ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின் பின்னணியில் யூடியூப் வீடியோ; அதெப்படி.?

தகுந்த நேரத்தில் செய்யப்படும் மேம்பாடுகள் மற்றும் தொடர்ந்து புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த அப்ளிகேஷன் விரும்பத்திற்குரிய ஒன்றாக எண்ணற்ற பயனர்களுக்கு திகழ்கிறது.

By GizBot Bureau
|

வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் இணையதளங்களுக்கான சக்தி வாய்ந்த பிளேயர்களில் ஒன்றாக யூடியூப் தொடர்ந்து விளங்குகிறது. இந்த துறையில் பல்வேறு தளங்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அவை தங்களுக்கான உறுதியான ஒரு நிலைப்பாட்டை பெற்று செயல்பட்டு வருகின்றன. தகுந்த நேரத்தில் செய்யப்படும் மேம்பாடுகள் மற்றும் தொடர்ந்து புதுமைகளை புகுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த அப்ளிகேஷன் விரும்பத்திற்குரிய ஒன்றாக எண்ணற்ற பயனர்களுக்கு திகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் இருக்கும் ஒரு சில குறைப்பாடுகளை தீர்க்கும் முயற்சியில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின் பின்னணியில் யூடியூப் வீடியோ; அதெப்படி.?

உங்கள் மொபைல்போனில் யூடியூப்பை பயன்படுத்தும் போது, ஒரு அறிவிப்பு வந்து அதை என்னவென்று பார்க்க விரும்பினால், யூடியூப் அப்ளிகேஷனை குறைக்க அல்லது மினிமைஸ் செய்ய முடிவதில்லை. இதற்கான ஒரே தீர்வாக ஒரு யூடியூப் ரெட் சந்தாவை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் இந்த வசதி கிடைப்பதில்லை என்பது ஒரு துக்கமான விஷயம் ஆகும்.

இந்நிலையில் உங்கள் வேலைகளுக்கு இடையில் பின்னணியில் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை எப்படி தொடர்ந்து இயக்கலாம் அல்லது அதை எப்படி குறைக்கலாம்? உங்கள் மொபைல்போனில் பின்னணியில் வீடியோக்களை எப்படி இயக்கலாம் என்பதை குறித்த வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.

குறிப்பு: கீழ்க்காணும் முறை சரியான முறையில் வேலை செய்யும் வகையில், உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நிலையான இன்டர்நெட் இணைப்பு தேவைப்படுவதோடு, ஃபோனில் கூகுள் க்ரோம் நிறுவப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு சாதனங்களின் வழிமுறைகள்:

1) உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் க்ரோம் பிரவுஸரை இயக்கவும்.

2) உங்கள் முகவரி பாரில் www.youtube.com முகவரியை உள்ளிடவும்.

3) உங்கள் பிரவுஸரின் மேற்பகுதியில் உள்ள வலதுமுனையில் கிடைமட்டமாக உள்ள மூன்று புள்ளிகளை தட்டி, அதில் உள்ள மெனு தேர்வுகளை அணுகவும்.

4) அதில் 'டெஸ்க்டாப் தளத்தை கோரு' என்பதை கிளிக் செய்து, அந்த பக்கம் ஏற்றம் செய்யும் வரை காத்திருக்கவும்.

5) இப்போது ஒரு பாப்-அப் வந்து, யூடியூப்பிடம் இருந்து அறிவிப்புகளைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கும். உங்கள் மொபைல்போனின் பின்னணியில் டியூடிப் வீடியோக்களை தொடர்ந்து இயங்க செய்ய, அதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

6) உங்களுக்கு ப்ளே செய்ய வேண்டிய வீடியோ தேர்ந்தெடுத்து, அதை செய்ய தொடங்கவும்.

7) பிரவுஸரை குறைத்துவிட்டு, மெனுவில் வரும் அறிவிப்பின் மூலம் அதை மீண்டும் ப்ளேபேக் செய்ய முடியும்.

ஐஓஎஸ் சாதனங்களின் வழிமுறைகள்:

1) உங்கள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் க்ரோம் பிரவுஸரை அணுகவும்.

2) உங்கள் முகவரி பாரில் www.youtube.com முகவரியை உள்ளிடவும்.

3) உங்கள் பிரவுஸரின் மேற்பகுதியின் வலதுமுனையில் கிடைமட்டமாக உள்ள மூன்று புள்ளிகள் மீது தட்டி, அதில் உள்ள மெனு தேர்வுகளை அணுகவும்.

4) அதில் 'டெஸ்க்டாப் தளத்தை கோரு' என்பதை கிளிக் செய்து, அந்த பக்கம் ஏற்றம் செய்யும் வரை காத்திருக்கவும்.

5) இப்போது ஒரு பாப்-அப் வந்து, யூடியூப்பிடம் இருந்து அறிவிப்புகளைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கும். உங்கள் மொபைல்போனின் பின்னணியில் டியூடிப் வீடியோக்களை தொடர்ந்து இயங்க செய்ய, அதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

6) உங்களுக்கு ப்ளே செய்ய வேண்டிய வீடியோ தேர்ந்தெடுத்து, அதை செய்ய தொடங்கவும்.

7) ஹோம் பொத்தானை தட்டுவதன் மூலம் பிரவுஸரில் இருந்து வெளியேறி விட்டு, ஐஓஎஸ் கன்ட்ரோல் சென்டரில் இருந்து ப்ளேபேக் மூலம் அதே வீடியோ திரும்ப இயக்க முடியும்.

பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு சாட் செய்து பண பரிமாற்றம் செய்வது எப்படி?பேடிஎம் இன்பாக்ஸ் கொண்டு சாட் செய்து பண பரிமாற்றம் செய்வது எப்படி?

Best Mobiles in India

English summary
Unfortunately, when using your phone to use YouTube, you have no option of minimizing your app when you get a notification and have to go check it out.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X