இது தெரியாம போச்சே.. UPI வழியாக ரூ.1 அல்லது ரூ.2 அனுப்பியது உண்டா? அப்போ App-ல் இதை கவனிங்க!
யுபிஐ (UPI) ஆப்கள் ஆன கூகுள் பே (Google Pay) அல்லது போன்பே (PhonePe) வழியாக நீங்கள் எத்தனையோ வகையான கட்டணங்களை செலுத்தி இருப்பீர்கள். அவைகளில், 1 மாதத்திற்கு ரூ.1 மட்டுமே அல்லது 3 மாதங்களுக்கு ரூ.2 மட்டுமே என்று கூறி.. ஃப்ரீ ட்ரையல் (Free Trial) என்கிற விளம்பர சலுகையின் கீழ்.. 1 அல்லது 2 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளீர்க்களா?
ஆம் என்றால் இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். ரூ.1 அல்லது ரூ.2 என்கிற தொகை சிறியதாக தோன்றலாம். ஆனால் பல பயனர்களுக்கு, இது அவர்கள் விரும்பாத அல்லது தொடர திட்டமிடாத மாதாந்திர கட்டண பிடித்தங்களின் (monthly deductions) தொடக்கமாக அமைந்துவிடக்கூடும்.

ஓடிடி (OTT) தளம், மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை, ஏஐ டூல் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா என எதுவாக இருந்தாலும், பல டிஜிட்டல் சேவைகள் பதிவு செய்யும்போதே பயனர்களை யுபிஐ ஆட்டோபே (UPI AutoPay) அனுமதியை வழங்க கோருகின்றன. இந்த அனுமதி வழங்கப்பட்டதும், அந்த அனுமதியை ரத்து செய்யாவிட்டால், ரூ.1 க்கு அல்லது ரூ.2 க்கு கிடைக்கும் ஃப்ரீ ட்ரையல் காலம் முடிந்த பிறகு, அந்தந்த சேவை வழங்குநரால் சந்தா கட்டணத்தை தானாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
இத்தகைய கட்டண பிடித்தங்கள் எப்போதுமே ஒரு மோசடியாக இருக்காது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயனர்கள் முன்பே தொடர் கட்டண முறைக்கு (recurring payment) ஒப்புதல் அளித்திருப்பதால், தொழில்நுட்ப ரீதியாக அவை அங்கீகரிக்கப்பட்டவையாகவே கருதப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பல நுகர்வோர்கள் தாங்கள் எதற்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்பதை கவனிக்க தவறிவிடுகிறார்கள் அல்லது அவர்கள் கொடுத்த ஆட்டோபே அனுமதியை அவர்கள் மறந்தே விடுகிறார்கள்.
பேஇன்ஸ்டாகார்ட்டின் (Payinstacard) முழுநேர இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சைகிருஷ்ணா முசுனுருவின் கூற்றுப்படி இது கட்டண முறையில் உள்ள குறைபாடு அல்ல, மாறாக இது விழிப்புணர்வு சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ரூ.200 க்குள் அல்லது ரூ.300 க்குள் செய்யப்படும் சிறிய அளவிலான பிடித்தங்கள் ஆனது பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே மாதாந்திர செலவில் இரண்டற கலந்து விடுகிறது.
குறிப்பாக நுகர்வோர் பொழுதுபோக்கு, ப்ரொடெக்டிவிட்டி சாஃப்ட்வேர் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான பல சந்தாக்களை ஒரே நேரத்தில் ஆக்டிவ் ஆக வைத்திருக்கும் போது, எதற்கு பணம் கழிக்கப்பட்டது என்பதை நிர்வகிக்காமல் போகலாம். சரி இதில் இருந்து தப்பிக்க யுபிஐ வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
பயனர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? தொடர் டிஜிட்டல் பேமண்ட்களை மற்ற வழக்கமான நிதி செலவுகளைப் போலவே கையாளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முசுனூரு மற்றும் பஜாஜின் கூற்றுப்படி, பயனர்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:
1. ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு முறையாவது நீங்கள் பயன்படுத்தும் ஆப்பில் உள்ள யுபிஐ மேன்டேட்களை (ஆட்டோபேக்களை) மதிப்பாய்வு செய்யவும்.
2. அனைத்து ஆட்டோபேகளுக்கும் எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிஃபிகேஷன்களை இயக்கி வைக்கவும்.
3. சம்பந்தப்பட்ட சந்தா அடிப்படையிலான ஆப்பை வெறுமனே நீக்குவதற்கு பதிலாக, இனி தேவைப்படாத சந்தாக்களை ரத்து செய்யவும் மறக்க வேண்டாம்.
இதுபோன்ற கண்ணுக்கு தெரியாத தொடர் கட்டணங்கள் ஆனது வீட்டு செலவுகளை பாதிப்பதைத் தடுக்க, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் சந்தாக்களுக்கு தனி வபேங்க் அக்கவுண்ட்டை பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். கவனிக்கப்படாமல் போகக்கூடிய சிறிய தொடர் பற்றுக்கள் உட்பட, மாதாந்திர வங்கி அறிக்கைகளை கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.


Click it and Unblock the Notifications