உங்கள் கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி?

இந்த வசதியால் யூடியூபில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு விளையாட்டின் ஸ்க்ரீன்பிளேவை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யலாம்.

|

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 தனது முதலாவது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியுள்ளது. ஓராண்டு முடிவடைந்ததை அடுத்து விண்டோஸ் 10ல் மேலும் சில புதிய சிறப்பு வசதிகளையும் மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் பயனாளிகளுக்கு மேலும் உதவும் வகையிலும் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டவைகளில் ஃபோகஸ் அசிஸ்ட், அருகில் உள்ளவர்களுடன் ஷேர் செய்தல், டைம்லைன் உள்பட ஒருசில வசதிகள் மிகுந்த பயனுடையவை.

உங்கள் கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி?

இந்த வசதிகளில் அதிக நபர்களை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஒரு கம்ப்யூட்டருக்கு உங்கள் ஸ்மார்ட்போனை வயர்லெஸ் உதவியுடன் ஒரு கண்ணாடி போன்று பயன்படுத்தலாம் என்பதுதான்.


இந்த வசதியை இன்னும் பலர் ரெகுலராக பயன்படுத்தவில்லை. ஆனால் இந்த வசதி மிகவும் உபயோகமான ஒரு வசதி ஆகும். உதாரணமாக நீங்கள் யூடியூபில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு விளையாட்டின் ஸ்க்ரீன்பிளேவை அப்லோடு செய்ய விரும்பினால் இந்த வசதியை பயன்படுத்து உங்கள் விண்டோஸ் கம்ப்யூட்டரில் ரிகார்ட் செய்து கொள்ளலாம். அதேபோல் தொழிலதிபர்கள் இந்த வசதியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு பிரசண்டேஷனை கம்ப்யூட்டரில் மாற்றி அனைவருக்கும் காண்பிக்கலாம். தற்போது ஸ்மார்ட்போனை, ஒரு கம்ப்யூட்டரின் கண்ணாடி போல் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்

உங்கள் கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி?


முதலில் இந்த வசதியை பெற என்னென்ன தேவை என்பதை பார்ப்போம்

உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 இயங்குவதளத்தின் புதிய அப்டேட்டில் இருக்கின்றதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். இரண்டாவதாக உங்கள் கம்ப்யூடரும், ஸ்மார்ட்போனும் ஒரே இண்டர்நெட் வைபை இணைப்பில் இருக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் கம்ப்யூட்டருக்கு பதில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவராக இருந்தால் ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட்போனும் ஒரே வைபை நெட்வொர்க்கில் இருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி?


இப்போது இந்த மிர்ரர் வசதியை எப்படி செயல்படுத்துவது என்பதை பார்ப்போம்

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைக்க வேண்டும்

2. நோட்டிபிகேஷன் செண்டரை சோதனை செய்து கொண்டு பின்னர் குவிக் செண்டரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளுங்கள்

3. கனெக்ட் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்

4. புரொஜக்டிங் ஆன் தி பிசி என்பதை கிளிக் செய்யுங்கள்

5. முதல் டயலாக் பாக்ஸில் உள்ள 'அவைலபிள் எவிரிவேர்' என்பதை க்ளிக் செய்யுங்கள்

6. விண்டோவை மூடிவிடுங்கள்

7. மீண்டும் கனெக்ட் செய்து மேலே உள்ள இரண்டு மற்றும் மூன்றாவது ஸ்டெப்புகளை மீண்டும் செய்யுங்கள்

8. உங்கள் ஸ்மார்ட்போனில் 'குவிக் செட்டிங் சென்று அதில் உள்ள 'கேஸ்ட்' என்ற ஆப்சனை டேப் செய்யுங்கள்

9. அதில் உள்ள கம்ப்யூட்டரின் பெயர் வரும். அதை செலக்ட் செய்யுங்கள்

10. கனெக்சன் கிடைக்கும் வரை சிறிது நேரம் காத்திருங்கள்

உங்கள் கம்ப்யூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைப்பது எப்படி?

ஒருசில வினாடிகளில் உங்கள் கம்ப்யூட்டர், உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுவிடும். இப்போது நீங்கள் ஸ்மார்ட்போனில் என்ன செய்தாலும் அது உங்கள் கம்ப்யூட்டரின் திரையில் தெரியும். அதன் பின்னர் நீங்கள் பிரசண்டேஷனை அளிக்கவோ, நீங்கள் விளையாடும் கேமை ரிகார்ட் செய்யவோ அல்லது எந்த விஷயம் வேண்டுமானாலும் இப்போது செய்யலாம்

Best Mobiles in India

English summary
How to mirror your smartphone on a PC: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X