ஆன்ட்ராய்டு ஓரியோ ஃபோனில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரையில் இயக்கும் முறை

|

ஆன்ட்ராய்டில் எண்ணற்ற மறைக்கப்பட்ட அம்சங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்நிலையில் ஆன்ட்ராய்டு ஓரியோ ஃபோனில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரையில் (இரண்டாக பிளவுப்பட்ட முறையில்) இயக்குவது எப்படி என்பதை குறித்து படிப்படியான வழிமுறையை இன்று அளிக்க உள்ளோம்.

ஆன்ட்ராய்டு ஓரியோ ஃபோனில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரையில் இயக்கும்

ஆன்ட்ராய்டு சாதனங்களிலேயே இதுவரை கண்டிராத ஒரு சிறந்த அம்சம் என்றால், ஸ்பிலிட் திரை முறையைக் கூறலாம். ஒரு எளிய பணியை முடிக்க, இரு அப்ளிகேஷன்களுக்கு இடையே அல்லாடும் சிரமத்தை போக்க, ஒரே திரையில் இரு அப்ளிகேஷன்களைப் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயக்கும் வசதி கிடைக்காதா? என்று ஒவ்வொரு ஆன்ட்ராய்டு பயனரும் ஏங்கின காலம் இருந்தது.

ஆன்ட்ராய்டு ஓரியோவின் புதுப்பிப்பை அளித்த கூகுள் நிறுவனம், மேற்கண்ட இந்த ஏக்கத்திற்கு விடைக் கிடைக்க செய்துள்ளது. உலகம் எங்கும் உள்ள எல்லா ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் இந்த வசதியை படிப்படியாக கொண்டு வருவதில், அந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.

மேற்கண்ட இந்த அம்சம் மிகவும் பயனுள்ள ஒன்று என்றாலும், அது இன்னும் முழுமையானது என்று கூற முடியாது. ஏனெனில் தற்போது பயன்பாட்டில் உள்ள எல்லா அப்ளிகேஷன்களும், இந்த ஸ்பிலிட் திரை முறையில் இயக்க முடிவதில்லை. இதனால் இந்த அம்சத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், குறிப்பிட்ட அப்ளிகேஷன்களுக்குள் ஆன்ட்ராய்டு பயனர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, ஒரே நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை பயனர்களால் ஒரு முறை மட்டுமே இயக்க முடியும்.

இந்நிலையில் ஆன்ட்ராய்டு ஓரியோவில் ஒரே அப்ளிகேஷனை ஸ்பிலிட் திரை முறையை பயன்படுத்தி, இரு திரைகளில் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், கீழ்க்காணும் படிகளை நீங்கள் பின்பற்றலாம். கீழ்க்காணும் படிபடியான வழிமுறையின் மூலம் ஒரே அப்ளிகேஷனை, ஒரே நேரத்தில் இரு வேறு திரைகளில் உங்களால் இயக்க முடியும்.

படி 1: உங்கள் ஃபோனில் பெரலல் விண்டோஸை (ஒத்த விண்டோஸ்) பதிவிறக்கம் செய்து, நிறுவ வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய இதை, உங்கள் ஆன்ட்ராய்டு சாதனத்தில் நிறுவி கொள்ள வேண்டும்.

படி 2: இந்த அப்ளிகேஷனைத் திறந்த உடன், எண்ணற்ற பகுதிகளில் அனுமதி அளிக்குமாறு கேட்பதை திரையில் காணலாம். இந்த அப்ளிகேஷனுக்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டியுள்ளது.

அதன்பிறகு இந்த அப்ளிகேஷனை பிஐபி முறையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பான பாப்அப் வந்துள்ளதா என்று செக்பாக்ஸில் பார்க்க வேண்டும். அதன்பிறகு தொடர்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: அதன்பிறகு இந்த அப்ளிகேஷனைத் திறந்தால், உங்கள் சாதனத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் பட்டியலைத் திரையில் காட்டும். ஸ்பிலிட் முறையில் பயன்படுத்த வேண்டிய அப்ளிகேஷனை இயக்கி, அளிக்கப்பட்டுள்ள தேர்வுகளின் மூலம் அதை இரண்டாகப் பிரித்து கொள்ளவும். இரண்டாக பிரிப்பதன் மூலம் பெரலல் விண்டோஸில் ஒரு அப்ளிகேஷனின் வெவ்வேறு நகல்கள் உருவாக்கத்தை தவிர்க்க முடியும்.

படி 4: இந்த அப்ளிகேஷன் மூலம் ஸ்பிலிட் திரை முறையில் நீங்கள் தேர்ந்தெடுத்த ஏதாவது ஒரு அப்ளிகேஷனின் இரண்டாகப் பிரித்ததை இயக்கி, விண்டோவின் மற்றொரு பகுதியில் பெரலல் விண்டோஸின் தேர்ந்தெடுப்பதைத் தேர்வு செய்யவும். இந்த அப்ளிகேஷனைத் திறந்து, ஏற்கனவே நீங்கள் உருவாக்கி உள்ள இந்த அப்ளிகேஷனின் இரண்டாகப் பிரித்த பதிப்பை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

திரையின் மற்றொரு பகுதியிலும் அதே அப்ளிகேஷனை தேர்ந்தெடுத்து கொள்ளவும், அவ்வளவுத் தான். தற்போது ஒரே அப்ளிகேஷனை இரு வேறு பேனல்களில் ஒரே நேரத்தில் உங்களால் இயக்க முடியும்.

இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ் விற்பனை: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 & எஸ்9 ப்ளஸ் விற்பனை: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

Best Mobiles in India

English summary
Android is full of hidden features. Today we give you a step-by-step guide to run the same app in split screen on any Android Oreo phone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X