வாட்ஸ்அப் மெசேஜ்களை முன்னதாகவே திட்டமிடுவது எப்படி?

  வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்ப முன்னதாகவே திட்டமிட தவறும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறீர்களா? இதற்கு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்கள் உதவுகின்றன.

  வாட்ஸ்அப் மெசேஜ்களை முன்னதாகவே திட்டமிடுவது எப்படி?

  பல தரப்பைச் சேர்ந்த மக்களின் பல வகையான நடப்புகளைக் குறித்து பகிர்ந்து கொள்வதற்கான ஒரே ஊடகமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. மேலும் நமக்கு அன்பானவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ்அப்-பிற்குள் அவ்வப்போது உள்நுழைகிறோம்.

  சரியான நேரத்தில் நம்மை வந்தடையும் ஒருசில மெசேஜ்கள் உண்மையிலேயே அன்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. ஆனால் உங்கள் மெசேஜ்களை அனுப்புவதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்து கொள்ள வாட்ஸ்அப்பில் வாய்ப்பில்லை.

  இதற்கான தேவையைக் குறித்து பயனர்களிடம் கேட்கப்பட்டால், அந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் முக்கியமான நாட்களையும் நிகழ்ச்சிகளையும் மறந்துவிடும் தன்மைக் கொண்ட மக்களுக்கு, இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும்.

  வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்ப முன்னதாகவே திட்டமிட தவறும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறீர்களா? இதற்கு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்கள் உதவுகின்றன.

  ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற நேரம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாளைக் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு செயல்பட உதவும் எண்ணற்ற அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இதில் பெரும்பாலானவை, உங்களுக்கு எந்த தொந்தரவு அளிக்காமல் பணியாற்றுகின்றன.

  முதன்மை வாட்ஸ்அப்ளிகேஷன் உடன் இவை இணைந்து செயலாற்றும் தன்மையைக் கொண்டவை. இந்த வகையில், நாம் 'ஸ்காடிட்'-டை பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்டு மெசேஜ்களை அனுப்ப முடிகிறது.

  ஸ்காடிட் பயன்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்களைத் திட்டமிடுதல்

  ஸ்காடிட் அப்ளிகேஷன் ஏறக்குறைய 13எம்பி அளவை கொண்டது. கூகுள் பிளே ஸ்டோரில் இது கிடைக்கிறது. உங்கள் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏற்கனவே நிறுவியுள்ள சாதனத்தில், இந்த அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து, நிறுவவும்.

  உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

  இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது பேஸ்புக் கணக்கு மூலம் உள்நுழையலாம்.

  உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, திரையின் கீழே உள்ள வாட்ஸ்அப் ஐகானை தட்டும் போது, இந்த அப்ளிகேஷன் அணுகுமுறைக்கான அனுமதியைப் பெற விண்ணப்பிக்கும் கோரிக்கையை எழுப்பும். இந்த அப்ளிகேஷன் தகுந்த முறையில் செயல்படும் வகையில், இதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.

  இது குறித்து உங்களுக்கு எந்தவிதமான மனசஞ்சலமும் இல்லாத பட்சத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்க தயங்க வேண்டிய தேவையில்லை. இதுவரை மேற்கூறிய கோரிக்கையை விடுப்பதன் மூலம் எந்தப் பிரச்சனையும் வந்ததாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால், நீங்கள் தைரியமாக ஒப்புதல் அளிக்கலாம்.

  இதற்கு நீங்கள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டு, பின்னர் உங்கள் மனதை மாற்றிக் கொண்டாலோ அல்லது தவறுதலாக அனுமதி அளிக்க மறுத்துவிட்டாலோ, எந்த பிரச்சனையும் இல்லை. சில எளிய படிகளின் மூலம் அதை மாற்றியமைத்து கொள்ள முடியும்.

  உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அப்ளிகேஷனை இயக்கி, தேவைப்படும் அனுமதியை அங்கிருந்து அளிக்க முடியும்.

  இவைகள் எல்லாம் செய்த பிறகு, அந்த அப்ளிகேஷனை மீண்டும் திறந்து, வாட்ஸ்அப் ஐகான் மீது தட்டவும்.

  Instagram Simple Tips and Tricks (TAMIL)
  மெசேஜ்களை திட்டமிடுதல் இங்கே இருக்கலாம். நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை இங்கே தட்டச்சு செய்து, அதனுடன் அதை யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும். இதன் கடைசி படியாக, இந்த மெசேஜ்ஜை சேமித்து, திட்டமிட்டு கொள்ளலாம். மேலே வலது முனையில் உள்ள "திட்டமிடுதல்" பொத்தானை தட்டி, இதை செய்ய முடியும்.

  பொதுவாக, "கைமுறையாக அனுப்பு" என்ற பொத்தான் செயல்படுத்தப்பட்டு இருக்கும். எனவே மெசேஜ்ஜை அனுப்பும் முன், திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு உதவும் வகையில் அப்ளிகேஷனிடம் இருந்து ஒரு அறிவிப்பு வரும். அதற்கு ஒப்புதல் அளித்த பிறகே, அந்தச் மெசேஜ் அனுப்பப்படும்.

  "கைமுறையாக அனுப்பு" என்ற பொத்தானை முடக்குவதன் மூலம், அது தானாகவே பணியாற்றும்.

  English summary
  A walkthrough which answers the why and how of scheduling messages to be sent through WhatsApp at a specific time.How do you get around the fact that WhatsApp doesn't let you schedule messages? The answer is third-party apps. There are a lot of apps floating around out there which let you schedule messages for a particular instant of time or a specific day.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more