ஃபிட்பிட் இருக்கா, அப்போ இதை செய்தீர்களா?

ஃபிட்பிட் ஓஎஸ் 2.1 இயங்குதளத்துக்கான அப்டேட் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த இயங்குதளம் ஃபிட்பிட் ஐயோனிக் மற்றும் வெர்சா மாடல் ஸ்மார்ட்வாட்ச்களில் இயங்குகின்றன.

|

ஃபிட்பிட் ஓஎஸ் 2.1 இயங்குதளத்துக்கான அப்டேட் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த இயங்குதளம் ஃபிட்பிட் ஐயோனிக் மற்றும் வெர்சா மாடல் ஸ்மார்ட்வாட்ச்களில் இயங்குகின்றன.

ஃபிட்பிட் மூலம் மெசேஜ் ரிப்ளை செய்வது எப்படி?

உடல்நலத்தை டிராக் செய்யும் அம்சத்தை பெற ஆன்ட்ராய்டு பயனர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றாலும், ஐஓஎஸ் இயங்குதள ப்ரியர்களை ஏங்க வைக்கும் புதிய அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்ப வழி செய்யும் புதிய வசதி ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இனி ஃபிட்பிட் ஐயோனிக் மற்றும் வெர்சா ஸ்மார்ட்வாட்ச்களை பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச் மூலம் நேரடியாக குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்ப முடியும்.

ஃபிட்பிட் மூலம் மெசேஜ் ரிப்ளை செய்வது எப்படி?

வாட்ச்-ஐ அப்டேட் செய்யவும்:
ஸ்மார்ட்வாட்ச்-ஐ அப்டேட் செய்வதற்கான நோட்டிஃபிகேஷன் உங்களுக்கு வரவில்லை என்றாலும், ஃபிட்பிட் செயலியை ஓபன் செய்து நீங்களாகவே புதிய அப்டேட்-ஐ இன்ஸ்டால் செய்யலாம். இதற்கு ஃபிட்பிட் செயலியில் வரும் ப்ராம்ப்ட்களை பின்பற்ற வேண்டும். அப்டேட் செய்யும் போது வாட்ச்-ஐ சார்ஜரில் வைப்பது நல்லது.

கஸ்டம் ரிப்ளை:
ஸ்மார்ட்வாட்ச்-ஐ அப்டேட் செய்ததும், உங்களால் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்ப முடியும். ஃபிட்பிட் சார்பில் ஐந்து ரிப்ளைக்கள் ஏற்கனவே வழங்கப்படுகிறது, எனினும் இவற்றை உங்களால் கஸ்டமைஸ் செய்ய முடியும்.

ஃபிட்பிட் செயலியை திறந்து சாதனத்தின் டிவைஸ் செட்டிங் பக்கத்திற்கு சென்று நோட்டிஃபிகேஷன் -- க்விக் ரிப்ளை (Notifications > Quick Replies) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் இந்த வசதியை சப்போர்ட் செய்யும் செயலிகளை டிஸ்ப்ளேவில் பார்க்க முடியும். இதில் ஒன்றை தேர்வு செய்து உங்களது சொந்த பதிலை டைப் செய்து, பின் செட்டிங்ஸ் பக்கத்தை விட்டு வெளியேறலாம்.

ஃபிட்பிட் மூலம் மெசேஜ் ரிப்ளை செய்வது எப்படி?
ரிப்ளை:
இந்த வசதியை சப்போர்ட் செய்யும் குறுந்தகவல் உங்களுக்கு வரும் போது, ரிப்ளை அல்லது மார்க் அஸ் ரீட் (Reply or Mark as read) என இரண்டு ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். இதில் ரிப்ளை ஆப்ஷனை க்ளிக் செய்து, குறுந்தகவல்களை படித்து பின் உங்களது க்விக் ரிப்ளைக்களை தேர்வு செய்தோ அல்லது இடது புறமாக ஸ்வைப் செய்து ஃபிட்பிட் எமோஜிக்களை தேர்வு செய்யலாம்.

ஃபிட்பிட் வழங்கும் எமோஜிக்களில் ஹெட்பேன்ட்கள் இருந்தாலும், மற்றவர்களுக்கு இவை பார்க்க வழக்கமான எமோஜி போன்றே காட்சியளிக்கும். ரிப்ளை ஆப்ஷனை க்ளிக் செய்ததும், ஃபிட்பிட் செயலி மற்றதை பார்த்துக் கொள்ளும்.

Best Mobiles in India

English summary
How to reply to text messages from your Fitbit ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X