ரஜினியின் ரசிகர் மன்ற வெப்சைட்டில் உறுப்பினராக பதிவு செய்வது எப்படி.?
ரசிகர் மன்ற வலைத்தளம் வழியாக ஒருவர் மிக எளிமையான முறையில் (வெறும் 1 நிமிடத்தில்) உறுப்பினராகவும் தன்னை பதிவு செது கொள்ள முடிகிறது. அதெப்படி என்பதை ஸ்க்ரீன்ஷாட் விளக்கப்படங்களுடன், எளிமையான முறையில்
"உண்மை. உழைப்பு. உயர்வு. நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!" - என்று நம்மை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற வலைத்தளம் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்றேடும், பாபா முத்திரை பதித்த லோகோவுடனும் நம்மை வரவேற்கிறது.

அதனை தொடர்ந்து " இந்த இணையதள செயலி மற்றும் வலைதள பக்கத்தில் உங்களை மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும்,நல் ஆதரவுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம். நன்றி! வணக்கம்!" என்ற சில மேலோட்டமான கொள்கைகளையும், தமிழக பின்புல புகைப்படங்களையும் காட்சிப்படுத்துகிறது.

எளிமையான வழிமுறைகளில் விளக்கம்
இந்த ரசிகர் மன்ற வலைத்தளம் வழியாக ஒருவர் மிக எளிமையான முறையில் (வெறும் 1 நிமிடத்தில்) உறுப்பினராகவும் தன்னை பதிவு செது கொள்ள முடிகிறது. அதெப்படி என்பதை ஸ்க்ரீன்ஷாட் விளக்கப்படங்களுடன், எளிமையான முறையில் இங்கே விளக்கப்பட்டுள்ளது. முதலில் https://www.rajinimandram.org/ என்கிற வலைத்தளத்திற்குள் நுழையவும்.

வழிமுறை 01:
குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தினுள் நுழைந்த பின்னர் அங்கு பதிவு செய்க என்கிற பெட்டியை பார்க்க முடியும். அதில் உங்கள் பெயர், மொபைல் எண், அஞ்சல் குறியீடு ஆகியவைகளை பூர்த்தி செய்து நான் ரோபோ அல்ல என்பதை தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

வழிமுறை 02:
பின்னர் நீங்களொரு ரோபோ இல்லை என்பதை உறுதி செய்ய சில சோதனைகள் நிகழ்த்தப்படும். அதில் நீங்கள் வெற்றி அடைந்த பின்னர் உங்கள் வவிவரங்கள் வெற்றிகரமான பதிவு செய்யப்பட்டு உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

வழிமுறை 03:
வெற்றிகரமாக கடவுச்சொல்லை உருவாக்கிய பின்னர் நீங்கள் வலைத்தளத்திற்குள் நுழைவீர்கள். அங்கு மகிழ்ச்சி, புதிய உறுப்பினர் சேர்க்க, மேம்படுத்தல் விவரம் மற்றும் எங்களை தொடர்பு கொள்க போன்ற விருப்பங்ககளுடன், நடிகர் ரஜினி அவரின் அரசியல் பிரவேசம் குறித்த வீடியோ ஒன்றையும் காண முடிகிறது.

வழிமுறை 04:
அதற்கு கீழே, உங்களை பற்றிய கொடுத்தால் விவரங்களை சேர்க்கும் விருப்பங்களும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களை இணைக்கலாம்.

வழிமுறை 05:
அத்துடன் இல்லாமல் உங்களின் வாக்காளர் எண் மற்றும் உங்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் பிற நண்பர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் கல்வி, தொழில் மற்றும் ஏற்கனவே ஒரு ரசிகர் மன்ற உறுப்பினரா போன்றே கேள்விகளையும் வலைத்தளத்தில் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications