அமேசான் இந்தியாவின் யூபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவது எப்படி?

|

இ-காமர்ஸ் தொழில்நுட்ப ஜாம்பவானான அமேசான் நிறுவனம், தனது அப்ளிகேஷன் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு முறையாக, ஒன்றிணைந்த கட்டண இடைமுகத்தை (யூபிஐ) அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பணம் செலுத்தும் முறை அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது என்பதோடு, டெஸ்க்டாப் தளங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

அமேசான் இந்தியாவின் யூபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவது எப்படி?

பயனருக்கு ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கும் குறைந்த மதிப்பிலான பணப்பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தால், யூபிஐ மூலம் அதை செலுத்தலாம். அமேசான் இந்தியா இந்தச் சேவையை அளிப்பதன் மூலம் ஃபிளிப்கார்டு மற்றும் பேடிஎம் போன்றவற்றிற்கு போட்டியாளராக களமிறங்கி உள்ளது.

இனிமேல் அமேசான் அப்ளிகேஷன் மூலம் வாங்கும் வாடிக்கையாளருக்கு, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற முறைகளைத் தவிர, யூபிஐ ஐடி மூலம் பணம் செலுத்தும் ஒரு விருப்பத்தேர்வும் அளிக்கப்படும். இப்போதைக்கு மேற்கண்ட இந்த வசதி, ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அடுத்து வரும் புதுப்பிப்புகளில் ஐஓஎஸ் ஃபோன்களுக்கும் இது விரிவுப்படுத்தப்பட உள்ளது.

பணத்தைத் திரும்ப பெறுவதைப் பொறுத்த வரை, கார்டுகளில் பணம் செலுத்தி இருந்தால் நடைபெறும் செயல்பாட்டிற்கு ஒத்தாற் போல, யூபிஐ ஐடி உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்படும். இரு வங்கி கணக்குகளுக்கு இடையிலான உடனடி பணப் பரிமாற்றத்தை நிகழ்த்த உதவும் ஒரு பணம் செலுத்தும் முறையான இந்த ஒன்றிணைந்த கட்டண இடைமுகத்திற்கு (யூபிஐ) பயனாளியின் வங்கி தகவல்கள் எதையும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் இந்தியாவின் யூபிஐ-யைப் பயன்படுத்தி பணம் செலுத்துவது எப்படி?

படி 1: உங்கள் ஃபோனில் அமேசான் இந்தியா அப்ளிகேஷனின் நவீன பதிப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதை அறிந்து கொள்ள, பிளே ஸ்டோருக்குச் சென்று அமேசான் என்று தேடவும். இதில் புதுப்பிப்பு தேர்வு இருந்தால், அதன் மீது தட்டவும்.

படி 2: ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு குறைவான பொருளைத் தேர்ந்தெடுத்து, வாங்கு என்ற தேர்வின் மீது தட்டவும்.

படி 3: செக் அவுட் திரையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ உள்ளிட்ட பணம் செலுத்தும் முறைகள் இருப்பதைக் காணலாம்.

படி 4: உங்களுக்கான பணம் செலுத்தும் முறையாக, யூபிஐ-யைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: யூபிஐ-யைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் யூபிஐ ஐடி-யை அளிக்குமாறு கேட்கப்படும்.

படி 6: சரிபார்க்கப்பட்ட பிறகு, பிஹெச்ஐஎம் போன்ற பணம் செலுத்தும் அப்ளிகேஷனுக்கு, யூபிஐ கொண்ட மொபைல் அப்ளிகேஷன் உங்களை அழைத்து செல்லும்.

படி 7: உங்கள் பணம் செலுத்தப்பட்ட பிறகு, உங்கள் மொபைல் அப்ளிகேஷன் அல்லது பிரவுஸரின் ஆர்டரைக் காணலாம். மேலும், உங்கள் ஆர்டரை வெற்றிகரமான முடிக்கும் வகையில், 10 நிமிடங்களில் பணம் செலுத்துவதை முழுமைப்படுத்த வேண்டும்.

ஜியோபைபர் பீதி: மிரண்டுபோய் வோடாபோன் பார்த்த வேலை.!ஜியோபைபர் பீதி: மிரண்டுபோய் வோடாபோன் பார்த்த வேலை.!

Best Mobiles in India

English summary
Amazon has introduced Unified Payment Interface (UPI) as a mode of payment through its app. Check out here on how to pay using UPI on Amazon India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X