உங்களின் வருமான வரி இணைய கணக்கை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

உங்களின் வருமான வரி சார்ந்த அனைத்து விவரங்களையும் இயக்க மத்திய வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் சிறப்பாக இயங்கி வருகிறது.

|

உங்களின் வருமான வரி சார்ந்த அனைத்து விவரங்களையும் இயக்க மத்திய வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் சிறப்பாக இயங்கி வருகிறது.

வருமான வரி இ-பைலிங் அக்கவுண்ட் : பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, வரித்துறை சார்ந்த விண்ணப்பங்களின் நிலை, ஐடி ரிட்டர்ன் விவரங்களை இணையத்தில் சரிபார்ப்பது என பல்வேறு வசதிகளை வருமான வரித்துறை வலைத்தளம் வழங்குகிறது. ஐடி துறை வலைத்தளத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய உங்களின் தகவல்களை நீங்களே வழங்கி இருக்கின்றீர்கள்.

வருமான வரித்துறை சார்பில் உங்களது கணக்கில் உள்ள தகவல்களை பாதுகாக்க சில வழிமுறைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் முதன்மையான ஒன்றாக கடவுச்சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் இருக்கின்றன. இதை அனைவரும் முறையாக செய்திருப்பீர்கள்.


இதைத் தொடர்ந்து உங்களின் வருமான வரித்துறை கணக்கை பாதுகாக்க வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வருமான வரி இ-பைலிங் அக்கவுண்ட் : பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்

வருமான வரி இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?

- முதலில் வருமான வரித்துறை வலைப்பக்கத்தின் உயர் பாதுகாப்பு வலைப்பக்கம் செல்ல வேண்டும், இதனை ப்ரோஃபைல் செட்டிங்ஸ் -- இ-ஃபைலிங் -- ஹையர் செக்யூரிட்டி உள்ளிட்ட ஆப்ஷன்களுக்கு சென்று இயக்க முடியும்.


- இந்த ஆப்ஷனில் இரண்டு வசதிகளை பார்க்க முடியும். ஒன்று உயர் பாதுகாப்பு வழிமுறைகளுடன் லாக் இன் செய்வது (Login with Higher Security Options) , மற்றொன்று பாஸ்வேர்டு மாற்றும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கும் (Lock Reset Password Options).

உயர் பாதுகாப்பு வழிமுறைகளுடன் லாக் இன் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்வோர் அதற்கான வழிமுறைகளை செட் செய்து கொள்ளலாம்.


- இந்த ஆப்ஷனை தேர்வு செய்ததும் தொடரக்கோரும் Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


- இனி முந்தைய ஆப்ஷனை உறுதிப்படுத்தும் திரை பாப் அப் ஆகும். இங்கு OK பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


- மீண்டும் மூன்றாம் வழிமுறைக்கான இணையப்பக்கம் திறக்கும், இங்கும் Proceed ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


- அடுத்த பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த ஆத்தென்டிகேஷனை உறுதி செய்ய வேண்டும். இங்கு Confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


இவ்வாறு செய்ததும் உங்களின் கணக்கில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்பட்டு விடும். அடுத்தமுறை நீங்கள் லாக் இன் செய்யும் போது இரண்டாம் கட்ட ஆத்தென்டிகேஷனை பயன்படுத்த வேண்டும். நெட் பேங்கிங் சார்ந்த லாக் இன்-களில் உங்களின் வங்கி கணக்கு உள்ள நெட் பேங்கிங் போர்டல் சென்று வருமான வரி இ-ஃபைலிங் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


இந்த ஆப்ஷன் முன்னதாக நீங்கள் தேர்வு செய்த பாதுகாப்பு வழிமுறையை பொருத்து மாறுபடும்.

வருமான வரி இ-பைலிங் அக்கவுண்ட் : பாதுகாக்கும் சூப்பர் டிப்ஸ்


வருமான வரித்துறை வலைத்தளத்தில் லாக் பாஸ்வேர்டு ரீசெட் செய்வது எப்படி?

- முதலில் வருமான வரித்துறையின் உயர் பாதுகாப்பு வலைத்தள பக்கம் (Higher Security webpage) செல்ல வேண்டும்.


- லாக் ரீசெட் பாஸ்வேர்டு (Lock Reset Password) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- பாஸ்வேர்டினை நெட் பேங்கிங் மூலம் ரீசெட் செய்யக்கோரும் ஆப்ஷன் ஏற்கனவே எனேபிள் செய்யப்பட்டு இருக்கும். எனினும், இந்த ஆப்ஷனுக்கு மாற்றாக ஆதார் ஓடிபி, அப்லோடு டிஎஸ்சி, பேங்க் அக்கவுன்ட் இவிசி என பல்வேறு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும். நீங்கள் விரும்பும் ஆப்ஷனை கிளிக் செய்ததும் Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.


- அடுத்து நீங்கள் தேர்வு செய்த ஆப்ஷனை உறுதி செய்ய வேண்டும். இங்கு ஆதார் ஓடிபி-க்கனான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


- இனி வலைத்தளத்தில் ஒடிபி பதிவு செய்யக்கோரும். ஒடிபி-யை பதிவு செய்து அதனை உறுதி செயய்வும்.

- அடுத்த ஆப்ஷனில் Confirm கிளிக் செய்ய வேண்டும்.


இவ்வறு செய்ததும் அடுத்த முறை நீங்கள் பாஸ்வேர்டு மாற்றும் போது நீங்கள் தேர்வு செய்த கூடுதல் வழிமுறையை கொண்டு பாஸ்வேர்டு மாற்ற முடியும்.

Best Mobiles in India

English summary
How to Secure Your Income Tax Returns E-Filing Account ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X