ஆண்ட்ராய்டு டிவைசில் இமேஜை சியர்ச் செய்வது எப்படி?

அதுமட்டுமின்றி இந்த தளத்தின் மூலம் உங்கள் மொபைல் போனில் உள்ள கேமிரா மூலம் படம் பிடித்து பின்னர் அந்த படத்தையும் கூகுளில் தேடலாம்.

|

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இமேஜ் சியர்ச் செய்வது குறித்து அனைவரும் அறிந்ததே. கூகுளின் இமேஜ் பக்கம் சென்று அதில் உள்ள கேமிரா ஐகானை க்ளிக் செய்து பின்னர் நமது கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டுள்ள இமேஜையோ அல்லது இமேஜ் யூஆர்.எல்-ஐ பதிவு செய்தோ அந்த இமேஜின் விபரங்களையும், அதேபோன்று இருக்கும் இமேஜ்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு டிவைசில் இமேஜை சியர்ச் செய்வது எப்படி?

இதேபோல் ஆண்ட்ராய்டு டிவைஸ்களிலும் இந்த முறை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் இருப்பது போல் அல்லாமல் இதில் சில வித்தியாசங்கள் உள்ளது. அவை என்ன என்று தற்போது பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு டிவைசில் இமேஜை சியர்ச் செய்வது எப்படி?

குரோம்:
கம்ப்யூட்டரை போல ஒரு இமேஜை டவுன்லோடு செய்து அதன் பின்னர் அந்த இமேஜ் குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இந்த ஆண்ட்ராய்டு டிவைசில் இல்லை. நீங்கள் கூகுள் குரோமில் சியர்ச் செய்து கொண்டிருக்கும்போது ஏதாவது இமேஜை பார்த்து, அந்த இமேஜ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே அந்த இமேஜை அழுத்தி ஹோல்ட் செய்ய வேண்டும். பின்னர் அதில் சில ஆப்சன்கள் தெரியும். அதில் சியர்ச் கூகுள் இமேஜ் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

சுருக்கமாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

1. முதலில் குரோம் ஐகானை அழுத்தி அந்த செயலியை இயக்க வேண்டும்

2. நீங்கள் எந்த இமேஜ் குறித்து சியர்ச் அல்லது தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த இமேஜை அழுத்தி ஹோல்ட் செய்ய வேண்டும்

3. பின்னர் சியர்ச் கூகுள் இமேஜ் என்ற ஆப்சனை பாப் அப் இல் இருந்து தேர்வு செய்யவும்.

ஆண்ட்ராய்டு டிவைசில் இமேஜை சியர்ச் செய்வது எப்படி?

ctrlq.org

நீங்கள் உங்கள் போனில் உள்ள கேலரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இமேஜை சியர்ச் செய்ய விரும்பினால் உங்களுக்கு இந்த ctrlq.org உதவும். இந்த இணையதள முகவரிக்கு சென்று அதன் பின்னர் அதில் உள்ள இமேஜ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அப்லோடு பிக்சர்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்து இமேஜ் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஃபைலுக்கு சென்று தேவையான இமேஜை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் அந்த இமேஜ் போலவே மேட்ச் ஆகும் இமேஜை நீங்கள் தேடி கொள்ளலாம்

அதுமட்டுமின்றி இந்த தளத்தின் மூலம் உங்கள் மொபைல் போனில் உள்ள கேமிரா மூலம் படம் பிடித்து பின்னர் அந்த படத்தையும் கூகுளில் தேடலாம்

1. முதலில் ctrlq.org/google/images என்ற யூ.ஆர்.எல் செல்ல வேண்டும்

2. அப்லோட் பிக்சர்ஸ் என்ற ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்

3. சேமித்து வைக்கப்பட்டுள்ள இமேஜ் ஃபைலுக்கு செல்ல வேண்டும்

4. அதில் தேவையான ஒரு இமேஜை செலக்ட் செய்ய வேண்டும்

5. பின்னர் அந்த இமேஜ் போன்ற பிற இமேஜ்களை காண்பிக்கும் ஷோ மேட்சஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு டிவைசில் இமேஜை சியர்ச் செய்வது எப்படி?

சியர்ஸ் இமேஜ்:

உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் ரிவர்ஸ் இமேஜ்களை தேட வேண்டும் என்றால் அதற்கான செயலியை டவுன்லோடு செய்து கொண்டு உங்கள் நேரத்தை சேமிக்கலாம். சியர்ச் பை இமேஜ் என்ற இந்த செயலி உங்கள் வேலையை எளிதாக்கலாம்

1. முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று சியர்ச் பை இமேஜ் என்ற செயலியை டவுன்லோடு செய்யுங்கள்

2. பின்னர் வலது ஓரத்டில் இருக்கும் + என்ற ஐகானை டேப் செய்யுங்கள்

3. இமேஜ் கேலரியை டேப் செய்யுங்கள்

4. கேலரியில் இருந்து ஒரு இமேஜை செலக்ட் செய்யுங்கள்

5. பின்னர் சியர்ச் பட்டனை அழுத்தினால் உங்களது இமேஜ் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

Best Mobiles in India

English summary
How to reverse search images on Android devices using Google; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X