கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது.

|

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது. புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மிகமுக்கிய ஆவணங்கள் என தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்வது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

கணினி, லேப்டாப்களில் அழிந்த தகவல்களை மீட்பது எப்படி?

எனினும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களில் இருக்கும் தகவல்கள் பலமுறை அழிந்துபோவதும், அவற்றை தெரியாமல் அழித்துவிடுவதும் நம்மில் பலர் அவ்வப்போது செய்தும் செயல்தான். பலமுறை நம்மை அறியாமல் தகவல்கள் அழிந்து போகும் நிலையில், சில சமயங்களில் ஹார்டு டிரைவ் கிராஷ் ஆவதோ அல்லது இயங்குதளம் முழுமையாக கிராஷ் ஆகி தகவல்கள் மாயமாகிடும்.


இவ்வாறு ஆகும் பட்சத்தில் அவற்றை மீட்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இவ்வாறு தகவல்களை மீட்கும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்:


- அழிந்து தகவல்கள் அனைத்தையும் மீட்க முடியாது என்றாலும், பெரும்பாலானவற்றை மீட்க முடியும்.

- சமீபத்தில் அழிந்து போன தகவல்களை மிக எளிமையாகவும், இலவசமாகவும் மீட்க முடியும். இவை ஹார்டு டிரைவின் அழிக்கப்பட்ட தகவல்கள் ஃபோல்டரில் புதிதாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்ய முடியும்.

- மேலும் நீங்கள் தவறுதலாக அழித்த அல்லது அழிந்து போன தகவல்களின் ஃபைல் எக்ஸ்டென்ஷன் அறிந்திருந்தால் அவற்றை மிகவும் எளிமையாக மீட்க முடியும்.


பெரும்பாலும் எக்ஸ்டென்ஷன்கள், புகைப்படங்களுக்கு: .jpg, .png, .CR2., gif

வீடியோக்களுக்கு: .mp4, .3gp, .wmv, .mkv

ஆவணங்கள்: .doc, .docx, .ppt, .pptx, .xls, .xlxs, .psd

ஆடியோ தரவுகள்: .mp3, .m4a, .wav, .wma, .flacc


- இதேபோன்று அழிந்து போன தகவல்கள் இருந்த லொகேஷனை அறிந்திருந்தால் மிக வேகமாக அவற்றை மீட்க முடியும்.

கணினி, லேப்டாப்களில் அழிந்த தகவல்களை மீட்பது எப்படி?

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் தேவையான தகவல்களை தயார் செய்திருப்பின், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

வழிமுறை 1: விண்டோஸ் பில்ட்-இன் அம்சம்

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும் பில்ட்-இன் அம்சம் ரீஸ்டோர் தி ப்ரீவியஸ் வெர்ஷன் (Restore the previous version) வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறிப்பிட்ட ஃபோல்டர் அல்லது டிரைவ்களில் ஸ்கேன் செய்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை கண்டறிந்து அவற்றை ரீஸ்டோர் செய்யும்.

இந்த அம்சம் மூலம் தகவல்களை மீட்க என்ன செய்ய வேண்டும்?

1 - கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் பட்டன் கொண்டு This PC ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

2 - அழிந்து போன தரவுகள் இருந்த ஃபோல்டருக்கு செல்ல வேண்டும்.

3 - ஃபோல்டரில் ரைட் க்ளிக் செய்து Restore previous version ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - இனி பட்டியலில் உள்ள ஃபைல் வெர்ஷன்கள் மற்றும் ஃபோல்டர்கள் காணப்படும்.

5 - இதில் வெர்ஷனை க்ளிக் செய்து Restore பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: மூன்றாம் தரப்பு மென்பொருள்பயன்படுத்துவது.
முதல் வழிமுறை வேலை செய்யாத நிலையில், easeUS partition, Recuva, Rescue Pro போன்ற மென்பொருள்களில் ஒன்றை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்து முயற்சிக்கலாம்.

கணினி, லேப்டாப்களில் அழிந்த தகவல்களை மீட்பது எப்படி?

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மென்பொருள்களில் ஒன்றை இன்ஸ்டால் செய்து செய்து தொடர வேண்டும். இங்கு டிரைவ் அல்லது ஃபோல்டரை தேர்வு செய்து ரிக்கவர் (Recover ) மற்றும் ஸ்கேன் (Scan) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், ஃபைல் ஃபார்மேட்-ஐ தேர்வு செய்யாமல் ஸ்கேன் பட்டனை க்ளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட டிரைவ் அல்லது ஃபோல்டரில் உள்ள அனைத்து ஃபார்மேட் தரவுகளையும் ஸ்கேன் செய்யும்.

மென்பொருள் டிரைவ் அல்லது ஃபோல்டரை ஸ்கேன் செய்து முடித்ததும், தரவுகளை கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to recover your lost data from PC laptop : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X