பிடிஎப் கோப்புகளை ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஐபோன், ஐபாட், ஐபாட் டச்)

Written By:

கோப்புகளை பிடிஎப் (PDF) ஆக ப்ரிண்ட் செய்து கொள்வது என்பது உண்மையிலேயே ஒரு பயனுள்ள அம்சமாகும். அப்படியாக, ப்ரிண்ட் செய்யப்படும் பிடிஎப்-களை உங்கள் ஐபோன், ஐபாட், ஐபாட் டச் சாதனத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல யோசனையாக இருக்க முடியும். அந்த செயல்முறை மிகவும் எளிது தான் ஆனால் நீங்கள் கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்ய தொடங்குவதற்கு முன்பாக, நீங்கள் ஒரு சில விடயங்களை சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.

பிடிஎப் கோப்புகளை ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஐபோன், ஐபாட், ஐபாட் டச்)

முதலில் நீங்கள் ப்ரிண்ட் செய்ய பயன்படுத்தும் ஆப் ப்ரிண்ட் ஆதரவு கொண்டு விளங்குகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். அப்படியான ஒரு பிரிண்ட் ஆதரவு வழங்கும் ஒரு ஆப் தான் ஏர்பிரிண்ட் (AirPrint). சரி உங்கள் ஆப்பிள் கருவிகளில் உள்ள பிடிஎப் கோப்புகளை ப்ரிண்ட் செய்ய பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

1. நீங்கள் பிரிண்ட் செய்ய வேண்டிய ஆவணம் அல்லது படத்தை திறக்கவும்.
2. பயன்பாட்டில் உள்ள ஷேர் பட்டனை டாப் செய்து பின் பிரிண்ட் டாப் செய்யவும்.
3. இப்போது ஒரு பாப் அப் தோன்றி உங்கள் பிரிண்டர் தேர்வை நிகழ்த்த சொல்லும். உடன் ஒரு பிரிண்ட் ப்ரிவியூ கீழே தோன்றும்.
4. ப்ரீவியூ பக்கத்தை நீங்கள் 3டி டச் அல்லது நீங்கள் ஸூம் செய்ய முயற்சிபது போல இரண்டு விரல்களால் விரித்து பார்க்கலாம்.
5. இப்போது கீழே இடது பக்கம் உள்ள ஷேர் பட்டனை டாப் செய்யவும்.
6. இப்போது நீங்கள் ஷேர் ஷீட் வழியாக உங்கள் விருப்பப்படி எந்த பயன்பாட்டிற்கு இதை பகிர்ந்து கொள்ள முடியும்.

அனைத்து வகையான ஐபோன் எஸ்எம்எஸ்-களையும் பிளாக் செய்வதெப்படி என்ற டூடோரியலை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

English summary
How to Print to PDF on an iPhone, iPad, or iPod touch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot