இதெல்லாம் தெரிந்தால், இனி நீங்கள் கூகுள் செய்யவே மாட்டீர்கள்.!
வியாபார போட்டி இல்லாத நிலையினால் தான் கூகுள் உங்கள் தகவல்களை பாதுக்காக்கும், மோசமான சூழ்நிலை என்று வந்துவிட்டால், நிச்சயமாக கூகுள் கவலை கொள்ளாது.
ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் சரி, ஒரு குறிப்பிட்ட விலாசம் எங்கு இருக்கிறதென்று தேட வேண்டுமென்றாலும் சரி அல்லது எந்தவொரு சந்தேகமாக இருந்தாலும் சரி நாம் அனைவருமே நாடும் ஒரே ஆசான் - கூகுள் தேடுபொறி தான்.
கூகுளை நாம் பயன்படுத்தாத ஒரு நாளே இல்லை எனலாம். இண்டர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கிய கூகுள் மறுகையில் துரதிர்ஷ்டவசமாக, பயனர்களாகிய நமக்கே பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய திகிலூட்டும் காரியங்களை செய்கிறதென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?
கூகுளை கண்டு நாம் அச்சம் கொள்ள வேண்டிய சிக்கல்களும், சமாச்சாரங்களும் உள்ளன. அதையெல்லாம் நீங்கள் அறிந்தால் அடுத்தமுறை கூகுள் செய்யவே தயங்குவீர்கள்.

ஐபி முகவரி மற்றும் பிற தனிப்பட்ட தகவல்
ஆதி முதல் அந்தம் வரையிலான எல்லா வகையான கேள்விகளுக்கும் கூகுளிடம் பதில்கள் உண்டு. அதாவது உங்களையும் பற்றியும் எங்களையும் பற்றியும் கூட கூகுளுக்கு தெரியும். உலகின் மாபெரும் சர்வர்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் சர்வர்கள், உங்கள் ஐபி முகவரி மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களையும் கூட மிகவும் அதிர்ச்சியான அளவில் சேமித்துக் கொண்டே தான் இருக்கிறது.

மோசமான சூழ்நிலை என்று வந்துவிட்டால்
எந்த விதமான சிக்கல்களும், பிரச்சனைகளும் உண்டாகாத வரையில் தான், கூகுள் உங்கள் தகவல்களை சேமிக்கும். மிகவும் அச்சுறுத்தலான வியாபார போட்டி இல்லாத நிலையினால் தான் கூகுள் உங்கள் தகவல்களை பாதுக்காக்கும், மோசமான சூழ்நிலை என்று வந்துவிட்டால் உங்களது பாதுக்காப்பான தகவல்களை பற்றியெல்லாம் நிச்சயமாக கூகுள் கவலை கொள்ளாது.

பணம் சம்பாதிக்க வேண்டும்
நம்மில் பெரும்பாலானோர்கள் நினைப்பது போல கூகுள் ஒன்றும் ஒரு சேவை நிறுவனம் அல்ல. இன்னும் சொல்லப்போனால் வியாபார ரீதியில் கூகுள் பிற நிறுவனங்களை போன்றதே அல்ல, அதற்கும் மேல். முழுக்க முழுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டது, கூகுள் நிறுவனம். தேடுபொறியாக இருப்பினும் அதன் 97 சதவிகித வருமானம் கூகுள் விளம்பரத்தில் இருந்து வருவதே இதற்கு சாட்சி.

மொபைல் தரவு சேகரிப்பு
கூகுள் வரைபடங்களானது (Google Maps) அதன் லைவ் டிராப்பிக்கிற்காக (LiveTraffic) உங்கள் மொபைலில் இருந்து அனானமஸ் தரவுகளை (Anonymous cell phone data) பயன்படுத்திக்கொள்கிறது. அதாவது பெயர் அறியப்படாத மொபைல் தரவு சேகரிப்புளை கூகுள் நிகழ்த்துகிறது. இதை தனிமனிதன் செய்யும் பட்சத்தில் சட்டப்படி குற்றமாகும், கூகுள் செய்வதினால் சேவை மூலமான வியாபாரமாகும்.

