Home
How to

EPFO புது ரூல்ஸ்.. யாரெல்லாம் ATM, UPI-ல் PF பணம் எடுக்கலாம்? தகுதி, லிமிட்.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது, ஐபிஎப்ஓ ​​3.0-வின் கீழ் ஒரு பெரிய டிஜிட்டல் மேம்படுத்தலை அறிமுகப்படுத்த உள்ளது. இது விரைவில் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியை (Provident fund - PF) திரும்ப பெற அனுமதிக்க உள்ளது

இந்த புதிய வசதியானது, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இபிஎப் சந்தாதாரர்களுக்கு, பிஎப் அணுகலை வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதோடு இபிஎப்ஓ ​​3.0 ஆனது க்ளைம் செட்டில்மென்ட்டை எளிமையாக்கவும், ஆவண பணிகளை குறைக்கவும், சந்தாதாரர்களுக்கான ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தையும் மேம்படுத்தவும் உள்ளது.

EPFO புது ரூல்ஸ்.. யாரெல்லாம் ATM, UPI-ல் PF பணம் எடுக்கலாம்?

இபிஎப்ஓ 3.0 என்றால் என்ன? ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி சாத்தியமாகும்? யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி சாத்தியமாகும்? இபிஎப்ஓ 3.0 அமைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட பிஎப் பணம் எடுப்பதற்கான விதிகள் என்னென்ன? ஏடிஎம், யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதியை யார் பயன்படுத்தலாம்? இதோ பதில்கள்:

இபிஎப்ஓ 3.0 என்றால் என்ன? இபிஎப்ஓ 3.0 என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் புதிய டிஜிட்டல் மேம்படுத்தலாகும். இது பிஎப்தொடர்பான சேவைகளை நவீனமயமாக்குவதிலும், க்ளைம் செயலாக்கத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு பின்வருவனவற்றை அறிமுகப்படுத்த உள்ளது:

- ஏடிஎம் அடிப்படையிலான பிஎப் திரும்ப பெறுதல் (ATM-based PF withdrawal)
- யுபிஐ உடன் இணைக்கப்பட்ட பிஎப் பரிமாற்றம் மற்றும் திரும்ப பெறுதல் (UPI-linked PF transfer and withdrawal)
- அதிகரிக்கப்பட்ட ஆட்டோ-செட்டில்மென்ட் வரம்புகள் (Higher auto-settlement limits)
- எளிமையான திரும்ப பெறும் செயல்முறை (Simpler withdrawal process)
- பணியமர்த்தியவரின் ஒப்புதல்களை சார்ந்திருப்பதைக் குறைத்தல் (Reduced dependency on employer approvals)

இதன் கீழ் பிஎப் பணத்தை திரும்ப பெறும் வகைகளின் எண்ணிக்கை 13-இகே இருந்து மூன்றாக குறையக்கூடும், இது சந்தாதாரர்களுக்கான செயல்முறையை எளிதாக்கும். மேலும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், இபிஎப்ஓ ​​ஆனது ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட்டை (auto-settlement limit) ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தவும் கூடும்.

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி சாத்தியமாகும்? இபிஎப்ஓ 3.0-இன் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, வரவிருக்கும் பிஎஃப்-உடன் இணைக்கப்பட்ட ஏடிஎம் கார்டு வசதியாகும். சந்தாதாரர்கள் விரைவில் தங்களின் பிஎஃப் கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை பெறலாம்.

இந்தக் கார்டு ஒரு சாதாரண டெபிட் கார்டு போல செயல்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஏடிஎம்களில் இருந்து நேரடியாக பிஎஃப் பணத்தை எடுக்க பயனர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் இருப்பில் 50 சதவீதம் வரை ஏடிஎம் மூலம் எடுக்க அனுமதிக்கப்படலாம். ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க, பயனர்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:

- இபிஎப்ஓ வசதியுள்ள ஏடிஎம்-க்கு (EPFO-enabled ATM) செல்லவும்
- பிஎஃப் பணம் எடுக்கும் விருப்பத்தை (PF withdrawal option) தேர்ந்தெடுக்கவும்
- யுஏஎன் (UAN) விவரங்களை உள்ளிடவும்
- எடுக்கப்படும் தொகையை தேர்ந்தெடுக்கவும்
- ஒடிபி (OTP) அங்கீகாரத்தை முடிக்கவும்

யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி சாத்தியமாகும்? இபிஎப்ஓ 3.0 ஆனது யுபிஐ அடிப்படையிலான பிஎஃப் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. சந்தாதாரர்கள் விரைவில் இபிஎப்ஓ ​போர்டல் அல்லது மொபைல் ஆப்பில் லாக்-இன் செய்து, பணம் செலுத்தும் முறையாக யுபிஐ-ஐ தேர்ந்தெடுத்து, தங்களின் யுபிஐ ஐடியை உள்ளிட்டு, சரிபார்ப்பிற்கு பிறகு தங்களின் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக பிஎஃப் பணத்தை பெற முடியும். இந்த வசதி, வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பதை விரைவுபடுத்துவதோடு, ஆவண பணிகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎப்ஓ 3.0 அமைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட பிஎப் பணம் எடுப்பதற்கான விதிகள் என்னென்ன?
- சந்தாதாரர்கள் தங்கள் மொத்த பிஎப் இருப்பில் 75 சதவீதம் வரை எடுக்கலாம்
- குறைந்தபட்சம் 25 சதவீத இருப்பு கணக்கில் வைத்திருக்க வேண்டியிருக்கலாம்
- ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பு, பிஎப் மொத்த இருப்பில் 50 சதவீதமாக குறைக்கப்படலாம்
- ஆட்டோசெட்டில்மென்ட் வரம்பு ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கலாம்
- பெரும்பாலான பணம் எடுப்பதற்கு எம்பளாயரின் சான்றொப்பம் தேவைப்படாமல் இருக்கலாம்

ஏடிஎம், யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதியை யார் பயன்படுத்தலாம்? இபிஎப்ஓ ​​3.0 அம்சங்களை பெற, சந்தாதாரர்களுக்கு பின்வரும் தகுதிகள் தேவைப்படலாம்:

- செயலில் உள்ள யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்
- யுஏஎன் உடன் இணைக்கப்பட்ட ஆதார் (Aadhaar)
- இபிஎப்ஓ கணக்குடன் இணைக்கப்பட்ட பான் (PAN)
- புதுப்பிக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஐஎப்எஸ்சி (IFSC) கோட்
- ஒடிபி சரிபார்ப்புக்கு பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர்
- முழுமையான கேஒய்சி (KYC) விவரங்கள்

இபிஎப்ஓ 3.0-வின் அனைத்து அம்சங்களுக்குமான இறுதி செயல்பாட்டு வழிகாட்டுதல்களை இபிஎப்ஓ ​​இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே சரியான மற்றும் கூடுதல் விவரங்களுக்கு நாம் காத்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்கள் எல்லாமே இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டது ஆகும்.

Best Mobiles in India

English summary
How PF withdrawal through ATM and UPI could work Under EPFO 3 0 What Are The eligibility and limits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X