Home
How to

ஜியோ ப்ரைம் : ரீசார்ஜ் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி.?

"அடடா.. எனக்கு ரீசார்ஜ் பண்ணுற பழக்கமே மறந்து போச்சே.. இனிமே நாம் எப்படி ரீசார்ஜ் செய்வேன்.??"

By Muthuraj

இன்னும் ஒரு மாதம் கூட முழுதாய் நம் கைகளில் இல்லை, ஜியோவின் இலவச சேவைகள் மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பராக மாற வேண்டும், அதற்கு ஆண்டுதோறும் ரூ.99/- கட்டணம் செலுத்த வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுநாள் வரையிலாக நாம் இலவசமாக அனுபவித்து வந்த சேவைகளை கட்டண திட்டங்களின் கீழ் பெற வேண்டும்.?

ஜியோ ப்ரைம் : ரீசார்ஜ் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது எப்படி.?

"அடடா.. எனக்கு ரீசார்ஜ் பண்ணுற பழக்கமே மறந்து போச்சே.. இனிமே நாம் எப்படி ரீசார்ஜ் செய்வேன்.??" - என்பது தான் உங்களின் எண்ணமெனில் கவலையை விடுங்க.! புதிய ஜியோ ப்ரைம் சேவையின் கீழ் எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டுமென்பது பெரும்பான்மையினருக்கு தெரியாது தான், இப்போது தெரிந்துகொள்வோம்.!

1. ரிலையன்ஸ் ஜியோ சிம் பொருத்தப்பட்ட உங்கள் சாதனத்தில் மைஜியோ பயன்பாட்டை திறக்கவும்.
2. ஒருவேளை நீங்கள் அப்டேட் செய்யாத ஆப்பை பயன்படுத்தினால், அப்டேட் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். அதை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளவும்.
3. அடுத்த திரையில், நீங்கள் நிறுவிய ஜியோ பயன்பாடுகலின் ஒரு பட்டியலை காண்பீர்கள் அதில் மைஜியோ ஆப் முதலில் இடம்பெறும்.
4. பின்னர், மைஜியோ ஆப்பை திறக்க அதன் அருகில் உள்ள ஓப்பன் பட்டனை டாப் செய்யவும்.
5. பின்னர் நீங்கள் சைன்-இன் செய்ய வேண்டும் அதற்கு உங்கள் ஜியோ பயனர் பெயர், மற்றும் ஏற்கனவே அமைத்த கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.
6. இப்போது பயன்பாட்டின் ஹோம் ஸ்க்ரீனில், கீழே ரீசார்ஜ் என்ற ஆப்ஷனை டாப் செய்யவும். நீங்கள் வேறு எந்த திரையில் இருந்தாலும் மேல் இடது மூலையில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் மெனு பொத்தானை டாப் செய்து, தொடர்ந்து ஜியோ ப்ரைம் டாப் செய்யவும்.
7. இப்போது ரூ.99/- என்ற பொத்தானை டாப் செய்வதின் மூலம் நீங்கள் ஜியோ ப்ரைம் தேர்வை நிகழ்த்துவீர்கள்
8. இப்போது உங்களுக்கு விருப்பமான பேமண்ட் ஆப்ஷன்களை தேர்வு செய்து பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியது தான்.

மேலும் தமிழ் கிஸ்பாட் வழங்கும் இதுபோன்ற டூடோரியல்களுக்கு - தமிழ் கிஸ்பாட் டெக் டிப்ஸ் பிரிவிற்கு வருகை தரவும்.!

Best Mobiles in India

English summary
How to Recharge and Subscribe to Jio Prime Plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X