போலி நகரங்கள்
இருப்பதிலேயே மோசமான விடயம் இது தான். கூகுள் மேப்ஸில் சில போலி நகரங்கள் உள்ளதாக அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழும். இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் வெறுமனே எழ வாய்ப்பில்லை. ஆக, நம்மால் மிகவும் நம்பப்படும் கூகுள் மேப்ஸில் எதற்காக போலியான நகரங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றது. அது காட்சிப்படுத்தலா அல்லது மறைக்கப்படுகிறதா என்பதில் எந்த தெளியும் இல்லை.

அழிக்க வழி இல்லையா.?
சரி கூகுள் நம்மைப்பற்றி சேகரிக்கும் தகவல்களையெல்லாம் நாம் ஒன்றுமே செய்ய இயலாதா.?? அதை அணுகவோ அல்லது அழிக்கவோ வழி இல்லையா.? என்று கேட்டால் - ஓரளவு முடியும் என்பதே பதில். லொகேஷன் ஹிஸ்ட்ரி, கூகுள் சர்ச், கூகுள் அனாலட்டிக்ஸ், கூகுள் அட்ஸ், கூகுள் டேட்டா ஆகியவைகளுக்குள், கூகுளுக்கு எதிராக சில ஆதிக்கங்களை உங்களால் கட்டமைக்க முடியும். சரி அதை நிகழ்த்துவது எப்படி.?

டெலிட் ஆல் ஹிஸ்ட்ரி
நீங்கள் கூகுள் மேப்களை பயன்படுத்தும் போதும் சரி, பயன்படுத்தாத போதும் சரி - கூகுள் உங்களை ட்ராக் செய்கின்றது. இதை அழிக்க இந்த தளத்திற்கு சென்று "டெலிட் ஆல் ஹிஸ்ட்ரி" என்ற பட்டனை க்ளிக் செய்வதின் மூலம் நீங்கள் உங்களது தகவல்களை அழிக்கலாம்.

கூகுள் சர்ச்
கூகுளை பொறுத்தமட்டில் உங்களின் ஸ்மார்ட்போனில் அல்லது கம்ப்யூட்டரில் உங்களின் ப்ரவுஸர் சர்ச் ஹிஸ்ட்ரியை மட்டும் அழிப்பது எந்த பயனும் தராது, இந்த லின்க் சென்று செட்டிங்ஸ் (Settings) சென்று ரிமூவ் ஐடம்ஸ் (Remove items) சென்று ஹிஸ்ட்ரியை ஆரம்பத்தில் இருந்து (beginning of time) அழித்து விடுங்கள்.

கூகுள் அட்ஸ்
முன்பு கூறியபடி கூகுளின் முக்கிய லாபமாக விளம்பரங்கள் தான் திகழ்கின்றது. உங்களது தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்கின்றது என்று வெளிப்படையாகவே கூறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் விளம்பரதாரர்களிடம் போகாமல் இருக்க இந்த லின்க் சென்று ஆப்ட் அவுட் செட்டிங்ஸ் (Opt out settings) ஆப்ஷனை தேர்வு செய்து ஆப்ட் அவுட் இன்டர்நெட் பேஸ்டு ஆட்ஸ் ஆன் கூகுள் (Opt out of interest-based ads on Google) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

கூகுள் டேட்டா
சில இணையதள சேவைகளானது, உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட் கொண்டு லாக்-இன் செய்யும்படி கேட்கும். இப்படியாகவே நீங்கள் உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்த, எத்தனை தளங்களில் உங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி இருக்கின்றது என்று உங்களுக்கே தெரியாது. உங்களது மின்னஞ்சல் முகவரி மூலம் நீங்கள் பதிவு செய்த இணையதளங்களின் பதிவை பற்றி தெரிந்து கொள்ள இந்த லின்கை க்ளிக் செய்யுங்ள்.


Click it and Unblock the Notifications