வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

சாதாரண போன் அழைப்புகளை காட்டிலும் அதிக நம்பகத்தன்மையுடன் இருப்பதால், தினமும் பல்வேறு வாட்ஸ்ஆப் அழைப்புகளை மேற்கொள்கிறோம்.

|

போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது என்பது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப் கால்களை எப்படி ரெக்கார்ட் செய்வது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். சாதாரண போன் அழைப்புகளை காட்டிலும் அதிக நம்பகத்தன்மையுடன் இருப்பதால், தினமும் பல்வேறு வாட்ஸ்ஆப் அழைப்புகளை மேற்கொள்கிறோம்.

வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

பத்திரிக்கையாளர்கள் போன்றோர் பல்வேறு நபர்களை வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பேட்டியெடுக்கும் போது அவற்றை ரெக்கார்ட் செய்வது என்பது மிகவும் அவசியமானது என்பதால், எப்படி வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் என அறிந்துகொள்வது முக்கியமாகிறது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை. எளிதான வழியை கண்டறிய பல மணிநேர உழைப்பை கொடுத்ததுதான் மிச்சம். பல்வேறு தளங்களில் எப்படி வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது என தேடியபோது, மென்பொருள் வரம்புகள் மற்றும் மென்பொருள் கட்டுப்பாடுகள் தடைகல்லாக இருந்தன.

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ்

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஆனால் அவை இரண்டிலும் ஒரே பிரச்சனை தான்: சில குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே செயல்படும். பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி ரெக்கார்ட் செய்யும் முன்னர், அழைப்பில் உள்ளவர்களிடம் அனுமதி பெற்றிருப்பதையும், நீங்கள் வாழும் நாட்டில் இது சட்டப்பூர்வமானதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

ஐபோன் மற்றும் மேக் பயன்படுத்தி ஆண்ராய்டு/ஐஓஎஸ்-ல் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

ஐபோன் மற்றும் மேக் பயன்படுத்தி ஆண்ராய்டு/ஐஓஎஸ்-ல் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் இந்த எளிய முறையில் மேக் மற்றும் ஐபோன் இரண்டும் தேவை. இதில் முக்கிய பிரச்சனை என்னவெனில், அந்த ஐபோன் உங்களின் முதன்மை போனாக இருக்கக்கூடாது. மேலும் வாட்ஸ்ஆப் அழைப்புகள் செயல்படும் மற்றொரு போனும் தேவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையில் ' ஐபோன்' என்பது அந்த ஐபோனையும், 'உங்கள் போன்' என்பது வாட்ஸ்ஆப் கணக்கு உள்ள மற்றொரு போனையும் குறிக்கும்.

டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்

டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்

#1 லைட்னிங் கேபிளை பயன்படுத்தி ஐபோனை மேக் உடன் இணையுங்கள்.

#2 முதல்முறையாக இவ்விரண்டையும் இணைக்கும் பட்சத்தில், ஐபோனில் 'டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்' ஐ தேர்வுசெய்யவும்.

#3.மேக்கில் 'க்யுக் டைம்' ஐ திறக்கவும்.

#4. பைல்-ல் 'நியு ஆடியோ கனெக்சன்' என்பதை தேர்வு செய்யவும்

#5. குயுக்டைமில் ரெக்கார்ட் பட்டனுக்கு அருகில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்து, ஐபோனை தேர்வுசெய்யவும்.

#6பின்னர் குயிக்டைமில் உள்ள ரெக்கார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.

#7ஐபோனை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் உங்கள் போனிற்கு அழைப்பு மேற்கொள்ளுங்கள்

#8 இணைப்பு ஏற்பட்டவுடன் "ஏட் யூசர்" ஐகானை கிளிக் செய்து, நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்ந்தெடுக்கவும். பின்னர் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

#9 பேசி முடித்தவுடன் அழைப்பை துண்டிக்கவும்.

#10 குயுக்டைமில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு, ,மேக்கில் பைலை சேமிக்கவும்.

முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது

முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது

வாட்ஸ்ஆப் குரூப் காலில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இது தெரியும் என்பதால்,அந்த வாட்ஸ்ஆப் அழைப்புகளை இரகசியமாக ரெக்கார்ட் செய்ய முடியாது. எனவே ரெக்கார்ட் செய்யும்போது முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.

க்யூப் கால் ரெக்கார்டர் பயன்படுத்தி ஆண்ராய்டில் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

க்யூப் கால் ரெக்கார்டர் பயன்படுத்தி ஆண்ராய்டில் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் கால் ரெக்கார்ட் செய்யும் இரு முறைகளும் குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே செயல்படும் என கூறியது நினைவிருக்கிறதா? வன்பொருள் வேறுபாடுகள் மற்றும் மென்பொருள் கட்டுப்பாடுகள் காரணமாக, க்யூப் கால் ரெக்கார்டரின் வாய்ப்(வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோட்டாகால்) அம்சம் குறிப்பிட்ட சில கருவிகளில் மட்டுமே செயல்படும். அந்த கருவிகளின் பட்டியல் இதோ.

https://docs.google.com/spreadsheets/d/1HDrXSLJxrzEsK4Uc6x6ej0TYbc8BnZtc4eIGrPtOwq0/edit#gid=0

ஆனால் இப்பட்டியலில் உள்ள சாம்சங் கேலக்ஸி நோட்8 ல் இதை நாங்கள் பரிசோதித்த நிலையில், இச்செயலி செயல்படவில்லை. உங்கள் கருவி இப்பட்டியலில் இருந்தால் முயற்சித்துப்பாருங்கள்.

#1 க்யூப் கால் ரெக்கார்டர் செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

#2 அச்செயலியை இயக்கிய பின்னர் வாட்ஸ்ஆப் செயலிக்கு சென்று, விரும்பும் நபருக்கு அழைப்பு மேற்கொள்ளுங்கள்.

#3 நீங்கள் பேசும்போது கால் க்யூப் விட்ஜெட் இயங்க துவங்கினால் அது செயல்படுகிறது.

#4 செயல்படவில்லை எனில், க்யூப் கால் ரெக்கார்டர் செயலின் செட்டிங்-ல், "போர்ஸ் வாய்ப் கால் ஏஸ் வாய்ஸ் கால்"-ஐ தேர்வு செய்யவும்.

#6மீண்டும் வாட்ஸ்ஆப் அழைப்பு மேற்கொள்ளும் போது க்யூப் கால் விட்ஜெட்-ஐ இயங்குவதை காணமுடியும்.

#7மீண்டும் இயங்கவில்லை எனில், துருதிஷ்டவசமாக இந்த வசதி உங்கள் போனில் இல்லை.

வாட்ஸ்ஆப் அழைப்புகளை உங்கள் போனில் ரெக்கார்ட் செய்வது எப்படி? (மாற்று வழிமுறை)

வாட்ஸ்ஆப் அழைப்புகளை உங்கள் போனில் ரெக்கார்ட் செய்வது எப்படி? (மாற்று வழிமுறை)

ஆண்ராய்டு பயனர்களுக்கு மட்டும் மூன்றாவதாக ஒரு வழி இருக்கிறது.அது உங்கள் போனை ரூட் செய்வது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழிமுறை பரிந்துரைக்கப்படுவதில்லை எனினும், கண்டிப்பாக வாட்ஸ்ஆப் கால்களை ரெக்கார்ட் செய்ய வேண்டுமெனில் இதை செய்யலாம்.

இம்முறையில் உங்கள் போனை ரூட் செய்த பிறகு, எக்ஸ்டிஏ வாயிலாக கிடைக்கும் எஸ்சிஆர் ஸ்கீரின் ரெக்கார்டர் செயலியை பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யமுடியும்.

Best Mobiles in India

English summary
How to record all WhatsApp calls on your Android smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X