தானாக வீடியோக்களை இயக்கும் தளங்களை எப்படி முடக்குவது?

|

உங்கள் ஸ்பீக்கர் திடீரென சத்தமிட்டு அலறினால், எரிச்சலூட்டுவதாகவும் தடுமாற செய்வதாகவும் அமைகிறது. பொதுவாக, திரையில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்கள் மீது நீங்கள் தெரியாமல் கையில் உள்ள மவுஸ் தட்டிவிட்டால், திடீரென உயிர்பெறும் அந்த விளம்பரங்கள் அலற ஆரம்பித்து விடுகின்றன.

தானாக வீடியோக்களை இயக்கும் தளங்களை எப்படி முடக்குவது?

இன்னும் சில பக்கங்களை கீழ்நோக்கி உருட்டினாலே தானாக தோன்றும் வீடியோக்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இந்தக் கட்டுரையின் மூலம் அதற்கான வழியை அறிந்து கொள்ளலாம்.

க்ரோம்

க்ரோம்

சைலன்டு சைட் சவுண்டு பிளாக்கர் என்ற ஒரு விரிவாக்க கருவியை நிறுவுவதன் மூலம் எல்லா டேப்களையும் தானாக முடக்கிவிடும்.

இந்த விரிவாக்கத்தின் மீது ரைட்-கிளிக் செய்வதன் மூலம் பாப்-அப் ஆக தோன்றும் உள்ளடக்க மெனுவில் இருந்து தளங்களை, வைட்லிஸ்ட் அல்லது பிளேக்லிஸ்ட் என அமைத்து கொள்ள முடியும். மேலும் தற்காலிகமாக தளங்களின் முடக்கத்தை நீக்க, 'இந்த முறை மட்டும் அனுமதி கொடு' என்பதன் மீது கிளிக் செய்யலாம்.

ஒரு புதிய தளத்தை அணுகும் போது, கீழ்க்காணும் பாப்-அப் தோன்றி, தேர்வு செய்யும் வகையில் நான்கு தேர்வுகள் அளிக்கப்படும்:

a) எப்போதும் அனுமதி (வைட்லிஸ்ட் தளம்)

b) ஒரு முறை அனுமதி (மறுமுறை கேட்கவும்)

c) ஒரு முறை தவிர் (மறுமுறை கேட்கவும்)

d) எப்போதும் அனுமதிக்காதே (பிளேக்லிஸ்ட் தளம்)

இந்த கருவி பல்வேறு முறைகளில் அளிக்கப்படுகிறது:

a) வைட்லிஸ்ட் செய்யப்பட்டதை மட்டும் அனுமதி

b) பிளேக்லிஸ்ட் செய்யப்பட்டதை மட்டும் அனுமதி

c) எல்லா தளங்களையும் அமைதிப்படுத்து

d) எல்லா தளங்களையும் அனுமதி

பயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ் இணைப்பாக கிடைக்கும் 'வழக்கமாக எல்லா தளங்களையும் முடக்கு' மூலம் எல்லா தளங்களும் முடக்கப்படுகின்றன.

இந்த கருவியை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணமான அம்சத்தையும் இது முழுமையாக செய்கிறது. நீங்கள் விரும்பும் தளங்களை வைட்லிஸ்ட்டில் சேர்க்கும் விருப்பத்தேர்வு கூட உள்ளது.

உங்கள் விரிவாக்கத்தில் 'வழக்கமாக எல்லா தளங்களையும் முடக்கு' என்பதைத் தேர்ந்தெடுத்து, விருப்பத்தேர்வுகள் மீது கிளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு வைட்லிஸ்ட் செய்யப்பட்ட தளங்களுக்குள் உள்நுழையலாம்.

சஃபாரி

சஃபாரி

நீங்கள் ஓஎஸ் எக்ஸ் இஐ கேப்டன் மூலம் சாதனத்தை இயக்குவதாக இருந்தால், அதிலேயே இருக்கும் ஒரு அம்சமாக இந்த விருப்பத்தேர்வு அளிக்கப்படுகிறது. ஒரு புதிய டேப் திறக்கும் போது, முகவரி பாரில் உள்ள ப்ளூ ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எல்லா தளங்களும் தானாக முடக்கப்படுகின்றன.

அதன்மீது மீண்டும் கிளிக் செய்வதன் மூலம் எல்லா தளங்களின் மீதான முடக்கத்தையும் நீக்க முடியும்.

பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் அசத்தும் ஹானர் 9 லைட்.!பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் அசத்தும் ஹானர் 9 லைட்.!

ஓப்ரா

ஓப்ரா

திறக்கப்பட்ட ஒரு டேப் மீது ரைட்-கிளிக் செய்து, அதில் தோன்றும் 'மற்ற டேப்களை முடக்கு' என்பதில் கிளிக் செய்தால், திறக்கப்பட்ட எல்லா டேப்களின் சத்தத்ததையும் முடக்க முடியும்.

குறிப்பிட்ட டேப்களை தனிப்பட்ட முறையில் முடக்கப்பட்ட நிலையில் இருந்து நீக்க முடியும் அல்லது ஒரு டேப்-பிற்கு சென்று, ரைட்-கிளிக் செய்து மற்ற டேப்களை முடக்கப்பட்ட நிலையில் இருந்து நீக்கு என்பதன் மூலம் கிளிக் செய்வதன் எல்லா டேப்களையும் ஒருங்கே முடக்கத்தை நீக்க முடியும்.

இந்த அம்சத்தை பயன்படுத்தி முடக்கப்பட்ட பிறகு, திறக்கப்படும் எல்லா டேப்களும் முடக்கப்படாத நிலையிலேயே காணப்படும் என்பதால் இதை ஒரு சிறந்த அம்சம் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறை மற்றொரு புதிய டேப் திறக்கும் போதும், மேற்கூறிய செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியுள்ளது.

மேலும் ஓப்ராவை ஒவ்வொரு முறை திரும்ப திறக்கும் போதும், மேற்கூறிய செயல்பாட்டை திரும்ப செய்ய வேண்டும்.

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

விண்டோஸ் 10 பயனர்களுக்கு டேப்களை முடக்குவதற்கு எட்ஜில் எந்தொரு விருப்பத்தேர்வும் கிடையாது. அதே நேரத்தில், மேற்கண்ட அம்சத்தை அடைய 'இயர் ட்ரம்பெட்' என்ற ஒரு இலவச அப்ளிகேஷன் உதவுகிறது.

இந்த அப்ளிகேஷனைத் திறந்தால் உடனே சிஸ்டம் பட்டியல் ஒன்று திறக்கப்படும். அதில் 'இயர் ட்ரம்பெட்' ஐகானை கிளிக் செய்தால் உங்கள் எல்லா ப்ரோகிராம்களின் ஒலி கட்டுப்பாடுகளின் விவரத்தை பெறலாம். இங்கு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உட்பட எந்தொரு அப்ளிகேஷனின் ஒலியையும் கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

கீழே உள்ள எந்தொரு டேப்களையும் தேர்வுசெய்வதோ அல்லது தேர்வுசெய்யாமல் இருப்பதற்கோ உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. அதில் எதையும் நீங்கள் கவனிக்க வேண்டிய தேவையும் இல்லை.

Best Mobiles in India

English summary
Silent Site Sound Blocker is an extension tool, once installed, will mute all tabs automatically.You can whitelist or blacklist sites from the context menu that will pop up once you right-click the extension. You can also click on 'Allow this time only' to temporarily unmute sites.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X