அமேசானில் வாங்கிய பொருட்களை 'ரிட்டர்ன்" செய்வது எப்படி?

Written By:

அமேசான் பொருத்தவரை மொபைல்,டேப்லெட்டுகள்,மடிக்கணினிகள், டிவி,டிவிடிகள், மற்றும் ஆடைகள் போன்ற அனைத்து பொருட்களையும் குறிப்பிட்ட தள்ளுபடி விலையில் வாங்க முடியும். மேலும் இதில் பணம் செலுத்தும் முறை மிகவும் எளிது, அதனால் அனைத்து மக்களுமே இதில் பொருட்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள்.

அமேசானில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்தால் அதை மாற்றுவது மிகவும் எளிது, ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட செயல்முறைகளைப் பின்பற்றினால் போதும் மிக எளிமையாக ரிட்டர்ன் செய்யமுடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமேசான்:

அமேசான்:

முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரை பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருகிறது.அமேசான் நிறுவனத்தின் தற்போதைய குறிப்புகளின்படி விற்க வேண்டிய பொருட்களின் விபரம் மற்றும் விலையை மட்டும் தெரிவித்தால், அமேசான் நிறுவனமே நேரடியாக வந்து பேக்கிங் மற்றும் டெலிவரியை பார்த்து கொள்ளும். மேலும் அமேசானில் வாங்கிய பொருட்களை 'ரிட்டன்" செய்வது எப்படி? எனப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் அமேசான் வலைதளத்தில் நுழையவேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பெட்டியில் இருக்கும்இ ரிட்டன் செய்யவேண்டிய பகுதியை தேர்ந்தேடுக்கவும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின் வலது புறத்தில் உள்ள ரிட்டன் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

நீங்கள் திரும்ப விரும்பும் தயாரிப்புகளின் வலது பக்கத்தில், கீழே இருந்து ரிட்டன் செய்யவேண்டிய ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்

 வழிமுறை-5:

வழிமுறை-5:

அதன்பின் கீழ்தோன்றும் மெனுவில் தோன்றும் பெட்டியில் பொருளின் சிக்கலை சுருக்கமாக விளக்குங்கள்.

 வழிமுறை-6:

வழிமுறை-6:

அதன்பின் அந்தபகுதியை கிளிக் செய்து தொடரவும்.

வழிமுறை-7:

வழிமுறை-7:

அடுத்த பக்கத்தில் அமேசான் உங்கள் சிக்கலை தீர்க்க வழிவகுக்கும். அதன்பின் பொருட்களை திரும்பபெற ஒரு வழிவகுக்கும் இல்லையென்றால் பணத்தை திரும்பப்பெறலாம்.

 வழிமுறை-8:

வழிமுறை-8:

அடுத்தப் பக்கம் நீங்கள் ரிட்டன் செய்யவேண்டிய நாள் போன்றவற்றைக் குறிப்பிடவேண்டும்.

வழிமுறை-9:

வழிமுறை-9:

மற்றொரு முகவரியில் இருந்து உங்கள் பொருட்களை ரிட்டன் செய்ய நினைத்தால் அந்த முகவரியை தெளிவாக கொடுக்கவும்.

வழிமுறை-10:

வழிமுறை-10:

மீண்டும் செயலாக்கத்தை முடிக்க தயாராக இருக்கும்போது, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க. அமேசான் நீங்கள் திரும்ப விரும்பும் பொருட்களை எடுப்பதற்கு ஒருவரை தேர்ந்தேடுத்து அனுப்பும். அவர் உங்களுக்கு ஒரு ரசீது கொடுப்பார் உங்கள் கணக்கில் பணத்தை திருப்பிச் செலுத்தும் வரையில் அது பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Return Items Purchased on Amazon : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot