உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுமா.?? வாங்க செக் பண்ணிடலாம்.!

|

உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா.?? ஒரு நாளைக்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்கள் கண்கள் 'விலை கொடுத்தே' ஆக வேண்டும்.

ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து, லாப்-டாப், டேப்ளெட், இ-ரீடர் என அதுவாக இருப்பினும் சரி, எல்லை மீறினால் - கண்ணில் சோர்வு, அரிப்பு , உலர்ந்த தன்மை, மங்கலான பார்வை மற்றும் தலைவலி என - பிரச்சனைகள் உறுதி.

சில எளிய மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் கருவி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடித்தால் உங்கள் கண்களையும் அதன் பார்வை திறனையும் மிக காலம் சக்தி வாய்ந்ததாக நீட்டிக்கலாம், அதற்கான 7 டிப்ஸ்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

டிப்ஸ் #01 :

டிப்ஸ் #01 :

அடிக்கடி இமைத்துக் கொண்டே இருங்கள்.

வறட்சி மற்றும் எரிச்சல்

வறட்சி மற்றும் எரிச்சல்

அடிக்கடி உங்கள் கண்களை இமைப்பதால் ஒளிரும் உங்கள் கண்கள் ஈரப்பதமாகவே இருக்கும், அதனால், கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் குறைக்கிறது.

டிப்ஸ் #02 :

டிப்ஸ் #02 :

கண் கூசும் ஒளிவீச்சை தவிர்த்திடுங்கள்.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

கார்னிங் கொரில்லா கிளாஸ்

ஸ்மார்ட்போனில் இருந்து கிளம்பும் எரிச்சலூட்டும் பிரதிபலிப்பு ஒளியானது கண்ணை கூசும், அதன் அளவை குறைக்க உங்கள் ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் அல்லது ஸ்க்ரீன் ப்ரோடக்டர் ப்ரிம் போன்றவைகளை பயன்படுத்தலாம்.

டிப்ஸ் #03 :

டிப்ஸ் #03 :

போதுமான அளவிற்கு ஒருமுறை இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.

20-20-20 ரூல்

20-20-20 ரூல்

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை 20 நொடிகள் ஊற்று பாருங்கள் உங்கள் கண்களுக்கு அது தான் இடைவெளி, இதைதான் 20-20-20 ரூல் என்பார்கள்.

டிப்ஸ் #04 :

டிப்ஸ் #04 :

ப்ரைட்னஸ் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள்.

பிரச்சினைகளை ஏற்படுத்தும்

பிரச்சினைகளை ஏற்படுத்தும்

உங்கள் ஸ்மார்ட்போன் திரையனாது மிக பிரகாசமாக இருந்தாலும் சரி, மிக இருட்டாக இருந்தாலும் சரி, அது உங்கள் கண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக, உங்கள் கண் பார்வைக்கு ஏற்றது போல 'ப்ரைட்னஸ் செட்' செய்து கொள்ளவது நல்லது.

டிப்ஸ் #05 :

டிப்ஸ் #05 :

டெக்ஸ்ட் சைஸ் மற்றும் காண்ட்ராஸ்ட்டில் மாற்றம் செய்யுங்கள்.

அதிகமான சிரமம்

அதிகமான சிரமம்

மிகவும் சிறிய டெக்ஸ்ட் சைஸ் ஆனது உங்களிடம் இருந்து கூர்மையான பார்வையை எதிர்பார்க்கும். மறுபக்கம் ப்ரைட்னஸ் அதிகமாக இருப்பின் கண்கள் இன்னும் அதிகமான சிரமப்படும். ஆக பெரிய டெக்ஸ்ட் சைஸ் மற்றும் அதிகமான கான்ட்ராஸ்ட் உங்கள் கண்கள் சிரமப்படுவதை அதிக அளவில் குறைக்கும்.

டிப்ஸ் #06 :

டிப்ஸ் #06 :

ஸ்க்ரீன் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

துடைத்துவிட்டு

துடைத்துவிட்டு

கவனச்சிதறலை ஏற்படுத்தும் தூசு, அழுக்கு, அழுக்குத் தடம் அல்லது கைரேகை என எதுவாக இருந்தாலும் சரி, அவைகளை அடிக்கடி துடைத்துவிட்டு உங்கள் ஸ்க்ரீனை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கண் பார்வைக்கு நல்லது.

டிப்ஸ் #07 :

டிப்ஸ் #07 :

உங்களுக்கும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கும் இடையே தூரம் வேண்டும்.

குறைந்தது 16 - 18 அங்குலம்

குறைந்தது 16 - 18 அங்குலம்

பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தில் இருந்து மட்டும் சுமார் 8 அங்குல தூரத்தில் தான் தங்களது ஸ்மார்ட்போன்களை வைத்து பயன்படுத்துகிறார்களாம். இது மிகவும் மோசமான செயல்பாடாகும், குறைந்தது 16 - 18 அங்குலமாவது தேவை.

Best Mobiles in India

English summary
How to Save Your Eyes From Smartphone Strains. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X