மெசேஜ்களை செட்யூல் செய்து அனுப்ப வேண்டுமா?

இந்த பிளாட்பார்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய மேசேஜ்களை டைப் செய்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரையும் குறிப்பிட்டு எந்த நாளில் எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சேமித்துவிடலாம்

|

உங்கள் நண்பருக்கு பிறந்த நாளை மறப்பது, உங்கள் பாஸூக்கு அனுப்ப வேண்டிய முக்கியமான தகவலை அனுப்ப மறப்பது, உங்களுடைய திருமண நாளை ஒவ்வொரு வருடமும் மறப்பது என்பதெல்லாம் சகஜமே. ஏனெனில் மனிதனுக்கு மறதி என்பது இன்றியமையாத ஒன்று. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மறதி இல்லாத மனிதனே இல்லை எனலாம்.

இந்த மாதிரி மறதியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்.

மெசேஜ்களை செட்யூல் செய்து அனுப்ப வேண்டுமா?


டூ இட் லேட்டர்:
ஒரு குறிப்பிட்ட செயலை உடனே செய்யாமல் பிறகு செய்யலாம் என நினைப்பதுண்டு. அதே நேரத்தில் அதை மறக்காமலும் இருக்க வேண்டும். இதற்காக நமக்கு ஐந்து பிளாட்பார்கள் உள்ளன. அவை 1. ஜிமெயில், 2. யாஹூ 3. ஹாட்மெயில், 4. ஃபேஸ்புக் மற்றும் 5..டுவிட்டர்

இந்த பிளாட்பார்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய மேசேஜ்களை டைப் செய்து யாருக்கு அனுப்ப வேண்டுமோ அந்த நபரையும் குறிப்பிட்டு எந்த நாளில் எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சேமித்துவிடலாம். இதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். அதேபோல் இந்த மெசேஜ்கள் அனுப்பப்படும் முன் உங்களின் சம்மதத்தையும் கேட்கும். அப்போது நீங்கள் அதை ஓகே செய்யலாம் அல்லது கேன்சல் செய்யலாம், உங்கள் விருப்பம்தான்.

மெசேஜ்களை செட்யூல் செய்து அனுப்ப வேண்டுமா?


ஆல்பா மெசேஜிங்:
ஆல்பா மேசேஜிங் செயலியும் இதே போன்று மேசேஜ்களை செட்யூல் செய்ய வசதியான ஒரு செயலி ஆகும். இன்கமிங் கால் மற்றும் மெசேஜ்களை இந்த செயலி ஒழுங்குபடுத்தும்.

இந்த செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய நிகழ்ச்சி குறித்தும் பதிவு செய்து கொள்ளலாம். தினமும் ஒரே நேரத்தில் செல்ல வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, வாரம் ஒருமுறை செல்ல வேண்டிய நிகழ்ச்சிகள் என பிரித்து பிரித்தும் நீங்கள் உங்கள் தகவலை சேமித்து வைத்து கொள்ள முடியும்.

மேலும் பலவிதமான மெசேஜ்களை சேமிக்கும் போது வரும் குழப்பத்தை தவிர்க்க ஒவ்வொரு மெசேஜ்க்கும் ஒரு டைட்டில் போட்டு வைத்து கொண்டால் மீண்டும் அவற்றை பார்க்கும்போது புரிதலுக்கு வசதியாக இருக்கும்.

மெசேஜ்களை செட்யூல் செய்து அனுப்ப வேண்டுமா?


செட்யூல் எஸ்.எம்.எஸ்
இந்த செயலியில் இருக்கும் முக்கிய வசதி என்னவெனில் கூகுள் ஸ்பீச் மூலம் மெசேஜ்களை டெக்ஸ்ட் வடிவில் மாற்றிக்கொண்டு பின்னர் சேமித்து கொள்ளலாம்.

மேலும் இந்த செயலியில் சேமிக்கப்படும் மெசேஜ்கள் டெம்ப்ளேட் வடிவில் பகுதிவாரியாக சேமித்து கொள்ளலாம்

ஆனால் அதே நேரத்தில் இந்த செயலியில் ஒரே மெசேஜை ரிப்பீட் செய்யும் முறை இல்லை. மேலும் இந்த செயலியில் விளம்பரங்களும் இடையில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெசேஜ்களை செட்யூல் செய்து அனுப்ப வேண்டுமா?


எஸ்.எம்.எஸ் பிளானிங்:
இந்த செயலியில் நமக்கு தொல்லை தரும் எந்த விளம்பரமும் இன்றி எந்தவித குறுக்கீடல்களும் இன்றி இயங்கும் தன்மை உடையது என்பதால் அனைவரும் விரும்பி பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும்

இந்த செயலியில் பதிவு செய்யப்படும் மெசேஜ்கள் சேமிக்கப்படுவதோடு, யாருக்கு எந்த மெசேஜை எப்போது அனுப்பினோம் என்ற தகவலை பார்த்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

மேலும் இந்த செயலியில் ஒரு மேசேஜை ரிப்பீட் செய்ய வேண்டும் என்றால் 5, 10, 15 நிமிட இடைவெளியில் மட்டும் செட்யூல் செய்ய முடியும். நமக்கு தேவையான மணி, நாள் , வாரம், மாதம் போன்ற வகையில் சேமிக்க முடியாது.

Best Mobiles in India

English summary
How to Schedule Messages to Send Automatically ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X