ஹெட்போன் ஜாக் உடைந்து ஸ்மார்ட்போனில் மாட்டி கொண்டதா? சுலபாய் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.!

உலகில் இன்று நாம் பரவலாக பயன்படுத்தி வரும் ஹெட்போன்களுக்கு மூத்த குடி சாதனங்களுக்கு வயது சுமார் 150 ஆவது இருக்கும். அந்த காலத்து ஹெட்போன்கள் அளவில் பெரியதாகவும், அதிக எடையும் கொண்டிருந்தன.

|

உலகில் இன்று நாம் பரவலாக பயன்படுத்தி வரும் ஹெட்போன்களுக்கு மூத்த குடி சாதனங்களுக்கு வயது சுமார் 150 ஆவது இருக்கும். அந்த காலத்து ஹெட்போன்கள் அளவில் பெரியதாகவும், அதிக எடையும் கொண்டிருந்தன.

உடைந்த ஹெட்போன் ஜாக்-ஐ ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்க டிப்ஸ்.!

ஆனால் நவீன காலத்து ஹெட்போன்கள் பல்வேறு வடிவமைப்புகளில், அளவில் சிறியதாகவும், மிக எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. எனினும் ஹெட்போன்களை பயன்படுத்துவதில் சிலருக்கு எப்போதும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.

ஸ்மார்ட்போன் அல்லது இதர மின்சாதனங்களை எந்நேரமும் பயன்படுத்தும் நம்மில் பலருக்கும் ஹெட்போன்கள் நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை. சிலர் தங்களது ஹெட்போன்களை அடிக்கடி தொலைத்து விடுவர், சிலர் அதனை முரட்டுத்தனமாய் பயன்படுத்த முற்பட்டு மீண்டும் அது வேலை செய்யாத படி மாற்றிடுவர். ஏதோ ஞாபகத்தில் ஹெட்போன்களை பாழாக்கி, அதன் ஜாக் ஸ்மார்ட்போனில் மாட்டிக் கொண்டால் எப்படி சரி செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 பிரோ பயன்படுத்தலாம்:

பிரோ பயன்படுத்தலாம்:

ஸ்மார்ட்போனில் ஜாக்-இல் சிக்கியிருக்கும் ஹெட்போனினை மீட்க பிரோவை பயன்படுத்தலாம். சற்று கவனமாக செயல்பட்டால் உடைந்த ஜாக்-ஐ மொபைலில் இருந்து எடுத்து விடலாம்.

இன்க் இல்லாத பகுதியை ஜாக் மீது செலுத்தி மென்மையாக இழுத்தால் ஜாக் மெல்ல வெளியே எடுக்கலாம்.

  உறுதியான பசையை பயன்படுத்தலாம்:

உறுதியான பசையை பயன்படுத்தலாம்:

மொபைலில் சிக்கி கொண்ட உடைந்த ஜாக் பகுதியை நீக்க உறுதியான பசையை பயன்படுத்தலாம். இங்கும் அவசரப்படாமல் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உறுதியான பசை நன்கு பிடித்துக்கொள்ள சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். இதை பயன்படுத்தி ஜாக்-ஐ நீக்கிடலாம்.

உடைந்த ஹெட்போன் பகுதியின் மேல் உறுதியான பசையை வைத்து, அதன் மீது தனியே இருக்கும் ஹெட்போன் பகுதியை ஒட்டவைக்க வேண்டும். இந்த பசை ஒட்டவைக்கும் வரை காத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 நொடிகள் வரை காத்திருந்து அதன் பின் ஹெட்போனினை மீட்க முடியும்.

பின் பயன்படுத்தலாம்:

பின் பயன்படுத்தலாம்:

இயர்போன் ஜாக் அகற்ற பின் சிறப்பாக வேலை செய்யும். இதற்கு முதற்கட்டமாக பின்-ஐ ஜாக் மீது வைத்து நன்கு அழுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது பின் இயர்போன் சாக்கெட் பிளாஸ்டிக் பகுதியை தொடும் போது மென்மையாக வெளியே இழுக்க வேண்டும்.

 பல்குத்தும் குச்சி மற்றும் சூடான பசையை பயன்படுத்தலாம்:

பல்குத்தும் குச்சி மற்றும் சூடான பசையை பயன்படுத்தலாம்:

இதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான பல்குத்தும் குச்சிகளை பயன்படுத்தலாம், எனினும் இயர்போன் ஜாக்-ஐ தொடும் அளவு குச்சியின் நீலம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறிதளவு சூடான பசையை உடைந்த பாகத்தில் வைத்து அதன் மீது பல்குத்தும் குச்சியை வைத்து பசை காயும் வரை காத்திருக்க வேண்டும். இதன் பின் இயர்போன் ஜாக்-ஐ மிக எளிமையாக கழற்ற முடியும்.

பேப்பர்க்ளிப் பயன்படுத்தலாம்:

பேப்பர்க்ளிப் பயன்படுத்தலாம்:

உறுதியான பசை கிடைக்காத பட்சத்தில் பேப்பர்க்ளிப் உங்களுக்கு உதவியாய் இருக்கும். பேப்பர்க்ளிப்-ஐ 90 டிகிரி அளவு வளைக்க வேண்டும். இனி பேப்பர்க்ளிப்-ஐ சூடாக்கி ஹெட்போன் ஜாக் நடுவே செறுக வேண்டும். சில நிமிடங்கள் காத்திருந்து பின் ஹெட்போன் ஜாக்-ஐ வெளியே எடுத்து விடலாம்.

க்ரிப்ஸ்டிக்:

க்ரிப்ஸ்டிக்:

க்ரிப்ஸ்டிக் ஒரு கிக்ஸ்டார்ட்டர் திட்டத்தில் கிடைக்கும் முழுமையான சாதனம் ஆகும். இந்த சாதனம் ஹெட்போன் ஜாக்-களை போன்களில் இருந்து அகற்ற உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை nightek.com மூலம் வாங்க முடியும். இதன் விலை 24.95 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to remove a broken headphone jack from your device ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X