மொபைலில் டெலிட் ஆன அனைத்தையும் எடுக்க வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்.!
ஸ்மார்ட்போனில் நீங்கள் டெலிட் செய்த பல்வேறு கோப்புகள் மற்றும் டேட்டா போன்றவற்றை மிக எளிமையாக எடுக்க முடியும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.
இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் பயன்படும் வகையில் இருக்கிறது. குறிப்பாக மக்கள் பயன்படுத்தும் ஸமார்ட்போன் சாதனங்கள் கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் உபயோகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்மார்ட்போனில் நீங்கள் டெலிட் செய்த பல்வேறு கோப்புகள் மற்றும் டேட்டா போன்றவற்றை மிக எளிமையாக எடுக்க முடியும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது.

குறிப்பாக நீங்கள் ஸ்மார்ட்போனில் கொடுத்த பின்நம்பர், பாஸ்வேர்டு, பேட்டன், போன்றவற்றைக் கூட எளிமையாக நீக்க முடியும், அதற்கு தகுந்த ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. அந்த சாப்ட்வேர் பெயர் என்னவென்றால் dr.fone என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த dr.fone சாப்ட்வேர் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியாது, அதற்கு வேண்டி கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்வதற்கு உங்கள் மொபைலை 'ரூட்" செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த dr.fone சாப்ட்வேர் உபயோகப்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் dr.fone சாப்ட்வேர் அம்சத்தை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்தல் வேண்டும். மேலும் இதன் முகப்பில் பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-2:
அடுத்து dr.fone சாப்ட்வேர் முகப்பு பக்கத்தில் இருக்கும் recover என்பதை கிளிக் செய்தல் வேண்டும், பின்பு அவற்றில் மூன்று ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.

வழிமுறை-3:
அந்த மூன்று ஆப்ஷன்கள் என்னவென்றால்,போன் டேட்டா, எஸ் கார்டு, broken mobile என்று தெரிவிக்கப்படும். அதில் போன் டேட்டா கிளிக் செய்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிட் ஆன புகைப்படம், வீடியோ, கோப்புகள் போன்ற அனைத்தையும் எடுக்க முடியும்.

வழிமுறை-4:
அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் திரும்ப பெற, அவற்றில் உள்ள எஸ்டி கார்டு எனும் வருப்பத்தை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5:
பின்னர் broken mobile என்ற விருப்பம் என்னவென்றால் உங்களிடம் இருக்கும் உடைந்த மொபைலின் டேட்டாவைக் கூட எடுக்க முடியும்.


வழிமுறை-6:
போன் டேட்டா எனும் விருப்பத்தை கிளிக் செய்து டெலிட் ஆன கோப்புகளை எடுக்க குறிப்பாக நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால் யுஎஸ்பி கேபிள் பயன்படுத்த வேண்டும், பின்பு ஸ்மார்ட்போனில் developer options எனும் விருப்பத்தை கிளிக் செய்து usb debugging எனேபிள் செய்ய வேண்டும்.

வழிமுறை-7:
இந்த சாப்ட்வேர் அம்சத்தை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒஎஸ் ரிப்பேர் செய்ய முடியும். பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில்
இருக்கும் டேட்டா அனைத்தையும் இவற்றின் மூலம் அழிக்க முடியும்.


Click it and Unblock the Notifications