Home
How to

ஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை ரூட் செய்யாமல், அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியாது.

By Meganathan S

கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளமான ஆன்ட்ராய்டு 9 பை ஸ்டேபிள் வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஆன்ட்ராய்டு பை வெளியீட்டைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் சாதனங்கள் மற்றும் எசென்ஷியல் 1 போன்றவற்றுக்கு ஏற்கனவே ஸ்டேபிள் அப்டேட் வழங்கப்படுகின்றன, எனினும் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களுக்கு அப்டேட் வழங்க இருக்கின்றனர்.

ஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

பல்வேறு செயலிகளின் மெட்டீரியல் வடிவமைப்பு மாற்றப்பட்டு, டிஜிட்டல் வெல்பீயிங், ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய இயங்குதளத்தில் அழைப்புகளை ரெக்கார்டு செய்யும் அம்சத்தை கூகுள் நீக்கியுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு பை அப்டேட் மூலம் கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளை தளத்தில் இருந்து முடக்கியுள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவது கடினமாகி இருக்கிறது.

புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை ரூட் செய்யாமல், அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியாது. ஆன்ட்ராய்டு 9 பை பாதுகாப்பு அப்டேட்கள் ஸ்மார்ட்போனின் பின்னணியில் பயனரின் மைக்ரோபோன் மற்றும் கேமரா போன்றவற்றை இயக்கப்படுவதை தடுத்து நிறுத்துகிறது.

ஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

தற்சமயம் வரை ரூட் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் இதுபோன்ற செயலிகள் வேலை செய்யும், எனினும் ரூட் செய்யாமல் இவ்வாறு செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. கால் ரெக்கார்டிங் அம்சத்தை ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் பயன்படுத்த வையர் ஹெட்செட் பயன்படுத்தலாம். வயர் ஹெட்செட் கொண்டு அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளாமல் அதில் இருக்கும் இன்பில்ட் மைக்ரோபோன் மூலம் உரையாடல்களை பதிவு செய்யவும் முடியும். இது படிக்க வசித்திரமாக இருந்தாலும், துல்லியமான ஆடியோவிற்கு இதுவே சிறப்பான வழிமுறையாக இருக்கும்.

வயர் ஹெட்செட் மூலம் அழைப்புகளை பதிவு செய்ய பயனர்கள் முதலில் தங்களது அழைப்புகளுக்கு ஒரு இயர்பட் மூலம் பதில் அளிக்க வேண்டும் மறுபுறம் இருக்கும் மற்றொரு இயர்பட்-ஐ இன்லைன் மைக்ரோபோன் மீது வைக்க வேண்டும். இதனால் பயனரால் அழைப்புகளை ஏற்பதோடு அதனை பதிவு செய்யவும் முடியும்.

ஹெட்செட்டை இயர்பட் அருகே வைப்பது பிடிக்கவில்லை எனில், பயனர்கள் தங்களது அழைப்பினை ஸ்பீக்கர் மோடில் வைத்து மற்றொரு போன் (ஆன்ட்ராய்டு பை இயங்குதளம் இல்லாதது) மூலம் அதனை பதிவு செய்யலாம். இது மிக எளிமையாகவும், எவ்வித கட்டுப்பாடும் இன்றியும் செய்ய முடியும்.

இன்கமிங் அழைப்போ அல்லது அவுட்கோயிங் கால் என்றாலும் பனர்கல் தங்களது வாய்ஸ் ரெக்கார்டர் செயலியை துவக்கி, இரணாடவது சாதனத்தில் அழைப்பினை ஸ்பீக்கரில் வைத்து பேச வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரெக்கார்டிங் செயலி இரண்டு ஆடியோக்களையும் பதிவு செய்யும்.

ஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

விதிகளுக்கு உட்பட்டு அழைப்புகளை ரெக்கார்டு செய்ய வேண்டுமெனில் பயனர்கள் பழைய ஆன்ட்ராய்டு வெர்ஷைனை பயன்படுத்தலாம். தற்சமயம் சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த பிரச்சனை பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
Best Mobiles in India

English summary
How to record calls on Android Pie smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X