யூட்யூப் வீடியோக்கள் லோடு ஆகாமல் பார்க்க ஒரு 'ட்ரிக்' இருக்கு.!!

By Meganathan
|

யூட்யூபில் வீடியோக்களைப் பார்ப்பது பலருக்கும் பிடித்தமான விடயமாக இருக்கிறது. யூட்யூப் வீடியோக்கள் பார்க்கும் போது யாரையும் கோபமடையச் செய்யும் ஒன்று தான் ஸ்லோ இண்டர்நெட். திடீரென இண்டர்நெட் வேகம் குறையும் போது வீடியோ பஃபர் ஆகத் துவங்கும்.

அதிகச் சுவாரஸ்யமானவற்றைப் பார்க்கும் போது இடையூறு ஏற்பட்டால் யார் தான் கோபப்பட மாட்டார்கள். வீடியோ பஃபர் ஆகும் நேரம் அதிகரிக்கும் போது உடலில் இரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்.

இங்கு இதுபோன்ற தொல்லையின்றி யூட்யூப் வீடியோக்களைப் பஃபர் ஆகாமல் பார்க்க உதவும் ட்ரிக் வழங்கியுள்ளோம்.

எக்ஸ்டென்ஷன்

எக்ஸ்டென்ஷன்

முதலில் யூட்யூப் பயனர்கள் கூகுள் க்ரோம் அல்லது மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் பிரவுஸர்களில் SmartVideo எனும் எக்ஸ்டென்ஷனினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

கூடுதல் ஆப்ஷன்கள்

கூடுதல் ஆப்ஷன்கள்

யூட்யூபிற்கான SmartVideo எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு விருப்பமான வீடியோவினை பிளே செய்யுங்கள், இங்கு நிறைய ஆப்ஷன்கள் காணப்படும். மவுஸ் பாயின்ட்டரை வீடியோக்களின் பக்கம் கொண்டு செல்லும் போது சிறிய பாக்ஸ் ஒன்று தெரியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்ஷன்

ஆப்ஷன்

இங்கு Global Preferences எனும் ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இனி அங்குக் காணப்படும் Smart Buffer Box ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வீடியோ

வீடியோ

Smart Buffer Box தேர்வு செய்ததும் பஃபர் செய்ய வேண்டிய வீடியோவினை தேர்வு செய்யக் கோரும் ஆப்ஷன் தெரியும். இனி பஃபரிங் ஆகாமல் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

கணினி

கணினி

குறிப்பு: இந்த ட்ரிக் கணினிகளில் மட்டுமே வேலை செய்யும். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Play YouTube Videos Without Buffering

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X