Home
How to

ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஏற்படும் செட்டிங்ஸ் பிழையை சரி செய்வது எப்படி?

மென்பொருள் அப்டேட் தவிர கரப்ட் ஆன செயலியை இன்ஸ்டால் செயதாலும் இதுபோன்ற பிரச்சனை எழலாம்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஏதேனும் செட்டிங்களை மாற்ற முயலும் போது, பலரும் "Unfortunately, Settings has stopped" இந்த பிழையை எதிர்கொண்டிருப்பர். இந்த பிழை ஏற்படும் பட்சத்தில் "OK" பட்டனை க்ளிக் செய்வதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாது. இவ்வாறான சூழலில் பிரச்சனையை சரி செய்ய வேறு வழியே இல்லை என பலரும் நினைத்திருக்கின்றனர், ஆனால் இது உண்மையில்லை. பலசமயங்களில் ஆண்டராய்டு சாதனத்தில் ஃபர்ம்வேர் அப்டேட் செய்தபின் இதுபோன்ற பிரச்சனை அதிகம் எழும்.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஏற்படும் செட்டிங்ஸ் பிழையை சரி செய்வது எப்படி?

மென்பொருள் அப்டேட் தவிர கரப்ட் ஆன செயலியை இன்ஸ்டால் செயதாலும் இதுபோன்ற பிரச்சனை எழலாம். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்வது

வழிமுறை 1: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்வது

பலமுறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்தாலே இந்த பிரச்சனை சரியாகி விடும். இதற்கு ஸ்மார்ட்போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆப்ஷனை க்ளிக் செய்தாலும் போன் ரீபூட் ஆகிவிடும்.

வழிமுறை 2: ஸ்மார்ட்போனின் ரேம் சுத்தம் செய்யப்பட வேண்டும்

வழிமுறை 2: ஸ்மார்ட்போனின் ரேம் சுத்தம் செய்யப்பட வேண்டும்

ஸ்மார்ட்போனின் ரேம் போதுமான அளவு இல்லையென்றாலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழலாம். டீஃபால்ட் ரேம் மேனேஜர் ஆப் தவிர, சாதனத்தின் ரேமை அழிக்கலாம். இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளையும் பயன்படுத்தலாம்.

வழிமுறை 3: கேச்சிக்களை அழிப்பது

வழிமுறை 3: கேச்சிக்களை அழிப்பது

ஆண்ட்ராய்டு சாதனத்தில் அதிகளவு கேச்சிகள் நிறைந்திருக்கும் போது சாதனத்தில் கோளாறு ஏற்படலாம். இதனால் ஸ்மார்ட்போனின் கேச்சி மெமரியை அவ்வப்போது அழிக்க வேண்டும். ஸ்மார்ட்போனின் கேச்சிக்களை அழிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

1 - செட்டிங்ஸ் -- அப்ளிகேஷன்ஸ் -- அப்ளிகேஷன் மேனேஜர் -- செட்டிங்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும்.

2 - இனி ஃபோர்ஸ் ஸ்டாப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3 - அடுத்து க்ளியர் கேச்சி பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்யவும்.

வழிமுறை 4: செயலியை அன்-இன்ஸ்டால் செய்யலாம்

வழிமுறை 4: செயலியை அன்-இன்ஸ்டால் செய்யலாம்

ஸ்மார்ட்போனில் நீங்கள் கடைசியாக இன்ஸ்டால் செய்த செயலியை நினைவு கூர்ந்து அதனை அன்-இன்ஸ்டால் செய்யவும். சிலசமயங்களில் அதுபோன்ற செயலிகளும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். இதனால் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வழிமுறை 5: ஃபேக்ட்ரி ரீசெட்

வழிமுறை 5: ஃபேக்ட்ரி ரீசெட்

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் எந்த வழிமுறையும் பயன்தராத பட்சத்தில் ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு செய்யும் போது பிரச்சனை நிச்சயம் சரியாகிவிடும். எனினும், ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் உங்களது மிகமுக்கிய தகவல்களை பேக்கப் செய்து கொள்ள வேண்டும். ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதன் மூலம் உங்களது சாதனங்களில் இருக்கும் அனைத்து விவரங்களும் அழிக்கப்பட்டு விடும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபேக்ட்கி ரீசெட் செய்ய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்.


1 - செட்டிங்ஸ் -- பேக்கப் மற்றும் ரீசெட் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.


2 - இனி ஃபேக்ட்ரி டேட்டா ரீசெட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.


3 - அடுத்து ரீசெட் போன் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

மூன்றாவது வழிமுறையை நிறைவு செய்ததும், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு விடும். இனி உங்களது சாதனம் புதிதாக வாங்கிய நிலையில் காட்சியளிக்கும்.

இந்த தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்று நிச்சயம் பலன் கொடுக்கும். ஃபேக்ட்ரி ரீசெட் செய்யும் முன் கூகுள் பிளே ஸ்டோர் அப்டேட்களை அன்-இன்ஸ்டால் செய்து அவற்றை மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How To Resolve ‘Settings has Stopped’ error on your Android device: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X