ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி?
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படவில்லை என்பதால், சில சாதனங்களில் செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும்.
ஸ்மார்ட்போன் யுகத்தில் ஞாபக மறதிக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது எனலாம். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு நினைவில் கொள்ள வேண்டியவற்றை ரிமைன்டரில் செட் செய்து ஞாபக மறதி கோளாறை எதிர்கொள்கின்றனர்.

எத்தனை முக்கியமான பணிகள் என்றாலும், பல்வேறு சூழல்களில் அதனை இறுதிக்கட்டத்தில் முடிப்பதையே நம்மில் பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். அவ்வாறு யாருக்கேனும் குறுந்தகவல் அனுப்ப வேண்டியதையும் எந்நேரமும் நம்மால் நினைவில் வைத்திருக்க முடியாது.
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படவில்லை என்பதால், சில சாதனங்களில் செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும்.

டெக்ஸ்ட்ரா (Textra):
கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன, இவற்றை கொண்டு உங்களின் ஸ்மார்ட்போனினை கஸ்டமைஸ் செய்ய முடியும். டெக்ஸ்ட்ரா செயலி உங்களது சாதனத்தில் வழக்கமான குறுந்தகவல் செயலியின் தோற்றம் மற்றும் அனுபவத்தை முற்றிலும் மாற்றிவிடும். இத்துடன் பல்வேறு இதர வசதிகளையும் இந்த செயலி வழங்குகிறது.
செயலியில் குறுந்தகவல் டைப் செய்து முடித்ததும் பிளஸ் ஐகானை க்ளிக் செய்து ஷெட்யூல் டெக்ஸ்ட் (schedule text) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். நீங்கள் ஷெட்யூல் செய்த குறுந்தகவல் பச்சை நிறத்தில் காணப்படும்.
ஷெட்யூல் எஸ்.எம்.எஸ். (Schedule SMS):
கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி குறுந்தகவலை அனுப்பியதும் விளம்பரங்களை காண்பிக்கும். குறுந்தகவல் டைப் செய்து முடித்ததும், பிளஸ் ஐகானை க்ளிக் செய்து அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை செட் செய்து சென்ட் (Send) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செயலி சற்றே பழையதாக காட்சியளிக்கும்.

பல்ஸ் எஸ்.எம்.எஸ். (Pulse SMS):
மற்ற செயலிகளை போன்றே இந்த செயலியும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் யு.ஐ. புதுமையாக இருப்பதோடு, பயன்படுத்த எளிமையாகவும் இருக்கிறது. குறுந்தகவலை ஷெட்யூல் செய்ய டிராப் மெனுவை க்ளிக் செய்து தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு சென்ட் (Send) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இன்-பில்ட் அம்சம்:
சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற போன்களில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்த குறுந்தகவல் பகுதியில் உள்ள மோர் (More) ஐகானை க்ளிக் செய்து ஷெட்யூல் செய்யக்கோரும் ஆப்ஷனை தட்ட வேண்டும்.

ஐஓஎஸ் தளத்தில் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்யக்கோரும் செயலிகள்.
ஷெட்யூல்டு (Scheduled):
செயலியை இன்ஸ்டால் செய்து, குறுந்தகவலை டைப் செய்து, அனுப்பும் முன் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும்.
டிலேட் ஆப் (Delayd app):
குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்ய கிடைக்கும் மற்ற செயலிகளை விட டிலேட் செயலி அதிக முறை டவுன்லோடு செய்யப்பட்டு இருக்கிறது. குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது மட்டுமின்றி தொடர்ச்சியாகவும் செய்யும். இதற்கு குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து தினமும் (daily) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ததும், குறிப்பிட்ட நபருக்கு குறுந்தகவல் அதே நேரத்தில் அனுப்பப்படும். இதே செயலியை கொண்டு மின்னஞ்சல்கள் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்களையும் ஷெட்யூல் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications