கூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி? சீக்ரெட் டிப்ஸ்.!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் டெஸ் செயலி தற்பொழுது கூகுள் பே என்ற பெயர் மாற்றத்துடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

|
How to get more cash prize via scratch cards on Google Pay - TAMIL

கூகுள் நிறுவனத்தின் கூகுள் டெஸ் செயலி தற்பொழுது கூகுள் பே என்ற பெயர் மாற்றத்துடன் பயன்பாட்டிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் மட்டும் 22 மில்லியன் பயனர்கள் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்ற ஆண்டின் கணக்கின் படி சுமார் 750 மில்லியன் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அத்துடன் சென்ற ஆண்டில் மட்டும் 30 பில்லியன்ற்கும் மேல் பணம், கூகுள் பே செயலி வழி கைமாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே - ஸ்கிராட்ச் கார்டு

கூகுள் பே - ஸ்கிராட்ச் கார்டு

கூகுள் பே செயலியின் சிறப்பம்சம், கூகுள் வழங்கும் ஸ்கிராட்ச் கார்டுகள் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இலவச ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும், அதை ஸ்கிராட்ச் செய்யும்பொழுது நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கு ஏற்ப பணம் பரிசாக வழங்கப்படும்.

ரூ.1,00,000 பரிசு

ரூ.1,00,000 பரிசு

ரூ.500 க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் பொழுது உங்களுக்கு ரூ.1,00,000 ற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை கூகுள் நிறுவனம் வழங்குகிறது. ஆனால் பலருக்கும் பல நேரங்களில் "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று தான் வரும். இந்த வாக்கியம் உங்களின் ஸ்கிராட்ச் கார்டுகளில் வந்தால் உங்களுக்குப் பரிசு இல்லை அடுத்த முறை முயற்சி செய்யவும் என்பது பொருள்.

"பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"

இப்படி "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" வாக்கியம் வராமல் முடிந்த வரை அதிக அளவு பரிசு பணத்தை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம். ஒரு வாரத்திற்கு 5 ஸ்கிராட்ச் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும். முடிந்த வரை அந்த ஸ்கிராட்ச் கார்டுகளை உடனுக்கு உடன் ஸ்கிராட்ச் செய்யாமல் பத்திரமாகச் சேமித்து வையுங்கள். எதற்கென்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு சொல்ரேன் இருங்க.

5 பரிவர்த்தனை 5 ஸ்கிராட்ச் கார்டு

5 பரிவர்த்தனை 5 ஸ்கிராட்ச் கார்டு

ஒவ்வொரு பரிவர்த்தனையின் முடிவிலும் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அனைத்து பரிவர்த்தனிக்கும் ஸ்கிராட்ச் கார்டுகள் வழங்கப்படமாட்டாது. ஒரு வாரத்திற்கு 5 ஸ்கிராட்ச் கார்டுகள் மட்டுமே வழங்கப்படும். கிடைக்கும் ஸ்கிராட்ச் கார்டுகளை நாங்கள் சொல்லும் விதிமுறைகளைப் பின்பற்றி ஸ்கிராட்ச் செய்யுங்கள் நிச்சயம் அதிக அளவில் இலவச பணமும் கிடைக்கும்.

"பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"மை தவிர்ப்பதற்கான செயல்முறை:

- உங்கள் கூகுள் பே அக்கௌன்ட்டில் இருக்கும் 5 வெல்வேறு பயனருக்கு பண பரிவர்த்தனை செய்யுங்கள்.
- உங்களுக்குக் கிடைக்கும் ஸ்கிராட்ச் கார்டுகளை சேர்த்து வையுங்கள்.
- உடனே ஸ்கிராட்ச் செய்யும் பழக்கத்திற்கு ஸ்கிராட்ச் செய்துவிடாதீர்கள்.
- உங்களுக்குக் கிடைத்த ஸ்கிராட்ச் கார்டுகளை நங்கள் சொல்ல போகும் நாள் வரை பத்திரப்படுத்தி வையுங்கள்.
- உங்கள் கூகுள் பே செயலியை, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 12:00 முதல் 12:05 க்குள் ஓபன் செய்யுங்கள்.
- ஒவ்வொரு ஸ்கிராட்ச் கார்டாக இப்பொழுது ஸ்கிராட்ச் செய்யுங்கள்.
- ஒவ்வொரு ஸ்கிராட்ச் கார்டிலும் நிச்சயம் இலவச பணம் கிடைக்கும்.

இந்த முறையைப் பயன்படுத்தி அனைவரும் ஸ்கிராட்ச் கார்டு பரிசுகளை,பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இல்லாமல் பெற்றுக்கொள்ளுங்கள்.

காரணம்

காரணம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஸ்கிராட்ச் செய்வதற்கான காரணம் என்ன?
கூகுள் நிறுவனம், ஒவ்வொரு செய்வ்வாய்கிழமைகளில் மட்டும் தான் தனது நிதியை புதுப்பிக்கிறது. அதனால் தான் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஸ்கிராட்ச் செய்யும் பயனர்களுக்கு அதிக அளவில் பரிசு பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

Best Mobiles in India

English summary
How to Remove Better luck Next time in Scratchcard : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X