ஐஓஎஸ் வரம்பை விட ஐபோனின் ஒளிர்வை குறைப்பது எப்படி?

|

நீங்கள் ஒரு ஐபோன் அடிமையாகி, அதை இடைவெளி இல்லாமல் பயன்படுத்தக் கூடிய ஒரு நபராக இருக்கும் பட்சத்தில், உங்கள் கண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிருஷ்டவசமாக, இரவில் ஐபோனை பயன்படுத்தினால் கூட உங்கள் கண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதில் நைட் ஷிஃப்ட் என்ற அம்சம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் வரம்பை விட ஐபோனின் ஒளிர்வை குறைப்பது எப்படி?

ஆனால், அதுவே ஒரு முழுமையான பாதுகாக்க இருக்கும் என்று இருக்க முடியாது. அப்படியென்றால் நாம் வேறு என்ன செய்யலாம்? இதற்கு பதிலளிக்கும் வகையில், ஐஓஎஸ் வரம்பை விட உங்கள் ஐபோன் திரையின் ஒளிர்வை குறைக்கக் கூடிய ஒரு வழி இருக்கிறது. ஆம், இதற்காக உங்கள் ஃபோனில் சாஃப்ட்வேர்களை நீக்கும் ஜெயில்பிரேக் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் ஃபோன் திரையின் ஒளிர்வு அளவை, குறைந்தபட்ச வரம்பாக குறைக்கும் போது, பகல் நேரத்தில் மட்டுமின்றி ஒரு ஒளி மிகுந்த அறையில் கூட ஃபோன் திரையில் எதையும் உங்களால் காண முடியாது. ஆனால் ஒரு இருண்ட அறையில் உங்கள் ஐபோனை பயன்படுத்தும் போது, சூழ்நிலையே மாறுபடுகிறது.

ஒரு முழுமையான இருண்ட பகுதியில் இருக்கும் போது, உங்கள் ஃபோனில் குறைந்தபட்ச ஒளிர்வாக நீங்கள் அமைத்தாலும், உங்கள் திரை மிகவும் பிரகாசமாக தான் தெரியும். இந்த குறைந்தபட்ச அமைப்பே உங்களுக்கு அதிக ஒளிர்வாக இருக்கும் பட்சத்தில், அந்த அளவிற்கும் குறைவான ஒளிர்வை பெற அணுகல்தன்மை அம்சத்தில் ஒருசில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.

ஐஓஎஸ் குறைந்தபட்ச அளவை விட உங்கள் ஐபோனின் ஒளிர்வை குறைப்பது எப்படி?

உங்கள் ஃபோனின் ஒளிர்வு அளவை மேலும் குறைக்க, ஏதாவது மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை. அமைப்புகளில் மட்டும் நீங்கள் ஒருசில மாற்றங்களைச் செய்தால் போதுமானது. பின்வரும் சில படிகளின் மூலம் நீங்கள் அதை செய்ய முடியும்.

படி 1: முகப்பு திரையில் இருந்து "அமைப்புகளை" திறந்து, "பொது" என்பதன் மீது தட்டவும்.

படி 2: "அணுகல்தன்மை"யைத் தேர்ந்தெடுக்கவும்

படி 3: "விஷன்" அமைப்புகளின் கீழ், "வசதிகளைக் காட்டுதல்" மீது தட்டவும்.

படி 4: "வைட் பாயிண்ட்டை குறைக்கவும்" என்பதை ஆன் செய்யவும். இதன்மூலம் ஒளிரும் நிறங்களின் தீவிரத் தன்மை குறைக்கப்படும்.

படி 5: இப்போது "வைட் பாயிண்ட் குறைக்கவும்" தேர்விற்கு கீழே ஒரு சதவீத ஸ்லைடர் தோன்றுகிறது.

உங்கள் திரையின் ஒளிர்வை குறைக்க அல்லது அதிகரிக்க, இந்த ஸ்லைடரை முன் பின்னுமாக நகர்த்தினால் போதுமானது. ஒரு இருண்ட திரையை பெற வேண்டுமானால், 100% வரை ஸ்லைடரை நகர்த்த வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த ஒளிர்வு அளவு குறைக்கப்படவில்லை என்று தோன்றினால், "கன்ட்ரோல் சென்டரில்" உள்ள முக்கியமான ஒளிர்வு ஸ்லைடரை பயன்படுத்தி, திரையின் ஒளிர்வை மேலும் குறைக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் சரியான ஒளிர்வு அளவை பெற, மேற்கூறிய இரு அமைப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஐஓஎஸ் வரம்பை விட ஐபோனின் ஒளிர்வை குறைப்பது எப்படி?

முடிவுரை

இப்போது நீங்கள் விரும்பிய திரையின் ஒளிர்வு அளவை பெற்றுள்ளீர்கள். நீங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, ஃபோன் திரையின் ஒளிர்வை வேகமாக அதிகரிக்க அல்லது குறைக்க உதவும் வகையில், உங்கள் முகப்பு திரையை அமைத்து கொள்ள வேண்டும்.

இதற்கான குறுக்குவழியை உருவாக்க, மீண்டும் "அணுகல்தன்மை"யின் அமைப்புகளுக்கு சென்று, அங்குள்ள "அணுகல்தன்மை குறுக்குவழி" என்பதை தட்டவும். அதில் "வைட் பாயிண்ட்டை குறைக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் ஃபோனின் முகப்பு பக்கத்திற்கு திரும்பவும். இப்போது உங்கள் முகப்பு திரையின் பொத்தானை மூன்று முறை அழுத்துவதன் மூலம் ஒளிர்வு அம்சத்தை ஆன் மற்றும் ஆஃப் என்று மாற்ற முடியும்.

ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி6 பிளே.!ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி6 பிளே.!

Best Mobiles in India

English summary
If you are an iPhone addict and cannot stop using your iPhone day and night, then you need to take special care of eyes. Luckily, iPhone has the Night Shift feature to protect your eyes when you are using your iPhone during the night, but still, it cannot protect you to full extent. What should you do now?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X