங்கள்:

வியாபாரம் அல்லது இதர காரணங்களுக்காக அதிக தொகை மதிப்பு கொண்ட பிட்காயின் பரிமாற்றங்களுக்கு ஹார்டுவேர் வாலெட் அவசியம் ஆகும். ஹார்டுவேர் வாலெட்கள் யுஎஸ்பி போன்று காட்சியளிக்கும், இவை உங்களின் பிட்காயின் பிரைவேட் கீ-யை பிரத்யேக சிப் ஒன்றில் வைத்துக் கொள்ளும்.

ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டாலும் உங்களது ஹார்டுவேர் வாலெட்-க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உங்களது ஹார்டுவேர் வாலெட் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்படுவதால், மற்றவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

அதிக மதிப்பு கொண்ட குறைந்த ஃப்ரீக்வன்சி பரிமாற்றங்கள்:

அதிக மதிப்பு கொண்ட குறைந்த ஃப்ரீக்வன்சி பரிமாற்றங்கள்:

அடிக்கடி பயன்படுத்தாத குறிப்பிட்ட தொகை பிட்காயின்களாக வைத்திருப்பவர்களுக்கு பேப்பர் வாலெட் சிறப்பானதாக இருக்கும். பேப்பர் வாலெட் உருவாக்க ஆன்லைன் சேவையை பயன்படுத்தாமல், நீங்களே ஒன்றை உருவாக்க வேண்டும்.

இதில் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக டெயில்ஸ் இயங்குதளம் இருக்கிறது. இந்த இயங்குதளத்தில் பிட்காயின் வாலெட் எலெக்ர்டம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பிளான்கெட் அல்லது டென்ட் சென்று பூட் அப் செய்ததும் பிட்காயின் வாலெட்-ஐ உருவாக்கலாம். சீட்-ஐ பேப்பரில் எழுதி கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து விடலாம்.

டெயில்ஸ் இயங்குதளம் உங்களது டேட்டாவை யுஎஸ்பி-க்கு டிரான்ஸ்ஃபெர் செய்து இன்டெர்னல் ரேம் தகவல்களை அழித்து விடும் என்பதால் உங்களது தகவல்கள் அதிக பாதுகாப்பாகி விடும். உங்களது பேப்பர் பாதுகாப்பாக இருக்கும் வரை பிட்காயின்களும் பாதுகாப்பாக இருக்கும். பேப்பர் தொலைந்தால் அனைத்தும் தொலைந்து விடும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
குறைந்த மதிப்பு கொண்ட குறைந்த ஃப்ரீக்வன்ஸி பரிமாற்றங்கள்:

குறைந்த மதிப்பு கொண்ட குறைந்த ஃப்ரீக்வன்ஸி பரிமாற்றங்கள்:

குறைந்த அளவு பிட்காயின்களை கொண்டு அவற்றை எப்போதாவது பயன்ப்டுத்துவீர்கள் எனில் பிளாக்செயின் போன்ற ஆன்லைன் வாலெட் சேவைகளை பயன்படுத்தலாம்.

மொபைல் வாலெட் போன்று அடிக்கடி சாதனங்களை மாற்றினால் கவலை கொள்ள வேண்டியதில்லை. மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டு மூலம் எந்நேரமும் லாக் இன் செய்ய முடியும். சைன் அப் செய்யும் போது முறையான பாதுகாப்பு அம்சங்களை பூர்த்தி செய்து கணக்கை நீங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். கடினமான பாஸ்வேர்டு மற்றும் பாஸ்வேர்டு மேனேஜர் பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
How to securely store your Bitcoin; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X